கபாப் உணவில் பன்றி துணுக்குகள் - சுவிஸ் முஸ்லிம்கள் அதிர்ச்சி
(CS) சுவிட்சர்லாந்திலுள்ள பரிசோதனைக் கூடத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் கபாப் உணவில் பன்றிக் கறி 0.1 சதவிகிதத்தை விடக்குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் மத்திய இஸ்லாமிய குழு அறிக்கையில், பரிசோதனைக் கூடத்தில் நடத்தப்பட்ட இருபது சோதனைகளில் ஏழு சோதனைகளிலே பன்றிக்கறித் துணுக்குகள் கபாபில் இருந்தது உறுதியாகியுள்ளது.
இதற்கான காரணத்தை ஆராய்ந்ததில் இறைச்சி அறுக்கப் பயன்படுத்தும் கத்தியை கபாப் தயாரிப்பிலும் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் இதனால் சிற்சில துணுக்குகள் கபாபில் இடம்பெற்றிருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் பேசெல், பீல், ஜெனீவா,கிரயூஸ்லிங்கென், லாசேன், லூசெர்ன், விண்டர்ஹீர் மற்றும் சூரிச் நகரங்களிலும் இந்தப் பரிசோதனைகள் நடத்தப்பட்டது அங்கும் பன்றியிறைச்சிக் கலப்படம் உறுதியாகியுள்ளது.
பிற்குறிப்பு - சுவிஸ் நாட்டில் 5 இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்வதாக கூறப்படுகிறது. இவர்களில் 200 க்கும் மேற்பட்ட இலங்கை முஸ்லிம் குடும்பங்களும் அடங்கும்.


Post a Comment