Header Ads



மட்டக்களப்பில் வெள்ள நிவாரணம் உரியமுறையில் வழங்கப்படவில்லையென குற்றச்சாட்டு..!



(எம்.ரீ.எம்.பாரிஸ்)

வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட ஓட்டமாவடி கோறளை பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட எட்டு கிராம சேவகர் பிரிவுகளில் அதிகமான பாதிப்புகளை எதிர் கொண்ட பிரதேசங்களில் மாஞ்சோலை, பதுரியா நகர் , காவத்தமுனை போன்ற பகுதிகளாகும்.

அவ்வாறாயினும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வெள்ள நிவாரணம் வழங்குவதற்கு அனர்த்த முகாமைத்து அமைச்சு 160 இலச்சம் ரூபா  நிதியினை ஓதுக்கியது மீண்டும் மேலதிகமாக 50 இலச்சம் ரூபா  அவசர நிதி ஓதுக்கீடும் செய்துள்ளது. 

இப் பிரதேசத்தில் இது வரை முஸ்லிம் எயிட் என்ற தனியார் நிருவனம் ஒன்றை தவிர அரசாங்கத்தினால் எவ்வித உதவியும் வழங்கப்படவில்லை அரச பத்திரிகைகளில் வெளி வருகின்ற வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு தொடர்பான  செய்திகளை மக்கள் பார்வையிட்ட பிறகு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு  வெள்ள நிவாரணம் வழங்குவதற்கு அனர்த்த முகாமைத்து அமைச்சு ஓதுக்கிய 210 இலச்சம் ரூபாய்  எங்கே என்ற கேள்வி மக்களிடம்  எழுந்துள்ளது. 

பாதிக்கப்பட்ட மக்கள் அப் பாதிப்பில் இருத்து மீள் எழுவதற்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும்   வெள்ள நிவாரன அவசர நிதி ஒதுக்கீடு உடனடியாக மக்களை சென்றடைய வேன்டும் அதற்கு மாறாக பசி தீர்த பிறது சாப்பாடு வழங்குவது என்பது அசாத்தியமற்றது. பசிக்கும் போது தான் சாப்பாடு வழங்க வேன்டும் என்பது நாம் யாவரும் அறிந்த விடயம்.

இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் அதித கவனம் செலுத்துதல் வேன்டும் சம்பத்தப்பட்ட அமைச்சர் உரிய அதிகாரிகளை பணிக்க வேன்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும். 

இதனால் அப் பிரதேசத்தில் பொறுப்புடன் அனர்த காலங்களில் பணியாற்றிய  கிராம சேவையாளர்கள் உற்பட கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் சமூக மட்ட குழுக்கள் மக்களிடம் இருத்து பல்வேறு பிரச்சினைகளையும் தவறான விமர்சனங்களையும் எதிர் கொள்ள நேரிட்டுள்ளது எனது குறிப்பிட தக்கதாகும். 


2 comments:

  1. இது,

    அண்மையில் கட்டிய பள்ளியாச்சே?

    அமீர் அலியும் திறப்பு விழாவுக்கு வந்தார்தானே ?

    கொஞ்சம் இந்த பள்ளியின் தரை மட்டத்தை உயர்த்தி இருக்க கூடாதா ?

    நமக்கு ஒரு வீடு என்றால் எப்படி உயர்த்துவோம் ?

    அல்லாஹ் நம் எல்லோரையையும் வீண் விரயம் செய்வதிலிருந்து பாதுகாக்கட்டும்.

    ReplyDelete
  2. வெள்ள நிவாரணம் ஒதுக்கப்பட்ட செய்தியின் கீழ் "இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் " என்று இருந்திருக்கும் சரியாக பார்க்கவும்.

    இல்லை என்றால்

    வெள்ள காசு எங்க

    கருப்பாய் பதுங்கிச்சோ...!

    ReplyDelete

Powered by Blogger.