விஹாரைகளில் ஹலால் எதிர்ப்பு பிரச்சாரத்தை நிறுத்துங்கள் - சிங்கள வர்த்தகள் கோரிக்கை
ஹலால் நெருக்கடி தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ள அமைச்ரவை உபகுழு வியாழக்கிழமை, 28 ஆம் திகதி முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா தலைமையில் கூடியுள்ளது. இதன்போது கருத்து வெளியிட்டுள்ள சிங்கள வர்த்தகர்கள் பௌத்த விகாரைகளில் மேற்கொள்ளப்படும் ஹலால் எதிர்ப்பு பிரச்சாரத்தை நிறுத்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
இதன்போது சிங்கள வர்த்தகர்கள் தெரிவித்துள்ள மேலதிக தகவல்கள் வருமாறு,
பௌத்த சிறுவர், சிறுமியரிடத்திலும் ஹலால் எதிர்ப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. இது சிறுவர்களின் மனதில் நச்சுக்கருத்துக்கள் விதைக்கப்படுகின்றன என்பதையே வெளிக்காட்டுகிறது. இது இன நல்லிணக்கத்திற்கு ஏற்புடையதல்ல. ஹலால் எதிர்ப்பு பிரச்சாரம் காரணமாக ஹலால் முத்திரை பொறிக்கப்பட்ட பொருட்களின் விற்பனையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் பெரும்பாலான சிங்கள வர்த்தகர்கள் பாதிக்கப்படட்டுள்ளனர். இந்நிலை தொடரப்படுவது சிறந்ததல்ல. ஆண்மீகத்தை போதிக்கும் விஹாரைகளில் ஹலால் எதிர்ப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவது துரதிஷ்டவசமானது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Post a Comment