Header Ads



100 பேர் கடலில் பரிதாபமாக மரணம் - காப்பாற்றபட்ட மியன்மார் நாட்டினர் அதிர்ச்சி தகவல்



இலங்கையின் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ள பர்மிய நாட்டவர்கள், தம்முடன் பயணித்தவர்களில் மேலும் 100 பேர்வரையில் நடுக்கடலிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

கிழக்குக் கரையிலிருந்து சுமார் 250 கடல் மைல்கள் தொலைவில் படகொன்றில் தத்தளித்துக் கொண்டிருந்த 32 பேர் இலங்கைக் கடற்படையினரால் நேற்று சனிக்கிழமை மீட்கப்பட்டனர்.

இவர்களுடன் குறித்த படகில் பயணித்த 98 பேர் உணவு, குடிநீர் இன்றி நடுக்கடலிலேயே உயிரிழந்த நிலையில் அவர்களின் சடலங்கள் கடலில் வீசப்பட்டுவிட்டதாக உயிர்தப்பிய பர்மிய நாட்டவர்கள் தெரிவித்துள்ளதாக அவர்களை சந்தித்து கலந்துரையாடிய பௌத்த பிக்கு ஒருவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

காலி துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்ட 32 பேரும் அவர்களின் உடல்நிலை காரணமாக கராப்பிட்டிய மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




1 comment:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    இறைவா அளவற்ற கருணையாளனே மரணித்த முஸ்லிம்களை மன்னித்து அருள் புரிவாயாக, ஈமானிலும், உடல் பலத்திலும் வலிமை அற்றவர்களாக வாழும் எம் முஸ்லிம் சமூகத்தையும் காப்பாற்றுவாயாக; ஆமீன் .

    ReplyDelete

Powered by Blogger.