Header Ads



ஹெம்மாதகமையில் இரு பெரும் விழாக்கள்


(எம்.எச்.எம். ஹஸன்)

ஹெம்மாதகமை முஸ்லிம்களின் வரலாற்றையும் வாழ்வு முறையையும் சித்தரிக்கும் வகையில் 'ஹெம்மாதகமை முஸ்லிம்களின் வாழ்வும் வரலாறும்' என்ற நூல் வெளியீடு விழாவும் கல்வித் துறையில் தடம் பதித்தவர்களைப் பாராட்டும் விழாவும் ஓரே மேடையில் 2013.01.13ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணிக்கு அல் அஸ்ஹர் மகாவித்தியாலய, மஹீபால ஹேரத் கேட்போர் கூடத்தில் நடைபெறும்.

பேராதனைப் பல்கலைக்கழக அரபு இஸ்லாமியத் துறை தலைவராக கடமையாற்றிய எம்.ஐ.எம். அமீன் அவர்கள் வரலாற்று நூலை ஆக்கியுள்ளார். கல்வி, பொருளாதார, கலாசார, பன்பாடு, மரபுகள், பாடசாலைகள், பள்ளிவாசல்கள் மற்றும் நிறுவனங்கள் என்ற அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியதாக 385 பக்கங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. வாழ்த்து மறைந்த அறிஞர்கள், உலமாக்கள் வாழ்த்து கொண்டாடும் கல்விமான்கள் சமூக ஆர்வலர்கள் பற்றிய விபரங்களும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.

அண்மைக்காலமாக கல்வித்துறையில் சிறப்புகளை எய்திய கல்விமான்களைப் பாராட்டு நிகழ்வுகள் இவ்விழாவின்போது இடம் பெறும். குறிப்பாக கலாநிதிப் பட்டங்கள் பெற்றுள்ள கலாநிதி ஏ.எல்.எம். அப்துல்பாரி, கலாநிதி எஸ்.எல்.எம். ரிபாய், கலாநிதி எம்.ஏ.எம். ரிபாய், கலாநிதி எம்.இஸட்.எம். நபீல், கலாநிதி எம்.ஐ. இஸ்மத் ரம்ஸி, கலாநிதி எம்.ஐ.எம். நவாஸ் ஆகியோர்கள் கௌரவிக்கப்பட உள்ளனர்.

அத்துடன் பல ஆக்கங்களை சமூகத்துக்கு வழங்கிய எம்.வை.எம். மீஆத். எம்.எச்.எம். ஹஸன் ஆகிய எழுத்தாளர்களும் முதன் முதல் சட்ட முதுமானி  பட்டம் பெற்ற மௌலவி எம்.எஸ்.எம். நவாஸ் வைத்திய கலாநிதிப் பட்டம் பெற்ற எம்.எல்.எம். ரிஸாத், (னிம்) எம்.எச்.எம். ஸாகிர் ஹுஸைன்  ஆகியோரும் இவ்விழாவின்போது கௌரவிக்கப்படவுள்ளனர்.

விழாவின் பிரதம அதிதியாக அஷ்ஷெய்க். யூசுப் முப்தி கலந்து கொள்கிறார். சிறப்புரையை பேராதனைப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ், நவமனி பிரதம ஆசிரியரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் அல் ஹாஜ் என்.எம். அமீன், பிரபல தொழில் அதிபர் அல் ஹாஜ் அஸாத் ஸகரியா கலந்து கொள்ளவுள்ளனர். ஹெம்மாதகமை முஸ்லிம் எழுத்தாளர்களின் ஆக்கங்களைக் கொண்ட ஒரு கண்காட்சியும் அன்றைய தினம் இடம் பெறும். விழாவைச் சிறப்பிக்கும் முகமாக 90.1ய்னி விஷேட வானொலி சேவையும் 12 ஆம் திகதி காலை முதல் இடம் பெறும்.





No comments

Powered by Blogger.