IPC இஸ்லாமிய வழிகாட்ட நிலைய ஏற்பாட்டில் குவைத்தில் மரதன் ஓட்டப்போட்டி
(Mohammed Naleem)
IPC அதாவது இஸ்லாமிய வழிகாட்டி நிலையத்தினால் குவைத் நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு 23-02-2013 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு மரதன் ஓட்டப்போட்டி நடாத்தப்பட்டது. இப்போட்டியில் பல நாட்டவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக இலங்கை, இந்தியா, பிலிப்பீன், வங்காளதேசம் நாடுகளை சேர்ந்தவர்கள் அதிகமாக பங்குபற்றினர். முதலாம் இரண்டாம் இடங்களை பிளிப்பீனைச் சேர்ந்தவர்களும் மூன்றாம் இடத்தை இலங்கை - புத்தளத்தைச் சிறந்த முஹம்மது இர்பான் தட்டிக்கொண்டனர். இர்பான் மூன்றாம் பரிசாக 70 குவைத் தீனார்களையும், பதக்கம் மற்றும் பரிசுக்கோப்பையும் பெற்று நம் இலங்கை நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.


Post a Comment