Header Ads



விரட்டப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்களை மீள குடியேற்றாமல் வடக்கில் தேர்தல் வேண்டாம்

வட மாகாண சபை தேர்தல் 1981 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு அமையவே நடத்தப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

வடமாகாணத் தேர்தல் நடாத்த வேண்டுமாயின் 1981 ஆம் ஆண்டு உள்ள மக்கள் தொகையின் அடிப்படையில் மூவின மக்கள் மீள்குடியேறிய பின்னரே நடத்தப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

எனினும் வடக்கில் இருந்து விரட்டப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்களை மீள குடியேற்றாமல் வடமாகாண சபைத் தேர்தலை அரசு நடத்துமாயின், வடக்கில் தமிழ் மக்கள் மாத்திரமே வாழ முடியும் என்ற நிலைப்பாடு உறுதிப்படுத்தப்பட்டு விடும். 

வடக்கில் மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்படுவது வரவேற்கப்பட வேண்டியது ஆனாலும் அதற்கு முன்பாக வடக்கில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் மீளகுடியேற்றப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட யுத்தத்தின் போது, வடக்கில் இருந்து சுமார் ஒரு லட்சம், சிங்கள, முஸ்லிம் மக்கள் விரட்டப்பட்டனர்.

எனினும் அவர்கள் இன்னும் மீள்குடியேற்றப்படவில்லை. அவர்களின் காணி, சொத்துக்கள் இன்னும் இருக்கின்றன. எனவே அவர்களும் வடக்கில் வாழ்வதற்கு முக்கியம் வழங்க வேண்டும். 

இவ்வாறான சந்தர்ப்பத்தில் தாம் வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவதை எதிர்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

4 comments:

  1. Sometimes these guys make sense.

    ReplyDelete
  2. இந்த தேரரின் நியாயமான உண்மையான கருத்தை ஆழமாக வரவேற்கின்றோம். இப்படியான நியாயமான உண்மையான கருத்தை இதுவரை எந்த தமிழ் அரசியல் வாதியும் ஏற்றுக்கொள்ளவும் இல்லை, அவர்களால் பொறுக்கவும் முடியாது. அப்படி உண்மையை, நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ளாதா வரை, தமிழ் மக்களின் விடிவு இன்னும் இருண்ட யுகமாகவே அமையும்.

    ReplyDelete

Powered by Blogger.