Header Ads



ரேடார் + கேமிராக்களுடன் கூடிய அதநவீன கார் வருகிறது



விபத்துகள் அதிகம் நடப்பதை குறைக்கும் நோக்கில் புதிய வகை தொழில் நுட்பத்துடன் கார்களை டொயோட்டோ நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி ரேடார் மற்றும் கேமிராக்களுடன் இயங்கும் லெக்சஸ் எல்.எஸ். வகை தானியங்கி கார்களின் சோதனை ஓட்டம் வெற்றிபெற்றுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. 

ஓட்டுனர் விழிப்புடன் இருக்கிறாரா? ரோட்டில் நேராக செல்கிறாரா? அல்லது சிக்னலில் நிறுத்துகிறாரா? என அறியும் பொருட்டு இந்த அதி நவீன போக்குவரத்து தொழில்நுட்பம் கண்காணிக்கும். பின்னர் அது ஓட்டுனரின் ஸ்மார்ட் போனுக்கு செய்திகளை தெரிவித்து உஷார்படுத்தும். 

ஓட்டுனருடன் இணைந்து செயல்படும் வகையில் இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. டிரைவர் அஜாக்கிரதையாக இருக்கும்பட்சத்தில், தானாகவே வாகனத்தை கட்டுப்படுத்தும். சாலையோர ஒளிரும் எச்சரிக்கை குறியீடுகள், பாதசாரிகள், மற்றும் தடைகள் பற்றிய அறிவிப்புகளை இந்த தொழில்நுட்பம் தெரிவிக்கும். மற்ற கார்களுக்கும் எச்சரிக்கை செய்திகளை தெரிவிக்கும். 

இந்த நவீன உலகில் இந்த புதிய வகை கார்கள் பெரும்புரட்சி ஏற்படுத்தும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. முற்றிலும் விபத்துகள் இல்லா நிலையை கொண்டுவருவதே எங்கள் நோக்கம் என்று டொயோட்டோ கார் கம்பெனி கூறியுள்ளது. அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள கண்காட்சியில் இந்த கார்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 

No comments

Powered by Blogger.