Header Ads



மலாலாவின் வாழ்க்கை புத்தகமாகிறது - 45 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம்



பாகிஸ்தானில் பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காக பிரசாரம் செய்த மலாலா என்ற 15 வயது மாணவியை தலிபான்கள் சுட்டனர். இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவருக்கு இங்கிலாந்து அரசு சிகிச்சை அளித்தது.

தற்போது பூரண குணமடைந்துள்ள அவர் இம்மாதம் 18-ம் தேதி முதல் இங்கிலாந்து பிர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் என்ற பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் வாழ்க்கை வரலாறு புத்தகமாக வெளிவர உள்ளது. 'நான் மலாலா' என்ற பெயரில் இந்த புத்தகத்தை விரைவில் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கான உரிமையைப் பெற இங்கிலாந்தை சேர்ந்த வெயிடென்பெல்ட் அண்ட் நிகோல்சன் பதிப்பகம் மலாலாவிடம் 45 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுகுறித்து மலாலா கூறியதாவது:-

இந்த புத்தகம் உலக மக்கள் அனைவரையும் சென்றடையும் என்று நம்புகிறேன். ஒரு குழந்தை கல்வி கற்பதில் உள்ள சிரமங்களை இது விவரிக்கும். இந்த புத்தகம் என்னுடைய கதை மட்டும் இல்லை, கல்வி பெற இயலாத 61 மில்லியன் குழந்தைகளின் வாழ்க்கை.

இவ்வாறு அவர் கூறினார். 

No comments

Powered by Blogger.