நாங்கள் மந்தைகளல்ல, உமரை நேசிக்கும் முஸ்லிம்கள்..!
(A.M.Mahir Rashad)
கட்டுப்படுதல் அவசியம் – அதே நேரம்
விமர்சிப்பதும் அவசியமே!
காரணம்..
நாங்கள் மந்தைகளல்ல - உமரை
நேசிக்கும் முஸ்லிம்கள்!
ஊறுகாயாய் மாறிவிட்டது
இலங்கை முஸ்லிம் சமூகமா அல்லது
தலைகளா ???
தேவை என்றால் தொட்டுக் கொள்வதற்கும்
இல்லை என்றால் தூக்கி எறிவதற்கும்
நாம் என்ன பகடைக் காய்களா ???
காய்கள் கனியாகுமாம்! ஆனால்
கிளைகள் வெட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றதே!!!
கழித்தல் நின்றுவிடுமோ ! இல்லை
கூட்டுதல் நின்றுவிடுமோ ! இரண்டும்
நிற்கப்போவதில்லை,
இதுதான் யதார்த்தம், மாறானதேனில்
கண்களைத் திறந்து கொண்டு
கனவு காண்கின்றீர்கள்.
மரம் சாய்ந்து விடும் நிலை வந்தால் !
முட்டுக் கொடுப்பது முஸ்லிம் சமூகமே
முட்டாள் தலைகளல்ல !
முடிவுகளை நியாயப்படுத்த
சமாதானங்கள் புறப்பட்டு விட்டன !
அதுவல்ல இது இதுதான் அது !
அல்லது
அதுதான் இது இதுவல்ல அது !
என்று கூற.
இன்னுமொரு ஜெனீவா வருகின்றது !!!
இதற்கும் முட்டுக் கொடுப்போமா ? அதில்
இலங்கையின்
இனவாத இருப்பையும் – முஸ்லிம்களின்
நிச்சயமற்ற இருப்பையும்
மூடி மறைப்போமா ???
சந்தர்ப்பங்களை சாகடிப்வர்களே!
நீங்கள் உணரவில்லையா ? அன்றேல்
அறியவில்லையா ?
முஸ்லிம்களை நோக்கி
முதன் முதலாய் தூக்கிய ஆயுதம்
அவர்களுக்கு எதிராகவே திரும்புவதை?
பொது 'பல்லா' சேனாவும்,அதற்கு
விசில் ஊதுபவர்களும்
உணர்ந்துகொள்ளவும்
மக்கள் தெரிந்துகொள்ளவும் உள்ள
சந்தர்ப்பத்தை? -
சாகடித்து விட்டீர்களே ...
இதற்குத்தான் சொல்வதோ...
நீந்தத் தெரியாதவனை துளையிட்ட
படகில் பயணம் அனுப்புவதென்று!
இங்கு -
படகை தயாரித்தவர் யாரோ?
வழி அனுப்புவது யாரோ?
பயணம் செய்பவர் யாரோ?
இது உங்கள் பதிலுக்கு.
விட்டுக்கொடுப்பா ? விவேகமா ?
எதிர்காலம் பதில் சொல்லும் – அது
விவேகமற்ற விட்டுக்கொடுப்பு.
தலைகளே விட்டுக்கொடுங்கள்
எமது உரிமைகளையல்ல – உங்கள் கதிரைகளை
காத்திரமானவர்கள்
காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஜம்யத்துல் உலமா சபை அநியாயங்காரர்களுக்கும், பொய்யர்களுக்கும் சென்ற ஆண்டு ஜெனிவா சென்று உண்மைக்கு புறமாக செய்யற்பட்டார்கள்.ஆகவே அல்லாஹ் தஆலா இவர்களுக்கு கொடுத்த தண்டனை தான் இந்த ஹலால் பிரச்ச்சினை. என்பது எனது தனிப்பட்ட கருத்து
ReplyDeleteமுன் போன ஜெனீவாவில் மந்தைகளாய் இருந்து,
ReplyDeleteஎம்முரிமைகளையும் கொள்கைகளையும் உதிர்த்து
அதில் மேய்ந்து திரிந்து ஏப்பமிடும் மந்தைகளை நம்பச்சொலிகிறீரா?
MASHAA ALLAH, great poem. all are included on that.
ReplyDeleteDear brothers, Let us mind our words.
ReplyDeleteIt is not the time to criticize and make dissension among the community. We can criticize the decisions, but we are not really in the field to what our leaders face.
I can quote the hudaibiyya agreement to compare the decision taken on this halal issue.We should be patient and obey our leaders. Allah is with whom the people of patience.It is the time to strength our unity as one ummah.
இந்தப்பிரச்சினையில் ஜம்இய்யதுல் உலமாவின் நிலைப்பாட்டை ஆதரிக்கிரேன். தூர திருஷ்டி உள்ளமுடிவு. எனினும் சராசரி மனிதர்களுக்கு புரிந்துகொள்ள முடியாமல் போாகலாம்.
ReplyDeleteDear Farshad,
ReplyDeleteI agree with you, and happy to see the way of communication,
Dear friends,
It is not the time for violent communication, we should be concern when use each words, it can create new problem in this tension situation
If compare us with them, and react it will be give negative result for us
Please think the context situation, and share your feed backs,
I really respect your attitude and feeling
please tolerate for Allah and Ummath
M.S.M.Naseer
நன்றி நண்பரே!
ReplyDeleteசிறந்த கவியாக வடித்திருக்கிறீர்கள்… என் எண்ணங்களையும் சேர்த்து…