'மர்ஹும் அஷ்ரப் ஆயுதங்கள் கொணடுவந்ததாக கூறுவது பொய்யானது'
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் இரண்டு கொள்கலன்களில் ஆயுதங்களை இரகசியமாக அம்பாறைக்கு கொண்டு வந்ததாக பொதுபல சேனா செயலாளர் பாணந்துறை பகிரங்க பொதுக் கூட்டமொன்றில் தெரிவித்த பொய்யான குற்றச்சாட்டு இலங்கை வரலாற்றில் முஸ்லிம்களின் மகோன்னத அரசியல் தலைவராகத் திகழ்ந்த அன்னாரை அவமதிக்கும் செயலென கண்டனம் தெரிவித்துள்ள அக் கட்சியின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் எந்தவித அடிப்படையோ ஆதாரமோ அற்ற பொய்களையும், அவதூறுகளையும் பெரும்பான்மை மக்கள் மத்தியில் பரப்பி, அவர்களை தவறாக வழிநடாத்த எத்தனிப்பதை அவ்வமைப்பு கைவிட வேண்டும் என்றும் விசனம் தெரிவித்தார்.
பிரஸ்தாப அமைப்பினர், குறிப்பாக அதன் செயலாளர் அண்மைக் காலமாக இஸ்லாத்தின் மீதும், இலங்கை முஸ்லிம்கள் மீதும் வீணான பழிகளையும், அபாண்டங்களையும் பகிரங்கமாகச் சுமத்தி வருவது கவலைக்கும், கண்டனத்திற்கும் உரியது.
எமது மறைந்த தலைவர், முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் நன்கு மதிக்கப்படுபவர். தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராட முன்வந்த காலகட்டத்தில், முஸ்லிம் இளைஞர்களும் அவ்வாறு ஆயுதம் ஏந்தக் கூடிய இக்கட்டான சூழ்நிலை உருவாகக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்ட பொழுது, அவர்களை அதிலிருந்து திசை திருப்பி உரிமைகளை ஜனநாயக ரீதியாக பெறுவதற்கு வாய்ப்பாக அவர் உருவாக்கிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைந்தது என்பதை சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்
அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின்
ஊடக ஆலோசகர்

ஏய் லூசு மாக்கா ...... கட்சிய இழுக்கும்போது மட்டும்தான் குத்துகிறதோ ....... இதையும்விட பெரிய ஹலால் பிரச்சினையில் மௌனமாக இருந்துவிட்டு இப்பொழுது எதற்கு இப்படியொரு கொக்கரிப்பு ....
ReplyDeleteஊடக ஆலோசாகர் அவர்களே!
ReplyDeleteஉங்கள் அமைச்சர் ஏன் இன்னும் மவுன விரதம் கடைபிடிக்கிறார் கலால் விடயத்தில். கொஞ்சம் கேட்டு முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கு தெரியப்படுத்துங்கள். அடுத்த தலைவரை தெரிவு செய்யவேண்டும்.
முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினா்களுக்கு அன்பான வேண்டுகோள்....
ReplyDeleteபொது பல சேனாவின் செயல்பாடுகள்....
ஆட்ட்க்கடிச்சி மாட்டக்கடிச்சி கடைசியில மனிசன கடிக்கிற கதமாதித்தான் இருக்கு இந்த பொது பல சேனாவின் செயல்பாடுகள்.
நீங்க!
முஸ்லிம் காங்கிரஸ் அரசில் பிரதிநிதிகளாகிய நீங்கள் எங்களிடம் இவைகளினை சொல்ல வெக்கப்படனும். உங்களால் இவைகளினை தடுக்க முடியாவிட்டால் அரசாங்கத்துடன் ஒட்டுண்ணியாய் இருப்பதனை விடுத்து ஆரோக்கியமான நடவடிக்கையினை புதிய தலைமைகளுடன் இணைந்து மேற்கொள்ளுங்கள்.
பாராளுமன்றத்தில் ஊமை
மாகாணசபையிலும் ஊமை
உள்ளூராட்சி மன்றங்களிலும் அதேநிலை
இப்ப என்ன ஊடக அறிக்கை.
பாராளுமன்றத்தில் பேசுங்க
அமைச்சரவை கூட்டங்களில் பேசுங்க
மாகாண சபையில் பிரேரணை முன்வைங்க
தானா எல்லாம் அகழும்....
முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினா்களான தாங்களிடம் முஸ்லிம் சமூகம் பாரிய பொறுப்பினை தந்திருக்கின்றன miss use பன்னிடாதிங்கள்.
முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் தலைமைகளுக்கு அன்பான வேண்டுகோள்....
ReplyDeleteபொது பல சேனாவின் செயல்பாடுகள்....
ஆட்ட்க்கடிச்சி மாட்டக்கடிச்சி கடைசியில மனிசன கடிக்கிற கதமாதித்தான் இருக்கு இந்த பொது பல சேனாவின் செயல்பாடுகள்.
முஸ்லிம் சமூகத்தினை ஜனநாயக வழியில் செலுத்திய முஸ்லிம் சமூகத்தினுடைய தேசிய தலைவரைக் கூட விடவில்லை இந்த இனவாத அமைப்பு.
உங்களது அசமந்தப் போக்கும் அலட்சியமுமே இவற்றின் நீடிப்புக்கு காரணமாகக் கூட இருந்திருக்கலாம்.
பொது பல சேனாவின் இனவெறிக் கருத்து....
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் இரண்டு கொள்கலன்களில் ஆயுதங்களை இரகசியமாக அம்பாறைக்கு கொண்டு வந்ததாக பொதுபல சேனா செயலாளர் பாணந்துறை பகிரங்க பொதுக் கூட்டமொன்றில் ஆதாரமற்ற பொய்யான தகவலினை வெளியிட்டு முழு மக்களினதும் மனங்களினை புண்படுத்தியுள்ளனா். இதற்கு முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் தலைமைகள் ஆரோக்கியமான நடவடிக்கைகளினை உடன் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடின் எதிர்காலத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
வெற்று ஊடக அறிக்கைகளில் மாத்திரம் காலத்தினை வீணடிக்காமல் செயற்பாட்டு அரசியலினை முன்னெடுக்க வேண்டும்.
அண்மையில் இது குறித்து முஸ்லிம் காங்கிரசின் முக்கிய பிரமுகா் வெளியிட்ட அறிக்கையினை பாக்கக்கிடைத்தது......
நீங்க!
முஸ்லிம் காங்கிரஸ் அரசில் பிரதிநிதிகளாகிய நீங்கள் எங்களிடம் இவைகளினை சொல்ல வெக்கப்படனும். உங்களால் இவைகளினை தடுக்க முடியாவிட்டால் அரசாங்கத்துடன் ஒட்டுண்ணியாய் இருப்பதனை விடுத்து ஆரோக்கியமான நடவடிக்கையினை புதிய தலைமைகளுடன் இணைந்து மேற்கொள்ளுங்கள்.
பாராளுமன்றத்தில் ஊமை
மாகாணசபையிலும் ஊமை
உள்ளூராட்சி மன்றங்களிலும் அதேநிலை
இப்ப என்ன ஊடக அறிக்கை.
பாராளுமன்றத்தில் பேசுங்க
அமைச்சரவை கூட்டங்களில் பேசுங்க
மாகாண சபையில் பிரேரணை முன்வைங்க
தானா எல்லாம் அகழும்....
முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினா்களான தாங்களிடம் முஸ்லிம் சமூகம் பாரிய பொறுப்பினை தந்திருக்கின்றன miss use பன்னிடாதிங்கள்.