முஸ்லிம்களுக்கு எதிராகத் திரும்பியுள்ள பேரினவாத பேய்..!
(தம்பி)
உங்கள் வீட்டு சமையல் பாத்திரங்கள் அழுக்கடைந்து விட்டன. அவற்றினைச் சுத்தப்படுத்த வேண்டும் என்கிறீர்கள். அப்படியென்றால் நீங்கள் செய்ய வேண்டிய காரியம் என்ன? உங்கள் சமையலறைப் பாத்திரங்களையெல்லாம் நன்றாக தேய்த்துக் கழுவ வேண்டும். அப்படிச் செய்தால் பாத்திரங்களெல்லாம் பளபளத்து மின்னும். இதை விடுத்து, உங்கள் பாத்திரங்களைச் சுத்தப்படுத்துகிறேன் என்று சொல்லிக் கொண்டு, பக்கத்து வீட்டுக்காரரின் பாத்திரங்களில் கைபோட்டுக் கொண்டிருந்தீர்களாயின் உங்கள் 'சித்த சுவாதீனத்தில் சுகக் கேடு' என்றுதான் நினைக்கத் தோன்றும். அப்படிச் செய்கின்ற உங்களை – மற்றவர்கள் ஒரு 'மாதிரி'யாக பார்க்கத் தொடங்கி விடுவார்கள்.
'சிலோன் ருடே' என்கிற ஆங்கில ஊடகத்துக்கு பொது பல சேனா அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் நேர்காணலொன்றினை வழங்கியிருந்தார். அதில், தமது அமைப்பின் நோக்கம் செயற்பாடுகள் குறித்தெல்லாம் தேரர் விரிவாகப் பேசியுள்ளார். பௌத்த சாசனத்தைச் சுத்திகரிப்பதே தமது நோக்கம் என்று அந்த நேர்காணலின் ஓர் இடத்தில் அவர் கூறுகின்றார். அவரின் கூற்றுப்படி, சுத்திகரிக்கப்பட வேண்டியது அல்லது சுத்தம் செய்ய வேண்டியது பௌத்த சாசனமாகும். ஆனால், தேரரின் தலைமையிலான பொது பல சேனா அமைப்பினர் பௌத்த சாசனத்தைச் சுத்திகரிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு, இஸ்லாமிய மக்களின் சமய கலாசார விடயங்களில் கை போட்டுக் கொண்டு வருகின்றமையானது, அவர்களை அடுத்த சமூகத்தவர்கள் ஒரு 'மாதிரி'யாகப் பார்க்கும் நிலையினை உருவாக்கி விட்டுள்ளது.
பொது பல சேனா என்கிற அமைப்பினை ஒரு வெற்றுக் குழுவாக நாம் கணக்கிட முடியாது. ஏற்கனவே நமது கட்டுரைகளில் தெரிவித்திருந்ததைப்போல், இந்த அமைப்பின் பின்னால், மிகச் சக்திவாய்ந்த கரங்கள் ஒழிந்திருக்கின்றன. இந்த அமைப்பானது – அதிகாரம் மிக்கவர்களினால் ஆசீர்வதிக்கப்பட்டது என்பதை மிக எளிதாக நிறுவ முடியும்.
பொது பல சேனாவை வைத்துக் கொண்டு 'பிள்ளையைக் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடும்' கூத்தினை, அரசாங்கம் மிகவும் லாவகமாகச் செய்து வருகிறது. பொது பல சேனாவையும் அதன் இனவாதச் செயற்பாடுகளையும் ஒழித்துக் கட்ட வேண்டுமென்று அரசாங்கம் விரும்புமாயின் அதற்கு ஓர் இரவுப் பொழுதின் இரண்டு சாமங்களுக்கு இடைப்பட்தொரு பொழுது போதுமானதாகும். ஆனால், பொது பல சேனா - இல்லாமல் போவதை அரசாங்கம் விரும்பவில்லை என்பது புரிகிறது.
மட்டுமன்றி, இலங்கையில் எந்தவொரு பள்ளிவாசலும் தாக்குதலுக்குள்ளாகவில்லை என்று அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவரே நாடாளுமன்றத்தில் தெரிவித்ததன் மூலம் பொது பல சேனாவின் அருவருப்பான செயல்களுக்கு அரசு வெள்ளையடிக்க முயற்சித்துள்ளது. பள்ளிவாசல்கள் தாக்கப்படவில்லை என்று சொல்வதனூடாக, பள்ளிவாசல்களைத் தாக்கிய குற்றச் செயலைப் புரிந்தவர்களையும் சேர்த்து - அரசாங்கம் காப்பாற்றுவதற்கு முயற்சிக்கின்றமை வெட்கக் கேடானதாகும்.
ஆனால், எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கடந்த செவ்வாய்கிழமையன்று நாடாளுமன்றத்தில் வைத்து தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசல்கள் சிலவற்றின் விபரங்களை வெளியிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
குருணாகல் மற்றும் ஹிரியால ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற பள்ளவாசல் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க இதன்போது விபரித்துள்ளார். பிக்குகளைக் கொண்ட குழுவினர் 'இங்குறுவத்த' முஸ்லிம் பள்ளிவாசலுக்குள் புகுந்து பிரித் ஓதியதோடு, அந்தப் பள்ளிவாசலை மூடிவிடுமாறும் அச்சுறுத்தியுள்ளனர். மேலும் அம்பன்பொல முஸ்லிம் பள்ளிவாசலில் இருந்த புனித குர்ஆன்களும் வெளியில் வீசி எறியப்பட்டுள்ளன. இவை தொடர்பில் 2012 ஜூலை மாதம் 21ஆம் திகதிய சுடர்ஒளி பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக் காட்டியுள்ளார்.
அத்துடன், மக்குல்வௌயில் உள்ள முஸ்லிம்களின் வணக்கஸ்தலம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் எம்.ரி. பதூர்தீன் என்பவர் 2012 ஏப்ரல் 14ஆம் திகதி ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளமை பற்றியும் ரணில் விக்ரமசிங்க இதன்போது தகவல் வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் மொத்தம் 18 முஸ்லிம் உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் ஏராளமானோர் அமைச்சர்கள். ஆனாலும், பொது பல சேனா என்கின்ற அமைப்பின் முஸ்லிம் விரோத செயற்பாடுகளுக்கு எதிராக இவர்களில் எவரும் சொரணையுடன் செயற்பட்டதாகத் தெரியவில்லை.
'ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து' வந்த பொது பல சேனா - இப்போது முஸ்லிம்களின் அடிப்படைக் கடமைகளிலெல்லாம் கை வைக்கத் தொடங்கியுள்ளது. முதலில் ஹலால் முத்திரைக்கெதிரான போராட்டத்தைக் கையிலெடுத்தார்கள். பிறகு, முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணியக் கூடாது என்றார்கள். இப்போது, மக்கா சென்று வருகின்றவர்கள்தான் இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தினைப் பரப்புவதாகக் கூறுகின்றார்கள்.
ஹலால் விவகாரம் தொடர்பில் தற்போது எழுந்துள்ள சர்ச்சையானது தேவையற்றதொரு விடயம் என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். 'ஏதோ ஓர் இடத்திலிருந்து யாரோ ஒருவர் ஹலால் விடயத்தினைப் பெரிதாக்கி விடப் பார்க்கிறார்கள்' என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், துரதிஷ்டவசமாக அந்த 'யாரோ ஒருவரை' மட்டும் அவராலும், அவர் சார்ந்த அரசாலும் 'கண்டு பிடிக்க' முடியவில்லை என்பது வியப்புக்குரிய விடயம்தான். ஹலால் விடயத்தில் அரசாங்கம் இரட்டை முகத்தைக் கொண்டுள்ளது. பொது பல சேனாவுக்கு ஒரு முகத்தினையும், முஸ்லிம்களுக்கு இன்னொரு முகத்தினையும் அரசாங்கம் காண்பித்து வருகின்றது. ஆனாலும் அதன் நிஜ முகம் எது என்று - உலகு அறியும்.
பொது பல சேனாவுக்கு பாதுகாப்பு அமைச்சில் இருந்து நிதி வழங்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தமை பற்றி கடந்த வாரக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். இப்போது, இன்னும் பல விடயங்கள் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளன.
பொது பல சேனாவுக்கு நோர்வே போன்ற மேற்கத்திய நாடுகள் உதவிகளை வழங்கி வருவதாக ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொது பல சேனாவின் தலைமையகத்துக்கு - இலக்கைக்கான நோர்வே தூதுவர் ரகசியமான முறையில் போய் வந்த கதையினை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க போட்டுடைத்துள்ளார். கடந்த 19 ஆம் திகதி ஐ.தே.கட்சியின் குழுக் கூட்டம் இடம்பெற்ற போது - ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், பொது பல சேனாவின் உறுப்பினர்கள் நோர்வே நாட்டுக்கு அழைக்கப்பட்டு, அங்கு கலந்துரையாடல்கள் நிகழ்ந்ததாகவும், பொது பல சேனாவுக்கு நிதியுதவிகள் வழங்கப்பட்டதாகவும் ரணில் இதன்போது விபரித்துள்ளார். ஆங்கில இணையத்தளங்களில் இது தொடர்பான செய்திகள் வெளிவந்துள்ளன.
இதேவேளை, பொது பல சேனா அமைப்பு 'ஹலாலை ஒழித்துக்கட்டும்' நடவடிக்கையில் ஒருபுறம் ஈடுபட்டுக் கொண்டிருக்க, அதற்கு உசார் ஏற்றும் வகையில் நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் பன்றிக் கறிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையினை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நீக்கியுள்ளார். வியாழக்கிழமையன்று இடம்பெற்ற கட்சிகளின் குழுக் கூட்டத்தின்போதே, நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் பன்றிக் கறி பரிமாறுதவற்கான அனுமதி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பன்றிக் கறி தேவைப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொஞ்சம் நேர காலத்துடன் சொல்லி வைக்க வேண்டும்ளூ அவ்வளவுதான். எதிர்க்கட்சி பிரதம கொரடாவும் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன் அமரதுங்க உள்ளிட்ட சிலர் - நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் தமக்கு பன்றிக்கறி வேண்டும் என்று அண்மைக் காலமாக அடம் பிடித்து வந்தனர். ஆனால், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காட்டிய எதிர்ப்பின் காரணமாக, அதற்கு சபாநாயகர் முன்னர் சம்மதிக்கவில்லை. இருந்தபோதும், வியாழக்கிழமையன்று சபாநாயகர் பன்றிக்கறிக்கான அனுமதியை வழங்கியுள்ளார்.
பொது பல சேனா - ஹலாலுக்கு எதிராககக் கோஷமிட்டு வரும் நெருக்கடியானதொரு காலகட்டத்தில் நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் - பன்றிக் கறிக்கு சபாநாயகர் பச்சைக் கொடி காட்டியமையானது, 'காகமிருக்கப் பனம்பழம் விழுத்த' கதையாகத் தெரியவில்லை என்கிறார் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பழுத்த முஸ்லிம் அரசியல்வாதியொருவர்!
நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அண்மைக்கால நடவடிக்கைகள் அனைத்தும் மிகவும் நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டவையாகும். ஹலால் முத்திரைக்கெதிராக பொது பல சேனா பிரசாரம் செய்து வருகிறது. இது விடயமாக பாதுகாப்பு செயலாளரை ஜம்இய்யத்துல் உலமா சபையினர் சந்தித்தபோது – முஸ்லிம்களுக்கு மட்டும் ஹலால் முத்திரையை வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ. இன்னொரு புறம் நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் பன்றிக்கறிக்கு இருந்த தடை நீக்கப்படுகிறது. இவையெல்லாம் தனித்தனி நிகழ்வுகள் அல்ல!
இது ஒருபுறமிருக்க, நாட்டில் 'ஹலால் முத்திரையிடும் முறைமையினை' இல்லாமலாக்க வேண்டும் என்று தனது பங்குக்கு ஐ.தே.கட்சியும் பகிரங்கமாக அறிவித்துள்ளது. இது போதாதென்று, அரசாங்கம் ஹலால் விடயத்தில் தனது நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் ஐ.தே.கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. உண்மையில் இது கோரிக்கையல்ல, அரசின் இரட்டை முகத்தினை அம்பலப்படுத்தும் அரசியல் முயற்சியாகும். இதன் மூலம் மஹிந்த ராஜபக்ஷவை ஏதோவொரு வகையில் சிக்க வைக்கலாம் என்று ஐ.தே.க. எண்ணியிருக்கக் கூடும். ஆனால், மஹிந்த ராஜபக்ஷவுக்கு இது ஒரு விடயமேயல்ல. சிங்களப் பேரினவாதத்தின் அழுக்குப் படிந்த பாதங்களின் நிழலில் அவர் பல தடவை அடைக்கலமானவர். இம்முறையும் அவர் - அதையே செய்யக் கூடும்.
சிங்கள மக்களின் மேய்பராகத் தன்னைக் காட்டிக் கொள்வதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலாதிப் பிரியம் கொண்டவர். அதனால்தான், துட்டகைமுனுவின் வழிவந்தவராக தன்னைச் சித்தரிக்கும் போதெல்லாம் - புன்னகை மாறாத முகத்துடன் அதை அவர் ஏற்றுக் கொள்கின்றார். எனவே, முஸ்லிம்களுக்கு எதிராக ஏவி விடப்பட்டுள்ள இந்தப் பேரினவாதப் பேயினை முஸ்லிம் சமூகம் அத்தனை எளிதில் சமாளித்து விட முடியாது. முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஒற்றுமையுடன் கூடிய - மிக உச்சபட்ச அரசியல் சாணக்கியம் மூலமே இந்த விவகாரத்தினை வென்றெடுக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை.
ஆனால், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் காட்டிக் கொடுப்பு அரசியலுக்கிடையில், 'உச்சபட்ச அரசியல் சாணக்கியத்தினூடாக' மேற்படி முஸ்லிம் விரோத விவகாரங்களை வென்றெடுக்க முடியுமா என்பது கேள்விக் குறியாகும்.
பூதத்தினை வைத்து வேலை வாங்க நினைத்தவனை, கடைசியில் பூதம் அடிமைப்படுத்திக் கொண்ட கதையொன்று இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது. தனது குரலாக ஒலிக்க வெண்டும் என்று நினைத்து - முஸ்லிம் சமூகம் தேர்தெடுத்து அனுப்பிய நாடாளுமன்றப் பிரதிநிதிகள் - அந்தக் கதையில் வரும் பூதங்களின் பிரதிகளாகவே தெரிகின்றார்கள்!
·

nangale pesikkondirukkirome thavira veru yarum pesuvathum illai
ReplyDeletenangal pesuvathum eamadu pakka niyayangalum matra samuha makkalai poai servathumillai, eamadu udahangal ithupattri ayiram katturaikalayum, vilakkamkalayum valangivittana
aanal athuvellam eamakkaha mattum than maatru moli odahangalayum konjam parka vendiya tharunam ithu..
Halal crisis is a good ornament to the real Muslims.
ReplyDeleteAlmighty Allah is highly perfect in his words and sympathy on Muslim society when we, the Muslims practice our daily routine out of Islamic guidelines, he is tracking us by using other communities it is once again staged so such communities try to dominate us because most of us either not aware or neglecting Islamic guideline in each and every aspect mostly behaving in food selection when we go for the shopping most of us never search for the Halal though it is fundamental of all Ibadhas (All prayers). Because there are precondition for every Ibathas to perform, when you go for the 5 time prayer, Zakath, Sahum (fasting) and Haj; you have to fulfill some precondition but there are not any condition for halal we cannot supply or let the child or even a lunatic person to have or use the Haram. So this is an opportunity which is given to every individuals to self examine where we as Muslim? Are we practice as Muslim in our food consumption?
In my point of view, we as Muslim should thank bothu Bala Sena (BBS) to aware us to remember the halal food and instigate nun Muslim to lean Islam. We do not need to argue and confront with them because a Muslim basically should believe Almighty Allah and his supremacy everything and every motion depend on him so we should search for the assistance through Salah (prayer) and tolerance as he ordered.
But we have most responsibility as Muslims and the Representatives of Allah in the world and our scholars, Social, Political Leaders and specially our Ulamas (all Movlavies) in renovate our society toward Islam and should consider some of following pre requires.
1. All Muslim leaders where in any bench should forger their division and be unity and try to behave real Muslim (don’t worry about the diversity on opinions).
2. Every individual should give more preference to Islamic education and its practice in the life.
3. Each and every individual those who in any position in the society should convey the message to the every corner of, about importance of searching halal food.
4. Our Mimbers (Jum –Ah preaching) should be planed and utilized for educating shop-runners and public.
So Live in Islam, be a Muslim and attract others.
இன்று அரசாங்கத்துடன் இணைந்துள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் மூக்கனாங்கயிறு போடப்பட்டுள்ள வண்டில் காளைகள் போன்று ஓட்டுபவன் இழுக்கும் பக்கமெல்லாம் செல்பவர்களாகவே உள்ளனர். இந்த நிலை தொடர்ந்து இருக்கும் பட்சத்தில் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கப்படுகின்ற எந்த ஒரு செயலுக்கும் அவர்கள் தங்களது தலையை குனிந்து கொடுத்தாகவேண்டிய நிர்ப்பந்தத்திலேயே உள்ளனர்.
ReplyDeleteஇந்த நிலை மாறவேண்டும். முஸ்லிம் அரசியல்வாதிகள் கொஞ்சமாவது சிந்தித்து இந்நாட்டு முஸ்லிம்களது நலன் கருதி சார்பான முடிவொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
என்ன அரசாங்கம் இதல்லாம் செய்ற....இதுக்கல்லாம் முக்கிய காரணமான ஆல் மஹிந்த... அவன் தான் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்றவன்
ReplyDelete