Header Ads



எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டம் தடுப்பு - நாடு முழுவதும் சட்டத்தரணிகள் பகிஷ்கரிப்பு



பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப்பிரேணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கலைந்து சென்றுள்ளனர்.

நாடாளுமன்றத்தை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்ல முற்பட்டபோது பொலிஸ் மற்றும் விவேட அதிரடி படையினரால் தடுக்கப்பட்டனர். 

இதனால், லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்திற்கு அருகில் கூட்டமொன்று இடம்பெற்றது. இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கலைந்து சென்றனர்.

இலங்கை முழுவதும் உள்ள நீதிமன்றங்களின் அன்றாட நடவடிக்கைகள் இன்று (10) ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. 

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாக்க மீதான குற்றப்பிரேரணை இன்று பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதுமுள்ள நீதிமன்றங்களின் நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனால் நீதிமன்றங்களுக்கு வருகை தரும் பொது மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்புவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

No comments

Powered by Blogger.