Header Ads



2050 இல் இலங்கை ஜனாதிபதியாக முஸ்லிம் ஒருவர் வந்திடுவாரென இனவாதிகள் அச்சம் - ரங்கா



(அஸ்லம் எஸ்.மௌலானா)

2050 ஆம் ஆண்டில் முஸ்லிம் ஒருவர் இலங்கையின் ஜனாதிபதியாக வந்து விடுவார் என்று பெரும்பான்மை இனவாதிகள் அஞ்சுகின்றனர் என சக்தி தொலைக்காட்சி பணிப்பாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமுமான சட்டத்தரணி ஜே.ஸ்ரீரங்கா தெரிவித்தார்.

முஸ்லிம் சமூகத்தில் துணிச்சல்மிகு தலைமைத்துவத்தையும் தகுதியான பாராளுமன்ற உறுப்பினர்களையும் தெரிவு செய்வதில் முஸ்லிம்கள் தொடர்ந்தும் தவறிழைத்து வருகின்றனர்.எனவும் அவர் கவலை வெளியிட்டார்.

சிம்ஸ் கெம்பஸ் கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மர்ஹூம் முஹம்மட் முஸ்தபா ஞாபகார்த்த புலமைப் பரிசில் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்நிகழ்வு சனிக்கிழமை (19) காலை சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

சிம்ஸ் கெம்பஸ் பணிப்பாளர் நாயகம் அன்வர் முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண சுகாதார, சமூக சேவை, விளையாட்டுத் துறை, தகவல் தொழில் நுட்பக் கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூரும் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

அத்துடன் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி எம்.எஸ்.எம். ஜலால்தீன், கலாநிதி அனுசியா சேனாதிராஜா, அம்பாறை மாவட்ட இராணுவ அதிகாரி கேணல் மேஜர் பிரியந்த கமகே, அம்பாறை மாவட்ட சிவில் பாதுகாப்பு இணைப்பாளர் மேஜர் நவரட்ண, கல்முனை சாஹிராக் கல்லூரி அதிபர் ஏ.ஆதம்பாவா ஆகியோர் உட்பட மற்றும் பல பிரமுகர்கள் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இதன்போது சுமார் 200 மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கணினி கற்கை நெறிகளுக்கான புலமைப் பரிசில் சான்றிதழ்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் சிம்ஸ் கெம்பஸ் பணிப்பாளர் நாயகம் அன்வர் முஸ்தபா, அதிதிகளுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.

இவ்வைபவத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா; கல்வியின் மகத்துவம், அதற்கு உதவ வேண்டியதன் அவசியம், தொழில்சார் நிபுணத்துவக் கல்வியின் அவசியம், றிஸானா விவகாரம், சமகால அரசியல், முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகள், முஸ்லிம் தலைமைகளின் போக்கு, முஸ்லிம் காங்கிரசின் இன்றைய அரசியல் பயணம், மாற்று சிந்தனையின் அவசியம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து விபரித்தார்.




6 comments:

  1. அன்பர்களே ரங்கா என்ன சொல்கிறான் என்பதை சற்று சிந்தியுங்கள்!அவன் சொல்வது ஜே.ஆர்(83 கலவரம்)பாணியில் சிங்கள சமூகத்துக்கு போட்டுக்கொடுக்கும் வேளையை செய்கிறான்(சிங்களவர்களே!கவணம் முஸ்லிம்கள் தொகை கூடிந்நெல்கிறது)என்பதைத்தான் சூசகமாக சொல்கிறான் இவன் பச்ச இனவாதி இவனை நம்பி மோசம் போய் விடாதீர்கள் அன்பர்களே!

    ReplyDelete
  2. ரங்கா எங்களின் முஸ்லிம் பாராளுமன்ற உறுபினர்களை வைத்து
    கொமடி, கீமடி பண்ணலையே ?

    ரங்கா - ச்சே, ச்சே.

    அதிக முஸ்லிம் உறுபினர்களை கொண்ட கிழக்கு மாகாணசபையில் முதல்வரை தெரிய இரண்டு வாரம் இழுபறி நிலவியது; இதில் ஜனாதிபதி வேறயா ?

    ஜனதிபதிய தெரிய சும்மா இரண்டு வருசத்த விட்டாலும் விடுவோம் ?

    சில வேளை அதுவும் தவணை முறையிலோ ?

    ReplyDelete
  3. 2050ம் ஆண்டில் முஸ்லிம் ஒருவர் இந்நாட்டின் ஜனாதிபதியாகி விடுவார் என்று பேரினவாதிகள் அஞ்சுகிறார்கள் என்ற செய்தியை மீண்டுமொருமுறை முஸ்லிம்களுக்கு நினைவூட்டியிருக்கின்றார் திரு ரெங்கா அவர்கள் .எத்தணை முறை நினைவூட்டினாலும் ,முஸ்லிம் அரசியல்வாதிகளை திசைமாற்றி விடமுடியாது.அவர்களின் இலட்சியம்,கனவு, அபிலாசைகள் அணைத்தும் ,சமூகத்தின் விருப்பு,அபிலாசைகள்,போன்ற வற்றில் நின்றும் துருவமாற்றம் கொண்டதாகும். உண்மையில் 2050ம் ஆண்டுக்கிடையில் ,அரசியல் அமைப்புச் சட்டம் மாற்றம் கண்டு ,இலங்கை மக்கள் அணைவரும் இன,மத,குல,பேதங்களுக்கப்பால் ,சிந்திக்க முடியுமானால் ஒரு தேசிய தலைமைத்துவத்தின் தேவை உணரப்படும்போது ,ஒரு முஸ்லிம் மாத்திரம் அல்ல ,திரு ரெங்கா கூட ஜனாதிபதியாக வரலாம்.

    ReplyDelete
  4. Ivan oru ketta rascal eriyum neruppil ennei uutruvathatku muyalkiraan. Naam ivan petchil emaara kuutaathu

    ReplyDelete
  5. Hi Friends,

    சக்தி டீவியையும் அவர்களது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் ஒருவர் கூர்ந்து கவனித்தாலே அவர்களின் உள்ளுக்குள் புழுங்கும் முஸ்லீம் எதிர்ப்பை உணரலாம்.

    இலங்கையில் எத்தனையோ பல இனவாத அரசியல்வாதிகள் உள்ளனர். ஆனால் சிறீரங்காவின் இனவாதம் புதுவகையானது. நம்மவர்களை வைத்து நிகழ்ச்சி நடத்தியே நம்மைக் கவிழ்க்கும் நோக்கம் கொண்ட இனவாதம்.

    அவரது பழைய மின்னல் நிகழ்ச்சி நாற்காலிகளில் நமது அரசியல்வாதிகளை அமர்த்தி உச்சந்தலையிலே பட்டர்பூசிக் கரைய வைத்து காட்டிக்கொடுக்கும் கைங்கரியத்தை மறக்க முடியுமா? இதற்காக சிறீரங்காவைக் கோபிப்பதா அல்லது நம்முடைய மழுங்கு அரசியல்வாதிகளைக் கோபிப்பதா?

    இப்போது 2050 முஸ்லீம் ஜனாதிபதி பற்றிக் கதைத்து ஏற்கனவே அடாவடியில் இறங்கியுள்ள சிங்கள இனவெறியர்களுக்கு நம்மைத் தீவிரமாகக் குறிவைக்கச் சொல்லிக் கொடுக்கும் எட்டப்பன் வேலையை அழகாகச் செய்வதைக்கூட விளங்காமல் நம்முடைய மழுங்குகள் உச்சிகுளிரக்கூடும்.

    ReplyDelete
  6. Inoon,

    மந்தை மேய்ப்பவன் கேனையனாக இருந்தால் மாடு கூட மச்சானென்று கூப்பிடுமாம்!

    அன்று உழைத்துண்ணும் சாதாரண குடிமகனிலிருந்து அன்றாடம் ஏமாற்றும் நமது அரசியல் தலைமைகள் வரை டீவி வெளிச்சத்திற்கும் தேவையில்லா களியாட்டத்திற்கும் பல்லை இளித்துக்கொண்டு திரிந்தால் சிறீரங்காக்கள் மட்டுமல்ல சிறுகுரங்குகள் கூட நம்மைக் காட்டிக் கொடுத்துவிட்டு ஏளனம் செய்யும்.

    அந்த டீவிக்கு தொலைபேசி அழைப்புகள் எடுத்து உழைத்துக் கொடுப்பவர்களில் 90 வீதமானவர்கள் நமது முஸ்லீம் இளைஞர்களும் யுவதிகளும்தான். ஆனால் அதனால் கிடைக்கும் பணத்தை வைத்து நமது சமூகத்திற்கே அவர்கள் மிளகாய் அரைத்துக் கொண்டிருப்பதையும் அதிலுள்ள அரசியலையும் நம்மவர்கள் உணர்வதில்லை. தன்னை உணராத மக்களும் அதை வலியுறுத்தாத தலைமையும் உள்ள சமூகம் உருப்பட்டதாக வரலாறு ஏதும் உள்ளதா?

    அரசியல் விழிப்புணர்வே இல்லாமல் ஆன்மீக உச்சாடனத்திலும் வெற்றுப் பொழுதுபோக்குக் களியாட்டத்திலும் மூழ்கிக் கிடக்கும் மந்தைகளாக இருக்கும் வரை சேற்றில் புதைந்த யானைபோல சிறீரங்காத் தவளைகளிடமெல்லாம் உதை வாங்கிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

    ReplyDelete

Powered by Blogger.