Header Ads



யாழ்ப்பாணத்தில் சர்வதேச வர்த்தக கண'காட்சி (படங்கள்)




யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி வடக்கிற்கும் தெற்கிற்குமான உறவுப்பாலமாக இருக்கும் அதேவேளை, தென்னிந்திய உறவுகளுடன் கலாசாரத்தைப் பேணும் வகையிலும் இவ்வாறான நிகழ்வு அமையப் பெறவேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் மேற்படி சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வுகள் 18-01-2013 யாழ் நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இங்கு ஒன்றும் நடக்கவில்லையென சிலர் தமது சுயலாப அரசியலுக்காக கூறிவருகின்ற நிலையில், இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திகள் குறித்து மக்கள் நன்கறிவார்கள். இங்கு எதிர்பாராத முன்னேற்றங்கள் அபிவிருத்திகளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்றுள்ள சமதான சூழலைப்பாதுகாத்து அதிலிருந்து மென்மேலும் மேம்படுவதற்கு நாம் ஒன்றிணைந்து உழைக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

இந் நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இந்திய துணைத்தூதரகத்தின் யாழ்ப்பாண துணைத்தூதுவர் மாகாலிங்கம், யாழ்.மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, வணிகர் கழக சங்கத் தலைவர் பூர்ணச்சந்திரன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.





No comments

Powered by Blogger.