Header Ads



தேவையற்ற பிரச்சினைகள் வேண்டாம் - ஜம்மியத்துல் உலமா அஸ்கிரிய பீடம் சந்திப்பு


நாட்டில் தற்போது தோன்றியுள்ள முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அஸ்கிரிய பீடத்துடன் இன்று புதன்கிழமை, 27 ஆம் திகதி முக்கிய சந்திப்பொன்றை நடாத்தியுள்ளது.

இச்சந்திப்பில் குறித்து ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளர்  மௌலவி முபாரக் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு வழங்கிய தகவல்கள் வருமாறு,

அஸ்கரிய தலைமை பீடாதிபதியுடன்தான் ஜம்மியத்துல் உலமா சபைக்கு சந்திப்பு நடைபெறுவதாக முன்னர் எமக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதும் குறித்த சந்திப்பில் அஸ்கிரிய பீடாதிபதி கலந்துகொள்ளவில்லை. அவரது உதவியாளர்கள் மற்றும் அவருக்கு இடண்டாமிடத்திலுள்ள பௌத்த தேரர்களே கலந்துகொண்டனர்

ஜம்மியத்துல் உலமா சபை அவர்களுடன் அதிகளவு நேரம் உரையாடியது. எங்கள் நிலைப்பாட்டை அவர்களுக்கு அறியப்படுத்தினோம். எமதுபக்க வாதங்கள்மற்றும் தெளிவுகளை எல்லாம் அவர்கள் ஏற்றுக்கொண்டார்களா என்பதை நாம் அறியாவிட்டாலும் சந்திப்பு முக்கியத்துவமிக்கதாக அமைந்திருந்தது. 

அஸ்கிரிய பீடாதிபதிகள் சார்பில் பதில வழங்கியவர்கள், சகல தரப்புகளும் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்வது சிறந்தது என பதில் வழங்கினார்கள் என்றார்.

1 comment:

  1. இம்மாதிரியான சந்திப்புகள் நல்லதாக இருக்கலாம்,இருக்கனும் என்ற அவா என்னுள் இருக்கிறது,ஆனாலும் வியட்நாமிய முஸ்லிம்களுக்கு நடந்தவையை மனதில் இருத்திக்கொள்வது மிகச்சிறந்தாகும்,அவர்கள்(பௌத்தர்கள் மனதில் என்ன நினைத்துக்கொண்டு) இப்படியான நிகழ்வுகள் மூலம் முஸ்லிம்கள் கோழைகள் என்கிற ஒரு நிலைப்பாட்டிக்கு வரும்படியான சந்திப்புகளை நிகழ்த்தாது இருப்பதும்,அல்லாஹ் ஒருவனுக்கே எமது அடிபனியும் தன்மையை வெளிப்படுத்தி,மனிதர்களுக்கு முஸ்லிம்கள் பயப்பட மாட்டார்கள் என்பதையும் வெளிக்காட்டியவர்களாக எமது நடவடிக்கைகளை அமைத்துக்கொள்வோம்.ஏன் என்றால் அடிப்படையில் அவர்களிடத்தில் எங்களை தாக்கனும்,அழிக்கனும் என்ற மனநிலை இருப்பின் நாம் யார் என்பதை வெளிக்காட்டிக்கொள்வது சாலச்சிறந்தது.

    ReplyDelete

Powered by Blogger.