முஸ்லீம் காங்கிரஸ் மீண்டும் ஓர் உடைவுக்கு தயாராகின்றதா..?

(கழுகுப்பார்வை)
அண்மைக்காலமாக நாட்டின் இனப்பிரச்சினையுடன் ஆரம்பித்த அரசியல் எதிர் நடவடிக்கைகள் நாட்டிலுள்ள சிறுபான்மைக் கட்சிகளுக்குள் குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியுனுள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடக்கூடிய நிலைப்பாடுகள் அதிகரித்து வருகின்றன என்றே கட்சி ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்தவகையில் அண்மைக்காலமாக முஸ்லீம்கள் மீதான அழுத்தங்கள், மார்க்க ரீதியான தொழிற்பாடுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் பேரினவாதத்தின் போக்குகள், முஸ்லீம் கட்சிகளுடையே சில விடயங்களில் ஒற்றுமைiயும், சில விடயங்களில் வேற்றுமைகளையும், சில விடயங்களில் கட்சிகுள்ளேயே குத்துவெட்டுக்களும் தோன்றியிருக்கின்ற ஒரு நிலமையில் முஸ்லீம்களுக்கான முக்கிய கட்சியாக காணப்படுகின்ற ஸ்ரீ.மு.கா. கட்சியின் நிலைப்பாடு பற்றியும், அதன் தலைமைத்துவம், உயர்பீட உறுப்பினர்கள், அதில் அங்கத்துவம் பெற்றுள்ள அமைச்சர்கள், அதோடினைந்த ஏனைய அரசியல் உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் விமர்சனத்திற்குள்ளாகி வருகின்றனர் என்கிறதோற்றப்பாடு அதிகரித்துக் கொண்டு வரும் அதேநேரம் அக்கட்சியின் பொறுப்பானவர் களுக்கிடையே ஏற்படுகின்ற முரண்பாடுகள் எதிர்காலத்தில் மீண்டும் ஓர் உடைவுக்கு முகா கட்சி தன்னை சுதாகரித்துக் கொண்டு செல்வதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் எனும் கட்சியை இலங்கை வாழ் முஸ்லீம்களுக்கான தனித்துவக் குரலாக அன்று மர்ஹூம். எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களால் 1982ம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலத்தில் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாரை மட்டக்களப்பு மாவட்டங்களில் ஆரம்பித்து அதனைக் கட்டிக் காத்து, இந்நாட்டின் ஒட்டுமொத்த முஸ்லீம்களின் கட்சியாக பரிணமிக்கச் செய்து சாதனை புரியும் அளவுக்கு அக் கட்சியை வளர்த்தெடுத்து, அக்கட்சி இன்றி நாட்டை ஆளமுடியாது எனும் நிலைமைக்கும் உயரச் செய்து, ஒன்றுமையுடன் ஓங்குமாறு முஸ்லீம் சமூகத்தையே வழிக்கொணர்ந்திருந்தார். பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக தன்னை உருவகப்படுத்தி நாட்டு மக்களுக்கான சேவைகளில் முழுமையான அர்ப்பணிப்புடன் தன்னை புடம்போட்டவண்ணம் அனைத்து மக்களுக்காகவும் ஒற்றுமைப்பாட்டுடன் கூடிய தேசிய ஐக்கிய முன்னணி எனும் கட்சியை ஆரம்பித்து நவஇலங்கையை யுத்வேகத்துடன் கொண்டு செல்லத்தக்கதாக மூவினங்களையும் இணைத்துக் கொண்டு இலங்கை மாதாவின் மடியில் சமாதான சக்தியை பறக்கவிடும் வெண்புறாவாக தன்னை வரித்துக் கட்டிக் கொண்ட அந்த மாமனிதர் திடீரென சமுதாயத்தின் தலைப்பாரத்துடன் இந்நாட்டு மக்களின் தலைகளுக்கு மேலே ஆகாயத்திலே உயிர்துறந்த வரலாற்றை மக்கள் குறிப்பாக முஸ்லீம்கள் மறக்கமாட்டார்கள்.
இவ்வாறு மறக்க முடியாத அந்தத் தலைமைத்துவம் மாற்றம் காணத் தொடங்கியபோது அங்கே பல தலைமைத்துவங்களும், ஊருக்கொரு கட்சி என்கிறகோதாவில் முஸ்லீம் கட்சிகளும், பாராளுமன்றத்தை அல்லது அரசியல் செய்வோருக்கு முஸ்லீம் காங்கிரஸ் கட்சி தூக்கிவிடும் பெருங் கையாக வியாபித்துள்ளதுடன், அன்றைய காலத்து மாமனிதர் எம்;.எச்.எம். அஸ்ரப் அவர்களது வழியான சமூதாயத்திற்காக போராடும் கட்சி இலட்சியத்திலிருந்து விலகி தனது பதவிக்காக, தனது அமைச்சுக்காக, தனது ஊருக்கு செய்வதற்காக, தனது குடும்பத்து உறவினர்களுக்கு உதவிடுவதற்காக, பிக்கப் ஓடுவதற்காக, நாடு பற்றி எரிந்தாலும் தனது மாவட்டத்திற்கு ஏன் அமைச்சு வழங்கப்படவில்லை என்பதற்காக, பாராளுமன்றமாக இருந்தாலென்ன அமைச்சுக் காரியாலயமாக இருந்தாலென்ன பன்றி இறைச்சியை சமைத்து உண்ணாமல் போனாலென்ன ஹலால் சான்றிதழ் எடுத்தாலென்ன எடுக்காவிட்டாலென்ன என்கிற எத்தேவை பற்றியும் உணராது இன்று அரசுடன் ஒட்டி உறவாடவே நினைக்கும் முகாவின் செயற்பாடுகள் அதன் தலைவருக்கும், அக்கட்சியின் செயலாளருக்கும் மோதல் நிலை ஏற்படுமளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளதாகவே கூறப்படுகின்றது.
முகா கட்சி அன்று தனித்து பாராளுமன்றில் ஒரேயொரு கதிரையாக எம்.எச்.எம்.அஷ்ரப் அமர்ந்திருந்தபோது இரவு நேரங்களில் 'பாராளுமன்றத்தில் இன்று' எனும் நிகழ்ச்சியை கேட்காத முஸ்லீம் மக்கள் யாருமே இருக்க முடியாது. அந்தளவுக்கு பாராளுமன்றத்தில் எதற்கும் துணிந்து பேசுகின்ற ஒரு சாதாரண உறுப்பினராக இருந்த காலம். அன்னாரது தலைமைத்துவ பாங்கு, கட்சியின் பற்றுறுதி, சகோதர முஸ்லீம்களின் நேசமிக்க பக்குவம், சகோதர வாஞ்சை, அந்நிய மத்துடன் கொண்ட புரிந்துணர்வு, எடுக்கும் மிடுக்குமான தோற்றம், பார்ப்போரை பரவசப்படுத்தும் பார்வை, கணீரெண்ற குரலுடன்கூடிய அடுக்குத் தொடரில் விளக்கிடும் மும்மொழி வித்தகர், எந்த விடயத்தை எப்படிப் பேசவேண்டுமோ அப்படியே பேசி மற்றவரை ஒரேயடியில் தன்பக்கம் கவரச் செய்யும் பேராற்றல் நிறைந்த பேச்சாற்றல் இவ்வாறு அடிக்கிக்கொண்டே போகுமளவுக்கு தன் நுணிவிரலில் அரசையே சுற்றிவரச் செய்த அந்த மாமனிதன் வளர்த்தெடுத்து நீருற்றி காய்முற்றி கனி பறித்த அந்தக் காலம். எல்லாமே முடிந்து போகுமளவுக்கு இன்று அக்கட்சி பலதுண்டுகளாக உடைக்கப்பட்டு அடிமரமே இத்துப்போகுமளவுக்கு கட்சிக்குள் மீண்டும் ஒரு முரண்பாடு அரங்கேற்றப்பட்டுள்ளதாக கட்சி ஆதரவாளர் சிலர் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் கட்சியின் முக்கியஸ்தர்களது ஒன்றுகூடலின்போது முகாவின் தலைமைப்பீடத்திற்கும் அதன் செயலாளர் பீடத்திற்குமிடையில் சொற்போராட்டம் நடைபெற்றுள்ளது. சபாஸ் சரியான போட்டி என்று கட்சியின் முக்கியஸ்தர்களே மூக்கில் விரல்வைக்குமளவுக்கு சரியான போட்டி நடைபெற்றுள்ளது. ஆம் விடயத்திற்கு வருவோம். அதற்கு முன்னர் ஒருகாலத்தில் அதாவது இக்கட்சியைப் பதிவதற்காக இரண்டு ஆண்டுகள் போராடி கட்சியைப் பதிவு செய்த வரலாற்றையும், அக்கட்சி உருவாகத்தையும் நன்குணர்ந்த ஒரு ஜீவன் இன்றுவரை அக்கட்சியின் முக்கிய உறுப்பினராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். அன்று செயலாளருக்கு பாராளுமன்ற உறுப்பினர் வழங்கப்பட வேண்டுமென்ற எந்த கட்டளைகளும் அவர் நினைத்திருந்தால் பாராளுமன்றக் கதிரையை அலங்கரித்திருக்கலாம். தனது ஆசைக்கு இடம்கொடுக்காது சமுதாயத்திற்கு முன்னுரிமை வழங்கியவர். தனது தொழில், தனது உடமை, காலநேரம் யாவற்றையும் இழந்து கட்சிக்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்தி அந்த மாமனிதனின் நிழலில் வளர்ந்து, தான் மரணிக்கும்வரையிலும் அக்கட்சிக்காவே உயிரைக்கூட தியாகம் செய்யும் அளவுக்கு பற்றுக்கொண்டு இன்றுவரையிலும் அக்கட்சியால் எதுவுமே கிடைக்காத ஒரே ஜீவன் அவர் வேறு யாருமல்;ல அன்பாளன், பண்பாளன், இரண்டாம் இலக்கத்தைக் கொண்டு தன்னை அடையாளப்படுத்தும் அந்த மாமேதை சிரேஷ்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் என்றால் அதற்கு மாற்றுக் கருத்துக்கே இடமிருக்காது.
இன்று தலைமைப்பீடத்திற்கும், அதன் உறுப்பினர்களுக்கும் அல்லது செயலாளருக்கும் இடையிலான அவநம்பிக்கைகள் கட்டியெழுப்படக் காரணம் என்ன? முஸ்லீம் சமூகம் ஒருபக்கம் கட்சி பார்வையோ வேறொரு பக்கம் இவ்வாறு அக்காலத்தில் இடம்பெறவில்லை. கட்சியும், முஸ்லீம் சமூகமும் ஒன்றாகவே காட்சியளித்தன என்பதனால்தான் அன்று அந்த மாமனிதன் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். மூவினத்தையும் தன்பக்கம் கவரச் செய்து அனைவருக்குமான அபிவிருத்திகளைச் சொறிந்துகொண்டிலுருந்தார். அவர் கூறிய கருத்துக்கு மாற்றுக் கருத்துக்களை நியாயமாகப் பட்டால் அதனை புரிந்துசெயற்படும் ஒருவராகவே இருந்தார். அன்று ஒருநாள் முன்னாள் ஜனாதிபதி அமரர் பிரேமதாசாவின் வரவேற்பு நிகழ்வொன்றில் முகாவின் தலைவராக இருந்த அஷ்ரப் அவர்கள் கூறிய ஒரு கருத்தினை ஆமோதிக்காது அக்கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என்று கூறிய சட்டத்தரணி சேகு இஸ்ஸதீன் முரண்பட்ட கருத்தினால் கட்சியிலிருந்து தூக்கிவீசப்பட்டார். கட்சியும் தலைமைப்பீடமும் ஒன்றாகவே இருந்த அந்த காலகட்டம். சேகு இஸ்ஸதீன் கட்சியின் மிகமிக முக்கிய பதவியிலிருந்தவர். தலைமைப்பீடத்திற்கு அத்துணை வலிமை இருந்த காலம்.
ஆனால் இன்று தலைமைப்பீடம் அங்கொரு கருத்து, இங்கொரு கருத்து, தலைமைப்பீடத்திற்குத் தெரியாமல் அரசினால் அமைச்சுக்கள் வழங்கப்படுகின்ற ஒருநிலைமை. தலைமைப்பீடத்திற்குத் தெரியாமால் கிழக்கு மாகாணத்தில் முக்கியமான ஒரு சட்டத்திற்கு ஒப்பமிடும் நிலைமை. இவர்களுக்கு எதிராக விசாரணை என்பார்கள் நடக்காது. போராட்டம் என்பார்கள் நடக்காது. அரசின் பங்காளியாக தேர்தல் காலத்தில் இணையாமல் நாங்கள் மக்கள் பக்கம். இந்த அரசு படுமோசம். அபிவிருத்தி இல்லை. தொழில் இல்லை, மாற்றுகட்சிக்காரர்களால் ஒரே தாக்குதல்கள், நாங்கள் அரசை தீர்மானிக்கும் சக்தி எங்களுக்கு தேர்தலில் வாக்களியுங்கள் நாங்கள் இந்த ஊரை அப்படிமாற்றுவோம், இப்படிமாற்றுவோம். என்பார்கள் தேர்தலின் பின்னர் அரசுடன் ஐக்கியமாகி எத்தனை அமைச்சுக்கள், எத்தனைபேருக்கு என்ன பதவிகள், கட்சிக்குள் மீண்டும் பதவிப் போராட்டம் நடக்கும். பின்னர் சமூகத்தையே மறந்துவிடும் நிலைமை. அப்பப்போ தலைகாட்டும் கட்சியாகவே மக்களிடம் வரும். தேர்தல் நெருங்கநெருங்க மக்களின் காலடியில் மீண்டும் வாக்குக்கேட்கும் படலம் ஆரம்பிக்கும். மக்களுக்கான அபிவிருத்தி வெறும் பகற்கனவாகவே போய்விடும். இதுதான் இன்றைய முகாவின் நிலை என்கின்றனர் அக்கட்சியிலிருந்து விலகியிருக்கும் பழைய போராளிகள். இவையெல்லாவற்றுக்கும் மேலாக அடிக்கடி கட்சிமாறும் அங்கத்தவர்கள். இன்று தலைமைப்பீடத்திற்கும் செயலாளர் பீடத்திற்கும் இழுபறி. இது எங்குபோய் முடியும்? மீண்டும் ஒரு முஸ்லீம் பெயரில் கட்சிக்கான ஆரம்ப நிலையின் தோற்றமா?
தற்போது பொதுபலசேனா என்கிற பேரினவாதம் முஸ்லீம் தனித்துவத்தை மழுங்கடிக்கச் செய்யும் செற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. முஸ்லீம் சிறுவன் ஒருவன் பௌத்த மதத் துறவியாகிப்போகின்ற ஒருநிலைமை ஊடகங்களில் தலை தெறிக்க வந்துள்ளது. வறுமை காரணம் என்று அந்தப் சிறுவனின் தந்தை கூறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவெல்லாம் முஸ்லீம்களை அதளபாதளத்தில் துரத்தும் செயலாகவே இந்த பொதுபலசேனாவின் அடாவடிகள் தொடர்கின்றன. அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க போன்றோர் ஹலால் பிரச்சினையை பெரிதுபடுத்தி சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தைக் கக்கிக்கொண்டிருக்கின்றனர். பள்ளிவாசல்கள் உடைக்கப்படவில்லை என்று அமைச்சர் நிமல்ஸ்ரீபாலடி சில்வா கூறியது வெறும் பொய் என்பதை ஏன் நீங்கள் பாராளுமன்றில் தெரிவிக்கவில்லை என்று முகாவின் தலைமைப்பீடத்திடம் அண்மையில் நிகழ்வொன்றில் சந்தித்த முஸ்லீம் வெளிநாட்டு இராஜ தந்திரிகள் தெரிவித்தபோது மௌனம் சாதித்தமை முஸ்லீங்களுக்கே வெட்கமாய் போனது.
அண்மையில் திருகோணமலை மாவட்டதிற்கு பிரதியமைச்சர் பதவி ஒன்று கிடைக்கவில்லை என்பதற்காக தான் ஜனாதிபதியுடன் பேசப்போகின்றேன் என்று இறக்கண்டி பாம்விலேஜ் விடுதியில் முகாவினது தலைமைப்பீடம் கூறிய கருத்துக்கள் எதனைக் காண்பிக்கின்றன. அதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இரண்டு அமைச்சுக்கள் வழங்கியுள்ளமை கவலை அளிக்கின்றன. முகாவின் அடிக்கட்டையாக காணப்படும் அம்பாரை மாவட்டத்திற்கு இப்பதவி ஏன் வழங்கப்படவில்லை என்பது பற்றி தலைமைப்பீடத்திடம் குத்திக் குதறப்போகின்றேன் என்று மார்தட்டிய பைசால் காசீம் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றினை என்னவென்று சொல்வது. முஸ்லீம்களுக்கு ஆதரவாகப்பேசியபோது ஒரு முஸ்லீம் அமைச்சர் அதற்கு எதிராக பேசுகின்றார். அவரைவிடுவோம். முக்கிய முகாவின் தலைமைப்பீடம், அதன் உறுப்பினர்கள் வாய்மூடி மௌனமாய்போனதன் மர்மம்தான் என்ன? சட்டக்கல்லூரிப் பிரச்சினை, முஸ்லீம் சமயக் கிரிகைளில் பிரச்சினை, உலமாசபையைக் கலைப்பதற்கும், இந்நாட்டில் முஸ்லீம்கள் வாழாவெட்டியாக அடியோடு சமாதிகட்டுமளவுக்கு பொதுபலசேனாவின் பிரச்சினை எட்டுத் திக்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இவ்வாறு பலதரப்பட்ட பிரச்சினைகளை எடுத்தாளும் உரிமையை முகாவின் தலைமைப்பீடம் அரசுடன் உரியவாறு பேசி தீர்மானம் எடுக்க விளையாதது ஏன் என்கின்ற கேள்விகளும் மக்கள் மத்தியில் எழுந்தவண்ணமே உள்ளன.
இவற்றுக்குள் முகாவின் வழமையான கோரிக்கை நிறைவேற்றம் ஆற்றுப்படுத்தப்படாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென அண்மையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஒருவாய்ச் சவாடல். அம்பாரைக்கு ஏன் அமைச்சு வழங்கப்படவில்லை, மட்டக்களப்புக்கு ஏன் வழங்கப்பட்டுள்ளது இதற்கான விளக்கத்தை கோரி ஒருமாத கால அவகாசம் முகாவின் தலைவரால் வழங்கப்பட்டிருந்தன. இவ்விடயம் சம்பந்தமாக அண்மையில் ஒன்றுகூடிய கூட்டத்தொடர் ஒன்றில் முகாவின்செயலாளர் அரசின் அடாவடிகளைக் கண்டித்தும், அரசினால் முகா கட்சி ஓரங்கட்டப்படுவதையும், அபிவிருத்திகள் விடயத்தில் கணக்கெடுக்காத நிலை இன்னும் எத்தனையோ பலப்பல விடயங்களை முன்னிறுத்தி அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகப்போகின்றோம் என்றொரு மாயையை அரசிற்கு முன்வைத்திருந்தபோதிலும் அதனை பொருப்படுத்தாததன் காரணத்தை வலியுறுத்திய செயலாளர் நாயகத்துடன் முகாவின் தலைமைப்பீடம் முரண்பட்டுள்ளது. அதாகப்பட்டது நிந்தவூரில் ஆதரவாளர்கள் மத்தியில் தலைமைப்பீடத்திடம் கேட்காமல் அன்று கூறிவிட்டு இப்போது வந்து அரசினை விமர்ச்சித்து பதவி விலகவேண்டுமென்று கூறுவது நியாயமில்லை. தலைமைப்பீடத்திற்குத் தெரியாமல் எம் முடிவுகளையும் எடுக்கமுடியாது. என்று தலைமைப்பீடம் கூற செயலாளரும் கதைக்குக் கதை அளக்க ஏற்பட்ட அமளிதுமளி கட்சிக்குள் ஒருபிளவையே ஏற்படுத்திவிடுமளவுக்கு காரசாரம் முத்திவிட்டது. இனி எங்குதான் முடியப்போகின்றதோ தெரியாது.
எனவேதான் இன்றைய அரசியல் யதார்த்தம் புரிந்து அதற்கான களத்தை அறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். நாடு பற்றியெரிகிறது. பீடில்வாசித்த கதைபோலகிடும் நிலைமைக்கு முக்கிய முஸ்லீம் கட்சி தங்களது சுயநலப் போக்குடன் நடந்துகொள்வது முஸ்லீம் மக்கள் மத்தியில் ஆத்திரத்தையும் மனஉளச்சலையும் ஏற்படுத்தியுள்ளதாகவே கூறப்படுகின்றது. நாட்டில்; இன்று முஸ்லிம் விரோதப் போக்குகள் கண்டி அஸ்கிரிய மாநாயகத் தேர்களையே உலமாசபையினர் சந்திக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளன. முஸ்லீம் பிரதியமைச்சர் ஒருவர் பள்ளிகள் உடைத்தது எல்லாமே முஸ்லீம்கள்தான் என்று கூறியதாக வெப்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. பொத்துவில் மண்மலையில் முஸ்லீம் பிரதேசத்தில் 200அடி உயரத்தில் பௌத்த பன்சல ஒன்றைக் கட்டுவதற்கான முஸ்தீபுகள் தடல்புடலாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகின்றது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இரு தென்பகுதி பஸ் வண்டிகளில் பௌத்த பிக்குகள், பிக்குணிகள் சகிதம் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர் போன்ற பிரதேசங்கள் ஊடாக பயணித்துக் கொண்டிருந்தபோது சில இடங்களில் பஸ் வண்டியை நிறுத்தி இடங்களை அவதானித்துச் சென்றதாக அப்பிரதேசவாழ் மக்கள் கூறுகின்றர். இதன்மூலம் முஸ்லீம் பிரதேசங்களிலும் பௌத்த கோயில்களை அல்லது புத்தர் சிலைகளை நிறுவும் தளத்தை பார்வையிட்டுச் சென்றார்களோ என மக்கள் பேசிக்கொள்கின்றனர்.
இதுபோன்ற எண்ணிலடங்காத பேரினவாதிகளின் பிரச்சினைகள் ஒருபுறமிருக்க வெறும் அமைச்சுக்காகவும், சுயநல அரசியல் இலாபத்திற்காகவும் கட்சிக்குள் போராட்டம் நடாத்தி கட்சியை உடைக்க நினைப்பது மிகவும் சிந்தனைக்குரிய விடயமாகும். எதிர்காலத்தில் நமது இருப்புக்கே அச்சம்கொண்டுள்ள நிலையில் தன் பசியைவிட சமூகத்தின் பசியைத் தீர்க்க முற்பட்ட முகா கட்சியின் இன்றைய நிலைமை மீண்டும் ஒரு வெடிப்புக்குள் இட்டுச் செல்லுமாக இருந்தால் பேரினவாதிகள் அதற்காக அதிக விலை கொடுப்பார்கள். அவர்கள் அதிக சந்தோசமும் அடைவார்கள். சமுதாயம் பெரிதா? தன் சந்தோசம் பெரிதா? என்பதை உணர்ந்து முஸ்லீம்களின் நிம்மதியான வாழ்வுக்கு அனைவரும் ஒற்றுமைப்பட்டு ஓரணியில் திகழ முன்வருவதே காலத்தின் கட்டாயமாகும். இல்லையேல் அனைவரும் தவிக்க நேரிடும். இதுதான் யாதார்த்தமுமாகும்.
intha neraththil samuthayathukkaha pesa mudiyatha katchi irundu enna iththoda nasama pona enna! ivanuhal ellam samuha thurokikal pathavikkaha janathipathiyn kalai nakki konndu irukkiranuhal ivanuhalai ellam samuthayam nambi pirayosanam illai ivanuhal votu kettu nammada kalai nakka nammudaiya kaladikku varuvanuhal appothu kalil kidakkum saruppai kalatty adikkanum. ellorum thayarahunkal. inzah allah namathu muslim samuthayathi allah paduhappanaha aameen
ReplyDeleteUNP RANIL SLMC HAKEEM IRANDU PERUM VILAHAAMAL IRANDUM URUPADATHU
ReplyDeleteThis is the fact about the SLMC. SLMC can not do anything at the movement. They are doing political business. Therefore, we need to build the alternative way. insa allah FJP will fulfil the cab at the movement.
ReplyDelete