Header Ads



சவூதி அரேபிய இளவரசியின் செயலாளரால் ஏறாவூரில் புதிய பள்ளிவாசலுக்கு அடிக்கல்


(அப்துல் அலீம்)

சவூதி அரேபிய இளவரசி ஆதிலாவின் செயலாளரும் சட்ட ஆலோசகருமான யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அல் றாஸிட் ஞாயிறன்று ஏறாவூர் புன்னைக்குடா அப்துல் மஜீத் ஹாஜியார்  மாவத்தைக்கு விஜயம் செய்து அங்கு மஸ்ஜிதுல் ஸைனப் புதிய பள்ளிவாசலுக்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார். 

சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகாரப் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் அழைப்பின் பேரில் ஏறாவூருக்கு வருகை தந்த சவூதி அரேபிய இளவரசியின் சட்ட ஆலோசகரும் செயலாளருமான யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அல் றாஸிட் புன்னைக்குடா அப்துல் மஜீத் ஹாஜியார்  மாவத்தையில் மக்கள் வாழும் குடிசைகளையும் அவர்களது வாழ்க்கை நிலைமைகளையும் பார்வையிட்டார். கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் எஸ். அப்துல் றவூப்  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா உட்பட ஊர்மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அங்கு சவூதி அரேபிய இளவரசி ஆதிலாவின் செயலாளரால் பகல் நேரத் தொழுகையும் தலைமை தாங்கி நடத்தப்பட்டது.









5 comments:

  1. sauthi karran koottu thua othinara moulavi ennada wahhabihaloda hubbu serthitto kasa kanda hubbu sappayahum

    ReplyDelete
  2. இந்த பள்ளிவாயலாவது கட்டி முடிக்கப்படுமா ??? ஏன் என்றால் காத்தான்குடியில் இவரால் (பிரதி அமைச்சரால் ) தொடங்கி வைக்கப்பட்ட பள்ளி வாயல் ஒன்று வருடக்கணக்காக அப்படியே இருக்கின்றது

    ReplyDelete
  3. சவுதி அரேபியாவில் ஷரீஆ சட்டம் சரியாக பின்பற்றப்படுகிறது என்று சொல்கின்றார்கள்,அப்படியானால் சவுதி அரேபிய இளவரசி ஆதிலாவுக்கு ஒரு ஆண் செயலாளராகவும் அவரது சட்ட ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்..இது குற்றமில்லையா தயவு செய்து விளக்கம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..எல்லாவற்றையம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே..

    ReplyDelete
  4. திரு. யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அல் ரஷீத் அவர்களே..! உடைக்கிற பள்ளியின் பட்டியல் நீண்டு கொண்டே போகுது அதுக்கு எதாவது பாதுகாப்பு செய்யலாம் என்றால் செய்திட்டு போங்க. தயவுசெய்து அரசியல் வாத்திய நம்பி வேலையில இறங்க்கதிங்க.

    பிறகு "ஐயா ஏ.....ங் கெணத்த காணோம் எம்பானுகள்...."

    ReplyDelete
  5. இஸ்லாமிய ஷரீஆ சட்டத்தை முழுமையாக பின்பற்றுகின்றோம் என்று கூறுகின்ற சவுதி அரேபியாவின் இளவரசி ஆதிலாவின் செயலாளராகவும்,சட்ட ஆலோசகராகவும் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அல் றாஸிட் எனும் ஆண் நியமிக்கப்பட்டுள்ளமை சரியா?தவறா?தயவு செய்து சொல்லுங்கள்...

    ReplyDelete

Powered by Blogger.