Header Ads



சமுதாயப் பாதுகாப்பில் ஜம்மியத்துல் உலமாவின் பங்களிப்பு



(Ibnu Nayeem)

இன்றைய ஜம்மியத்துல்  உலமாவின் அறிவிப்புடன் சமூகத்தின் பாதுகாப்பு, ஜம்மியத்துல்  உலமாவின் இருப்பு போன்ற விடயங்களுக்கு எதிராக ஒரு சிறு கூட்டம் முதல் வெற்றி பெற்றுள்ள நிலையில் நமது சமூக இருப்பு சம்பந்தமான சில விடயங்களை அலசலாம் என நினைக்கிறேன். இங்கு பொறுமை மட்டும் தான் தீர்வென்றால் அது எப்படிப்பட்ட பொறுமை? நமது கோழைத்தனத்தை, உயிர்ப் பயத்தை  நியாயப்படுத்தும் பொறுமையா? அல்லது வீரங்கள் இருந்தும், தனது உயிரை சமூகத்துக்காக, இஸ்லாத்திற்காக இறைவனிடம் எழுதிக் கொடுத்துவிட்டு, அதன் பின் சமூக நலனுக்காக காக்கும் பொறுமையா. அது என்ன பொறுமை என்ற முடிவுக்கு வர வேண்டும். சமூகத்துக்கு எதிராக திட்டமிட்ட முறையில் இவ்வாறு அச்சறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் நாமும், ஜம்மியத்துல் உலமாவும் செய்ய வேண்டிய கடமைகளை குறிப்பிடலாம் என நினைக்கிறேன். அதன் பின்னர்; இந்தப் பொறுமை பற்றி நான் கூறுவதை விட அதை உங்களின் பக்கம் விட்டு விடுவது உசிதம் என நினைக்கிறேன். இஸ்திரமான ஜம்மியத்துல் உலமாவின் தேவை பற்றி இனவாதிகளின் இனவாதச் செயற்பாடுகளின்போது  நாமெல்லோரும்  உணர்ந்திருப்போம். ஜம்மியத்துல் உலமாவைத் திட்டுபவர்களும் செயற்றிறன் பற்றி விமர்சித்தாலும் அவ்வியக்கத்தை எதிர்க்கவில்லை என்பதே உண்மை.

கப்பலில் இருந்துகொண்டு துளையிட்டு மீன்பிடிக்கும் கூட்டத்துக்கு முன்னால் நாம் எவ்வாறு இவ்வமைப்பை பலப்படுத்துவது என்பது பற்றி பார்ப்போம். 
1. ஜம்மியத்துல் உலமாவை பலவீனமாக்கும் வேலைகளை நாமும் செய்யக் கூடாது. ஜம்மியத்துல் உலமாவும் தமது நிலையை தாழ்த்திக் கொள்ளவும் கூடாது. 

2. ஜமீயதுல்  உலமா மக்களின் முழு ஆதரவையும் பெற்று ("பயத்தை " மைய்யமாக வைத்து காய் நகர்த்தாமல்) தைரியமாக இந்த நாசகாரக் குழுக்களை எதிர் கொள்ள வேண்டும்.
3. இந்த சமூகத்தை இஸ்லாமிய அச்சில் வார்த்தெடுக்க ஜம்மியத்துல் உலமா திட்டங்களை வகுக்க வேண்டும். அதற்கு ஏற்றால்ப்போல சமூகத்தில் உள்ள அமைப்புக்களையும், ஜமாத்களையும், அரசியல் கட்சிகளையும் ஒன்று சேர்க்க வேண்டும். உலக மாயை, சினிமா, பாட்டு, கூத்து கும்மாளம், சீதனம், தொழாமை, ஏனைய கலாச்சாரங்களை கோப்பி அடித்தல்.... இப்படி நீளும் நமது சமூகத்தின் மார்க்கத்துகேதிரான செயல் பாடுகளில் இருந்து நமது சமூகத்தை மீட்டெடுக்க  வேண்டும். அல்லாஹ்வுக்கு  தூரமாகிக்  கொண்டு அல்லாஹ்வின் உதவியை   எதிர்பார்ப்பது  என்பது சாத்தியமற்ற  ஒன்று. இங்கு ஒரு விடயத்தை நான் குறிப்பிட்டாக வேண்டும். நமது உலமாக்கள் மக்களை குர்ஆன் விளங்காது, ஹதீஸ் விளங்காது என்று இஸ்லாத்தை விட்டு தூரமாக்கும் வேலையை செய்வதை தவிர்க்க வேண்டும்.    இப்படிச் செய்ததன் விளைவு அவர்களுக்கு சினிமா மற்றும் இஸ்லாத்துக்கு எதிரான எல்லாமே சமீபமாகி, நன்றாக விளங்கி அதன் பக்கம் சென்று விட்டனர். அவர்களை இஸ்லாத்தை விட்டும் தூரமாக்காதீர்கள்.  25% விளங்கா விட்டால் 75 % ஐ படிக்கச் செய்யுங்கள். இஸ்லாம் என்பது வணக்கங்களை மாத்திரம் கொண்ட மதம் அல்ல. அது வாழ்க்கை வழி முறை. இஸ்லாத்தை வாழ வேண்டும் என்பதை சிறு பிராயத்திலிருந்தே பழக்குங்கள்.
4. நம்மை அழிப்பதற்காக இலங்கையின் எதிரி நாடுகளிடம் பணத்தையும், திட்டங்களையும் பெற்று இந்த கோமாளிக் கூட்டம் இவ்வளவு வளர்ந்து விட்டார்கள் என்றால், அல்லாஹ்வையும் அவன் தூதரையும் பின்பற்றும் சமூகம் எவ்வளவு வேகமாக, விவேகமாக, திட்டமிட்ட முறையில் தமது இனத்தைக் காக்க செயல்ப்பட வேண்டும்? 
5. நமது வருங்கால சந்ததிகளுக்கு எல்லோரையும் தாண்டிய நமது  பூர்வீகம்  பற்றிய அறிவை ஊட்ட வேண்டும். ஏனென்றால் நமது வரலாறு , பூர்வீகம் பற்றி இனவாதிகள் ஆய்ந்ததன் விளைவு, இஸ்லாமியப் புத்தகம் தொட்டு நமது  பூர்வீகம் பற்றிய ஆவணங்களை அழிக்க முற்படுகின்றனர்.  இதற்கான காரணம் நம்மைப் போன்று இவர்களும் நமது பூர்வீகம் பற்றி ஆய்வு செய்திருப்பர். அதன் மூலம் நமது இலங்கைப் பூர்வீகம் அவர்களையும் தாண்டியது என்ற உண்மையை எட்டி இருப்பர். அதை மறைக்கவே இவ்வாறு நமது ஆய்வுகளை, வரலாறுகளை பொய் என்றும், அவர்கள் எழுதி வைத்துள்ள வரலாரயே தப்பென்பதுமாக உளறித் திரிகிறார்கள். நமது பூர்வீகம் சம்பந்தமான ஆய்வுக்கு ஜமீயதுல் உலமா குறைந்த பட்சம் இப்போதாவது  ஆக்கபூவமான முன்னெடுப்புக்களை செய்ய வேண்டும். இதை அவர்கள் பக்கம் மாத்திரம் சாட்டி விடாது நாமும் நமது பங்களிப்பை செய்ய வேண்டும். இதுவே நமது எதிர்கால சந்ததிகள் இந்நாட்டில் தலை நிமிர்ந்து நடக்க நாம் செய்யும் உபகாரம். 

அல்லாஹ்வை அஞ்சி, உலக மோகங்களை ஓரம் கட்டி, மரண பயத்துக்கு முற்றுப் புள்ளி வைத்து உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும். இப்படியே விட்டுக் கொடுத்துக் கொண்டு போனால் கடைசியில் நம் பெண்களின் உடைகளை அவர்களின் அரை நிர்வாண உடைகளைப் போன்று ஆக்கும் மட்டும் எதிர்ப்பார்கள். இவ்வாறே ஒன்றொன்றாய் கை வைத்து நாம் "அவர்களாய்" மாறும் மட்டும் நம்மை நோண்டுவார்கள். அதற்காக வன்முறையிலோ, போராட்டத்துக்கோ இறங்கச் சொல்லவில்லை. ஆனால் நமது உரிமையை காத்துக் கொள்ள நாம் போராடாவிட்டால், ஜனநாயக வழியில் கேட்காவிட்டால்  நமது இளம் சமுதாயம் எதிர்காலத்தில் நாடு நாடாய் ஓடித்திரிய நாம் காரணமாவோம். எனவே ஜமீயதுல் உலமாவை பலப்படுத்துவதன் மூலம் அவர்களை முன்னிலைப் படுத்துவதன் மூலமும் நமது உரிமைகள் பறிபோவதை தடுப்போம். அது ஒரு பலம் மிக்க, மக்கள் செல்வாக்குள்ள  அமைப்பாய் எதிரிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் தோன்றும் வரை  நம்மால் இதை செய்ய முடியாது. 
என் அன்பின் இஸ்லாமிய நெஞ்சங்களே!!

எதிரிகளின், அவர்களை ஆட்டுவிப்பவர்களின், அவர்களுக்கு நிதி மற்றும் திட்டங்களை வழங்குபவர்களின்   நோக்கம் முஸ்லிம்களை கிளர்ந்தெழ வைத்து, அவர்களுக்கு "அடிப்படை வாத" , "தீவிரவாத" முத்திரையை குத்தி , உலகளாவிய அமெரிக்க கற்பனை இயக்கமான "அல் குவைதா" வுடன் சம்பந்தப்படுத்துவதும். அதன் பின்னர் இதை சாக்காகக் வைத்து முஸ்லிம்களை கருவறுப்பதும் ஆகும். இதை நாம் எப்பொழுதும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். நாம் ஆவேசப்பட்டு, உணர்ச்சி வசப்பட்டு கிளர்ந்தெழுவதும் அல்லது மரண பயத்தாலோ, உலக மோகத்தாலோ பின்வாங்குவதும்  நமது இருப்பை கேள்விக்குறியாக்கி எதிரிகளை பலமாக்குமே தவிர வேறு எந்தபிரயோசனத்தையும் ஏற்படுத்தாது.  விவேகத்துடனான முன்னெடுப்புகளும் மரண பயத்தை மைய்யமாக வைக்காத பொறுமையுமே நம்மை, நமது இருப்பை  காக்க உதவும்.  

ஆனால் நமது சமூகம் தாக்கப் படும் போது, பள்ளிவாயல்கள் உடைக்கப் படும் போது, நமது பெண்களுக்கு அச்சுறுத்தல் வரும்போது நாம் கை கட்டி, வாய் பொத்தி மௌனிகளாய் இருப்போமானால் நம்மை  விஞ்சிய கோழைகள் யாராக இருக்க முடியும்? நாம் வலிந்து தாக்கக் கூடாது. ஆனால் நம்மில் அத்துமீறும் போது  நமக்கு உள்ள உரிமையை கையிலெடுத்து நமது உயிர் போனாலும் நமது பள்ளிவாயல்களை, நமது சமூகத்தைக் காக வேண்டும்.  தாக்க விடக் கூடாது. நான்கு மையித்தைத் தாண்டித் தான் பள்ளியை உடைக்க வேண்டும் என்ற அச்சம் அவர்களுக்கு வர வேண்டும். அப்பொழுது "அவர்கள் தான் தீவிர வாதிகள் "  நாமல்ல.           

5 comments:

  1. I stand with you brother. We need to strengthen the common leadership, while we eradicate the black side of the Umma. Keeping all the dirty shit of our lives and keeping patient, waiting for Allah's help is ridiculous.

    This situation we have faced today is a good eye opener for the muslim Umma at a whole.

    Lets work to converge the thinking, desires and aspirations of all the muslims towards a single goal, thus the Jannah. Then we can stand strong like a steel wall against the evils and devils.

    "Innallaha Yuhibbonalladeena Yu Kaathiloona Fee Sabeelillahi Ka Annahum Bunyanum Marsooz"

    ReplyDelete
  2. காலத்தின் தேவையுணர்ந்து ,ஆழமாகவும் ,சமூகக்கவலையோடும்,ஆவன செய்யப்பட வேண்டும் எனும் நோக்கோடு ,எழுதப்பட்ட அழகான கட்டுரை.எழுதியவருக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.எனினும் கட்டுரையாளர்அழுத்தமாகக் கூறியிருக்க வேண்டிய விடயங்களில் ஒன்று;முஸ்லிம் அரசியல் வாதிகள் சீர் செய்யப்பட வேண்டும், அல்ல்து சீர் சிருந்த வேண்டும்.பதவியாசை,பொருளாதார மோகம் போன்றவற்றுக்காக முஸ்லிம் சமூகத்தை காட்டிகொடுக்கும் அல்லது நம்பிய மக்களை, சாக்கடை அரசியலில் விற்று வியாபரம் செய்யும் போலித்தரகர்களாக இருக்கும் அயோக்கியத்தனங்களை விட்டு ,இக்லாசோடு -உளப்பரிசுத்ததோடு செயலாற்ற முன் வர வேண்டும்.முஸ்லிம் உம்மாவின் விடிவுக்காக, தூய இஸ்லாத்தின் உயர்வுக்காக,தனது அறிவு ஆற்றல் செல்வாக்கு ஆகியவற்றை பயன்படுத்த முன்வர வேண்டும்.இது காலத்தின் கட்டாயத்தேவையென்பதையும்,இவ்வாறு செய்வது இபாதத்ஆகும் எனெனில் நீங்கள் ஒவ்வொருவரும் மேய்ப்பாளர்கள் ,உங்கள் மேய்ப்பைப்பற்றி நாளை மறுமையிலே விசாரணை செய்யப்படுவீர்கள் என்றுநபி (ஸல்)கூறினார்கள்.இவ்வாறு செயற்படாத அரசியல் வாதிகளை மக்கள் நிராகரிக்க வேண்டும்.முஸ்லிம் சமூகம் முழுவதும் ஆழ்ந்த துயரத்துடன் இருக்கும் இத்தறுனத்தில் ,மாலையும் கழுத்துமாக ,ஊடகங்களில் போஸ் குடுத்து
    சுய;லாபம் தேடும் அரசியல் வாதிகளையும்பார்க்கிறோம்.
    கட்டுரையாளரும் சரி சமூக ஆர்வலர்களும் சரி குறிப்பிட மறந்த அல்லது மறுத்த ஒரு விடயம்;முஸ்லிம்களுக்கு மத்தியில் காணப்படும் பிரதேச வாதமாகும்.நங்கள் கொழும்பு முஸ்லிம்கள்-கண்டிமுஸ்லிம்கள்--நாங்கள்மேல் மாகாணத்தவர்கள் ,ஆகையால் நாங்கள் உயர்ந்தவர்கள்.சிங்களம் பேசுபவர்கள்,பிரதான நகரங்களிலே வழ்பவர்கள்.அவன் மட்டக்களப்பான் .இவன் கல்முனையான் .அம்பாரையன். கிழக்கு முஸ்லிம்கள் ,வடக்கு முஸ்லிம்கள் ,வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் பாவிகள்.அதனால்தான்அவர்களுக்கு சூறாவளி த்சுனாமி போன்ற இயற்கை அழிவுகள் வருகின்றன,அவர்கள் நாட்டார்கள்,நாகரீகம் தெரியாதவர்கள்.மோடையர்கள்.இவ்வறு பிரித்து ,பிரிந்து பிரிவினை வாதம் பேசி வாழ்ந்தோம். வாழ்கிறோம்.இவ்வாறு சில அரசியல் வாதிகள் தமது சுய லாபங்களுக்காக சமூக மக்கால்ளைப்பிரித்து இன்பங்கண்டார்கள் .இனியும் இவ்வாறு நாம் வாழ்ந்தால் முழு சமூகமுமே பாதாழத்தில் விழும் நிலை வரும்.நீங்கள் (ஒற்றுமை எனும்)இறைகையிற்றை பலமாகப்பற்றி பிடித்து கொள்ளுங்கள் வீணே தர்க்கித்து பிரிந்து விடாதீர்கள்.(03-103)

    மேலும் முஸ்லிம் சமூகமே முஸ்லிம் சமூகத்தைக்காட்டிக்கொடுக்கின்ற அற்ப செயற்பாடுகளைச்செகின்றனர்.இயக்க வெறி அல்லது சமூக ரீத்யான உளவியல்தாக்கமுள்ளவர்கள் இதைச்செய்து கொண்டிருக்கிறார்கள்.இவ்வாறான இன்னோரன்ன விடயங்களிலிருந்து முஸ்லிம் சமூகம் விடு படவில்லையெனில் அழிவு நிச்சயம். அல்லாஹ் தாஆலா எம்மைக்காப்பானாக.

    ReplyDelete
  3. காலத்தின் தேவையுணர்ந்து ,ஆழமாகவும் ,சமூகக்கவலையோடும்,ஆவன செய்யப்பட வேண்டும் எனும் நோக்கோடு ,எழுதப்பட்ட அழகான கட்டுரை.எழுதியவருக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.எனினும் கட்டுரையாளர்அழுத்தமாகக் கூறியிருக்க வேண்டிய விடயங்களில் ஒன்று;முஸ்லிம் அரசியல் வாதிகள் சீர் செய்யப்பட வேண்டும், அல்ல்து சீர் சிருந்த வேண்டும்.பதவியாசை,பொருளாதார மோகம் போன்றவற்றுக்காக முஸ்லிம் சமூகத்தை காட்டிகொடுக்கும் அல்லது நம்பிய மக்களை, சாக்கடை அரசியலில் விற்று வியாபரம் செய்யும் போலித்தரகர்களாக இருக்கும் அயோக்கியத்தனங்களை விட்டு ,இக்லாசோடு -உளப்பரிசுத்ததோடு செயலாற்ற முன் வர வேண்டும்.முஸ்லிம் உம்மாவின் விடிவுக்காக, தூய இஸ்லாத்தின் உயர்வுக்காக,தனது அறிவு ஆற்றல் செல்வாக்கு ஆகியவற்றை பயன்படுத்த முன்வர வேண்டும்.இது காலத்தின் கட்டாயத்தேவையென்பதையும்,இவ்வாறு செய்வது இபாதத்ஆகும் எனெனில் நீங்கள் ஒவ்வொருவரும் மேய்ப்பாளர்கள் ,உங்கள் மேய்ப்பைப்பற்றி நாளை மறுமையிலே விசாரணை செய்யப்படுவீர்கள் என்றுநபி (ஸல்)கூறினார்கள்.இவ்வாறு செயற்படாத அரசியல் வாதிகளை மக்கள் நிராகரிக்க வேண்டும்.முஸ்லிம் சமூகம் முழுவதும் ஆழ்ந்த துயரத்துடன் இருக்கும் இத்தறுனத்தில் ,மாலையும் கழுத்துமாக ,ஊடகங்களில் போஸ் குடுத்து
    சுய;லாபம் தேடும் அரசியல் வாதிகளையும்பார்க்கிறோம்.
    கட்டுரையாளரும் சரி சமூக ஆர்வலர்களும் சரி குறிப்பிட மறந்த அல்லது மறுத்த ஒரு விடயம்;முஸ்லிம்களுக்கு மத்தியில் காணப்படும் பிரதேச வாதமாகும்.நங்கள் கொழும்பு முஸ்லிம்கள்-கண்டிமுஸ்லிம்கள்--நாங்கள்மேல் மாகாணத்தவர்கள் ,ஆகையால் நாங்கள் உயர்ந்தவர்கள்.சிங்களம் பேசுபவர்கள்,பிரதான நகரங்களிலே வழ்பவர்கள்.அவன் மட்டக்களப்பான் .இவன் கல்முனையான் .அம்பாரையன். கிழக்கு முஸ்லிம்கள் ,வடக்கு முஸ்லிம்கள் ,வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் பாவிகள்.அதனால்தான்அவர்களுக்கு சூறாவளி த்சுனாமி போன்ற இயற்கை அழிவுகள் வருகின்றன,அவர்கள் நாட்டார்கள்,நாகரீகம் தெரியாதவர்கள்.மோடையர்கள்.இவ்வறு பிரித்து ,பிரிந்து பிரிவினை வாதம் பேசி வாழ்ந்தோம். வாழ்கிறோம்.இவ்வாறு சில அரசியல் வாதிகள் தமது சுய லாபங்களுக்காக சமூக மக்கால்ளைப்பிரித்து இன்பங்கண்டார்கள் .இனியும் இவ்வாறு நாம் வாழ்ந்தால் முழு சமூகமுமே பாதாழத்தில் விழும் நிலை வரும்.நீங்கள் (ஒற்றுமை எனும்)இறைகையிற்றை பலமாகப்பற்றி பிடித்து கொள்ளுங்கள் வீணே தர்க்கித்து பிரிந்து விடாதீர்கள்.(03-103)

    மேலும் முஸ்லிம் சமூகமே முஸ்லிம் சமூகத்தைக்காட்டிக்கொடுக்கின்ற அற்ப செயற்பாடுகளைச்செகின்றனர்.இயக்க வெறி அல்லது சமூக ரீத்யான உளவியல்தாக்கமுள்ளவர்கள் இதைச்செய்து கொண்டிருக்கிறார்கள்.இவ்வாறான இன்னோரன்ன விடயங்களிலிருந்து முஸ்லிம் சமூகம் விடு படவில்லையெனில் அழிவு நிச்சயம். அல்லாஹ் தாஆலா எம்மைக்காப்பானாக.

    ReplyDelete
  4. insha allah let us follow as you say.

    ReplyDelete

Powered by Blogger.