Header Ads



ஈரான், ரஷ்யா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தயார் - அமெரிக்கா அறிவிப்பு

உலக அளவில், அமெரிக்க "கம்ப்யூட்டர் நெட்வொர்க்'கை குறிவைத்து தாக்கும் அமைப்புகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில், "சைபர்' குழுவை விரிவு படுத்த அமெரிக்க ராணுவம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான, பென்டகனை சேர்ந்த அதிகாரிகள் கூறியதாவது:கடந்த, ஆகஸ்டில், கம்ப்யூட்டர்களை குறிவைத்து அனுப்பப்பட்ட "வைரஸ்' மூலம், அமெரிக்காவின் புகழ்பெற்ற, "சவுதி அராம்கோ' என்ற எண்ணெய் நிறுவனத்தின் , 30 ஆயிரம் கம்ப்யூட்டர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, பயன்படுத்த முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டன. இந்த தாக்குதல், ஈரான் நாட்டிலிருந்து நடத்தப்பட்டிருக்கலாம், என்ற சந்தேகம் உள்ளது.சீனா மற்றும் ரஷ்யாவிலிருந்து வரும் அச்சுறுத்தலை விட, இது ஒன்றும் அவ்வளவு பலம் வாய்ந்ததல்ல.

அமெரிக்காவின் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கை பாதுகாக்கும் வகையில், மூன்று வெவ்வேறான சைபர் குழுவினர் களமிறக்கப்படுவர். இதையொட்டி, சைபர் குழுவில், தற்போது உள்ள, 900 பேர் என்பது, 4000 என, அதிகரிக்கப்பட்டு, செயல்திறனும் விரிவுபடுத்தப்படுகிறது. தேசியக் குழு என்ற பெயரில் செயல்படும் இக்குழு, அமெரிக்காவின் மின்சார திட்டங்களை செயல்படுத்தும் பவர்கிரிட், கட்டமைப்பு, எதிரிகளை வீழ்த்தும் குழு ஆகியவற்றை கட்டுப்படுத்தும் கம்ப்யூட்டர்களை, எதிரிகளின் தாக்குதலிலிருந்து பாதுகாத்து, அவற்றிற்கு பதிலடி தரும் பணிகளையும் மேற்கொள்வர். இவ்வாறு பென்டகன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.