Header Ads



''முஸ்லிம்களை அடக்கமுயன்றால், நாங்கள் பேரிடிகளாக மாறுவதற்கு அதிக நேரம் பிடிக்காது''



(Iqbal Ali)

முஸ்லீம்கள் பிரிந்திருந்து அடிபடுவதா? திரண்டெழுந்து உயிர் காப்பதா..? என்ற ஒரு முக்கியமான அபாயகரமான சூழ் நிலைக்கு இன்று இலங்கையின் முஸ்லிம் சமூகம் தள்ளப்பட்டுள்ளது. அடி வெகு தூரமில்லை அழிவும் வெகு தூரமில்லை, சிந்திக்க வேண்டிய சந்தர்ப்பங்களை கூட நாம் கடந்து விட்டோம் எங்கள் மீது பூதாகரமாக உருவெடுத்துக்கொண்டிருக்கும் சில திட்டமிடப்பட்ட தீய சக்திகள் இன்று பலப்பட்டுள்ளன, வீராப்புக்கொண்டுள்ளன. இருந்தாலும் இலங்கையின் முஸ்லிம் சமூகத்தை ஒரு கோழைச்சமூகமாக்க நான் விட மாட்டேன் அடிகள் மூலம் எங்களை அடக்க முயன்றால் இந்த நாட்டின் ஒவ்வொரு முஸ்லிம் இளைஞர்களும் பேரிடிகளாக மாறுவதற்கு அதிக நேரம் பிடிக்காது. என்று மிகவும் ஆவேஷமான தோரனையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி குருணாகல் மாவட்ட அமைப்பாளரும் குருணாகல் மாநகர சபை உறுப்பினருமான அப்துல் சத்தார் கருத்துத்தெரிவித்தார்.

இன்று இலங்கையின் முஸ்லிம் சமூகம் முகம் கொடுத்துள்ள பிரச்சணைகள் சம்பந்தமாக குருணாகல் முஸ்லிம்களின் நிலைப்பாடு சம்பந்தமாக அவசரமாக ஆராயப்பட வேண்டுமென்று பல முக்கியஸ்த்தர்கள் விடுத்த வேண்டுகோளின் பேரில்  குருணாகலில் அப்துல் சத்தார் தலைமையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இன்று ஒரு பலம் பொருந்திய ஆட்சி இந்த நாட்டிலுள்ளது அந்த ஆட்சியின் பங்காளிகள் நாங்கள், என்றாலும் இந்த பலத்தை பிரயோகிக்க முடியாத பாவிக்கத்தெரியாத பொம்மைகளாக இன்று இலங்கையின் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள் காலம் கடத்துவது மனதிற்கு மிகவும் வேதனையைத்தருகிறது. 

இந்த ஆட்சிக்கு முன்னால் தலை நிமிர்ந்து செல்லக்கூடிய தன்மானமும் தைரியமும் இவர்களுக்கு வரவேண்டும் சலுகைகளுக்காக வரிசையில் காப்பது போல் எமது நாட்டின் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை உடமைகளை பாதுகாப்பை உறுதி செய்வது இன்று முஸ்லிம் அரசியல்வாதிகளது பொறுப்பாகும். 

எனது இந்த கருத்து எனது மூத்த முஸ்லிம் அரசியல் அங்கத்தவர்களின் மனசாட்சியை உருத்தினாலும் எமது சமூக விடயங்களில் இறைவணுக்கு பதில் சொல்லுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் நாங்கள் என்பதை மறந்து விட நான் தயாரில்லை.

 ஆதலால் இன்று இலங்கையின் முஸ்லிம்களுக்குள்ள அச்சுறுத்தள்கள் அதன் மூலம் முஸ்லிம்களின் மத்தியில் நிலவும் அச்சம் பீதி, எங்களுக்குறிய ஹலால் உரிமைகளுக்கான நியாயமற்ற தலையீடுகள், எமக்கு இந்த நாட்டின் சட்ட ஷரத்துக்களால் உள்ளடக்கப்பட்டு இவ்வளவு காலமும் பாதுகாக்கப்பட்டு வந்த மார்க்கக்கடமைகளுக்குறிய பள்ளிவாசல்கள் மீதான அத்துமீரல்கள் சம்பந்தப்பட்ட இப்படியான விடயங்கள் இந்த நாட்டு ஆட்சியின் தலைமை பீடத்திற்கு தைரியமான முறையில் கொண்டு செல்லப்பட வேண்டும். அப்படியான ஒரு நிலைக்கு பொறுப்புள்ளவர்கள் யாரும் தயாரில்லை என்றால் அந்தப்பொறுப்பை  இந்த சமூகத்திற்காக கொடுக்க நான் எந்த நேரமும் தயாராக இருக்கிறேன். 

தயங்காமல் தலை நிமிர்ந்து இந்த நாட்டின் ஜனாதிபதியின் முன் சென்று பேசுவதற்கு மட்டுமல்ல இந்த நாட்டின் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை உடமைகளை பாதுகாப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உறுதிப்படுத்துவார் என்ற மேலான நம்பிக்கையும் எனக்குள்ளது. 

எங்களுக்குள் குறைகளையும் பலவீனங்களையும் வைத்துக்கொண்டு ஏனையவர்களை சாடுவது நியாயமற்றது எங்களுக்குள் உள்ள பிரிவினைகள்தான் இன்று எங்களை காட்டிக்கொடுத்துள்ளது. நாம் எமது நலனில் மட்டும் எங்கள் காலங்களை கடத்திக்கொண்டிருக்கிறோம். பொது பலசேனா உள்ளிட்ட புத்த பிராணின் போதனைகளுக்கு அப்பாற்பட்ட இந்த நாட்டின் சமாதானத்திற்கு மீன்டுமொறு இலுக்கை ஏறபடுத்த தருனம் பார்த்ததுக்கொண்டிருக்கும் நாசகார அமைப்புக்களின் அச்சுறுத்தல்கள் முக்கியமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, நோ லிமிட், உட்பட முக்கியமான முஸ்லிம் நிறுவனங்கள் அல்லது அமைப்புக்கள் மீது இலக்கு வைத்தாலும் முஸ்லிம்களின் மீது ஒரு இனப்பிரச்சனை அல்லது ஒரு இனச்சுத்திகரிப்பு என்று வரும் பொழுது அன்று 83ஆம் ஆண்டு ஏற்பட்ட ஜூலை கலவரத்தின் போது தமிழர்கள் “பர தெமலா” என்று அழைக்கப்பட்டது போல் இன்று அப்துல் சத்தார் அல்லது ரவூஃப் ஹக்கீம் என்று அன்பாக அழைக்கப்படும் நாங்கள் பதிலாக இன்று இகழ்வாக சிலர் பேசும் தொனியி்ல் “பலு தம்பியா” எனற அடையாளத்தோடு அவதுப்படுத்தப்படுவோம். எனது பேச்சை யாரும் தவறாராக நினைத்தாலும் யதார்த்தம் இதுதான் அதனால் உண்மைகளைப்பேச நான் அஞ்சத்தேவையில்லை. 

இன்று எங்களுக்கு எவ்வளவு சொத்துக்கள் இருந்தாலும் நாங்கள் எவ்வளவு சுக போகங்களுடன் வாழ்ந்தாலும் கடந்த காலத்தில் இந்த நாட்டில் நடந்தவைகள் எங்கள் இதயங்களில் ஆராத இரத்தக்காயங்கலாக இன்றும் உள்ளது.  புலிகளினால் மன்னார், யாழ்ப்பாணம் போன்ற வடக்கின் முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்ப்பட்ட போது அவர்கள் மீட்டு வந்தவைகள் என்ன? என்பதை நாம் சிந்திக்க வேணடும். 

இன்று இந்த நாசகார அமைப்புக்கள் தீட்டும் முஸ்லிம்களின் மீதான சதியின் மூலம் ஒரு பிரச்சனை உருவாகுமானால் இன்று எங்களிடமிருக்கும் சொத்துக்கள் எங்களைக் காப்பாற்றாது எங்கள் வரட்டு கௌரவங்கள் எங்களைக்காப்பாற்றாது அதனால் வெள்ளம் வரும் முன் எனதன்பு முஸ்லிம்களே! நாங்கள் ஒன்று படுவோம், ஆயுதமும் தேவையில்லை ஒரு துளி இரத்தமும் சிந்தத் தேவையில்லை முஸ்லிம்கள் ஒன்றுபட்டால் பொது பல சேனாவல்ல எந்த பல சேனாவையும் எங்களால் விரட்டியடிக்கலாமென்றார்.

 இந்தக்கூட்டத்தில் உலமாக்கள், கல்விமான்கள், வியாபாரத் துரைறையைச் சார்ந்தவர்கள் உட்பட பல முக்கியஸ்த்தர்கள் கருத்துத் தெரிவித்தன

8 comments:

  1. paravaayillai nallaahathaane pesuhintraar matravarhal election session il mattum thaane pesuhintraarhal. seyal ennavo paarppoam insha Allah

    ReplyDelete
  2. அப்துல் சத்தார் சரியான திசையைத்தொட்டு இருக்கிறீர்கள் அல்லாஹ் உங்கள் பேச்சை உங்கள் உள்ளத்தில் உறுதிப்படுத்துவானாக அத்துடன் இயக்கவெறிகொண்டு அலையும் எம்சகோதரர்களின் உள்ளத்திலும் உங்கள் கருத்தை விதைத்திடுவானாக,எவ்வழி சிறந்த வழி என்று எங்கள் கண்ணின் மணியாகிய முஹம்மத்(ஸல்)அவர்கள் காட்டித்தந்து விட்டார்கள் அதன் வழி ஒன்று பட்டு முன்செல்வோமாக இருப்பின் அல்லாஹ் எங்களை வெற்றியடையச்செய்வான் என்பதில் எள் அளவில் கூட சந்தேகமில்லை.

    ReplyDelete
  3. சாப்பிடவும், கொட்டாவி விடவும்தான் பாராளுமன்றத்தில் வாய்திறக்கும் முஸ்லிம் தலைமளுக்கு உங்களுக்கு இருக்கும் புத்தியும் தைரியமும் இல்லையே ...!

    எம்மைக்காக இறைவன் இருக்கிறான், ஒவ்வரு தொழுகையின் பின்னும் துஆ செய்வோம்...!

    ReplyDelete
  4. nichchiyamaha allah yaawartraium arinthavanaha irukkinran.

    ReplyDelete
  5. உங்களது பேச்சு,
    நாவில் இருந்து வருகிறதா?
    உள்ளத்தில் இருந்து வருகிறதா?
    என்பதை அல்லாஹ் அறிவான்.
    உள்ளத்தில் இருந்து வந்தால் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!!!
    பல முஸ்லிம் அமைச்சர்கள் தன்பதவி மீது கொண்ட மோகம் காரணமாக வாய் மூடி உள்ளனர்.
    அல்லாஹ் அதற்குரிய கூலி கொடுப்பான்.
    இன்ஷா அல்லாஹ், உங்களது போராட்டத்தில் நானும் ஒருவனாக பங்கு கொள்வேன்.

    ReplyDelete
  6. MMC ஆக இருக்கும் உங்களுக்கு இவ்வளவு தைரியமும் துணிச்சலும்
    இருக்கும் என்றால், MPC அல்லது MP யாக இருந்தால் ................

    ReplyDelete

Powered by Blogger.