சிரிய ஜனாதிபதியை உலக நாடுகள் கண்டிக்காதது வெட்கக் கேடானது
சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டு சண்டையில் அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள் பலியாகி வருகின்றனர். இதுவரை அங்கு 70,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வாரம் சிரியாவில் போர் நிறுத்தம் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று புரட்சிப்படையின் ”சிரியா தேசியக் கூட்டணி” அறிவித்திருந்தது.
இந்நிலையில் அக்கூட்டனியின் தலைவர் மவுஸ் அல் கதீப் கூறியதாவது:-
அடுத்த மாதம் ரோமில் நடைபெற இருந்த அமைதிப் பேச்சுவார்த்தையை புறக்கணிக்கப்போம். மேலும் வாசிங்டன் மற்றும் மாஸ்கோ பேச்சுவார்த்தையும் நாங்கள் புறக்கணிக்க உள்ளோம். அதிபர் ஆசாத்துக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவும், ரஷ்யாவை கண்டிக்கிறோம்.
கடந்த இரண்டு வருடமாக பொதுமக்கள் மீது அதிபர் படையினர் தாக்குதல் நடத்திவருகின்றனர். இந்த செயலை உலக நாடுகள் கண்டிக்காதது வெட்கக் கேடானது. இவ்வாறு அவர் கூறினார். இந்த முடிவால், சிரியாவின் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது.

Post a Comment