Header Ads



மிஸ்பா உல் ஹக் + வாட்மோர் வெளிநடப்பு - அப்துர் ரெஹ்மான் மீண்டும் அணியில்..!


தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணித் தேர்வின் போது, கேப்டன் மிஸ்பா உல் ஹக், பயிற்சியாளர் வாட்மோர் வெளிநடப்பு செய்தனர்.

மூன்று டெஸ்ட், இரண்டு "டுவென்டி-20', ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க, பாகிஸ்தான் அணி, ஜன.20ம் தேதி தென் ஆப்ரிக்கா செல்கிறது. முதல் டெஸ்ட், பிப்., 1 முதல் 5வரை ஜோகனஸ்பர்க்கில் நடக்கவுள்ளது. 

இதற்கான 16 பேர் கொண்ட பாகிஸ்தான் அணித் தேர்வு நேற்று நடந்தது. 2010 முதல் டெஸ்ட் "ஸ்பெஷலிஸ்ட்' விக்கெட் கீப்பராக உள்ள கம்ரான், உமர் அக்மல் ஆகியோரின் சகோதரர் அத்னன் அக்மலை சேர்க்க, கேப்டன் மிஸ்பா உல் ஹக், பயிற்சியாளர் வாட்மோர் வலியுறுத்தினர்.

தவிர, நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுக்குப் பதில் ஐந்து பேர் வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதை பாகிஸ்தான் தேர்வுக் குழு ஏற்க மறுத்தது. இதையடுத்து, மிஸ்பா, வாட்மோர், கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினர். 

பின் அறிவிக்கப்பட்ட அணியின் கேப்டனாக மிஸ்பா உல் ஹக் தொடர்கிறார். இந்திய தொடரில் அசத்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்பான், டெஸ்ட் அணியில் இடம் பெற்றார். 

அக்மல் சகோதரர்கள் அணியில் சேர்க்கப்படவில்லை. ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய சுழற்பந்து வீச்சாளர் அப்துர் ரெஹ்மான், குறுகிய கால தடை நீங்கியதால் அணியில் சேர்க்கப்பட்டார். "டுவென்டி-20' மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணி பின் அறிவிக்கப்படும்.

No comments

Powered by Blogger.