ஈராக்கில் குண்டுவெடிப்பு - 165 பேர் காயம்
ஈராக்கில் நேற்று நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில் 12 பேர் பலியாகினர். 165 பேர் படுகாயமடைந்தனர். கிர்டுக் மாவட்டத்தில் உள்ள டிபிஸ் நகர் போலீஸ் நிலையத்தின் மீது வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தால் மோதியதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் நிகழ்ந்த போது அருகாமையில் இருந்த குர்திஷ் பெண்கள் பள்ளியில் இருந்து மாணவிகள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். போலீஸ் நிலையத்தின் மீது மோதிய வாகனம் வெடித்துச் சிதறியதில் மாணவிகள் உள்பட சுமார் 165 பேர் படுகாயமடைந்தனர்.
பாக்தாத்தில் நேற்று நிகழ்ந்த பல்வேறு வன்முறை சம்பவங்களில் சுற்றுச்சூழல் மந்திரியின் கார் டிரைவர், சுகாதார அமைச்சக ஊழியர், வர்த்தக அமைச்சக ஊழியர், மாகாண கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், 2 போலீஸ்காரர்கள் உள்பட 9 பேர் பலியாகினர்.

Post a Comment