இலவசமாக 35 நாட்கள் தங்கலாம்..!
பின்லாந்து நாட்டின் தலைநகர் ஹெல்சின்கி-யில் 'ஓட்டல் பின்' என்ற பெயரில் ஆடம்பர தங்கும்விடுதி உள்ளது. இந்த ஓட்டலில் இதுவரை பலமுறை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போதும் கூட சிறிய அளவிலான பராமரிப்பு பணிகள் இங்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தங்கள் ஓட்டலில் 35 நாட்கள் இலவசமாக தங்குவதற்கான விண்ணப்பங்களை வரவேற்பதாக ஓட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர் சவுகரியத்திற்காக அவ்வப்போது மாற்றங்களை செய்துக்கொண்டிருக்காமல், ஒட்டுமொத்த வசதிகளையும் இப்போதே மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த முடிவை எடுத்துள்ளதாக இந்த ஓட்டலின் மேலாளர் டியோ டிக்கா கூறியுள்ளார்.
35 நாட்கள் இந்த ஓட்டலில் இலவசமாக தங்கி, நிறை - குறைகளை பற்றி ஓட்டலின் 'பிளாக்' கில் எழுதுவதற்கான விண்ணப்பங்களை ஏப்ரல் மாத இறுதிக்குள் அனுப்ப வேண்டும். மே மாதம் 17ம் தேதியில் இருந்து (தூங்கும்) வேலையில் சேரலாம் என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
விளம்பரம் வெளியான சில நாட்களில் இதுவரை 600க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வரப்பெற்றதாகவும், அடுத்த மாதத்திற்குள் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவியக்கூடும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Post a Comment