Header Ads



சவூதி அரேபியா 1000 கோடி தந்தாலும் எனது மகள் போல வருமா..?


ஏழையாகவே பிறந்தோம், ஏழையாக வாழ்ந்தோம். இந்நிலையில் சவூதி அரேபியாவின் எத்தகைய உதவிகளும் தமது குடும்பத்திற்கு தேவையில்லையென றிசானாவின் தாயார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் எமது இணையத்திற்கு மேலும் தகவல் தருகையில்,

என் மகள் றிசானா வீடு வந்து சேருவாள், எங்களுடன் அமர்ந்து சோறு சாப்பிடுவாள் என்ற நூறு சதவீத நம்பிக்கையுடன் நான் காத்திருந்தேன். அந்த காத்திருப்பு தகர்ந்து போனது. அவர் நினைவுகளிலிருந்து என்னால் மீளமுடியவில்லை. மீளவும்முடியாது.

எனது குழந்தைக்கு மன்னிப்பு கொடுக்காத அந்த சவூதி அரேபியா தாயை நான் மன்னித்துவிட்டேன்.

இப்போது சிலர் சவூதி அரேபியாவின் உதவி குறித்து பேசுகிறார்கள். சவூதி அரேபியா எனக்கு 1000 கோடி ரூபா தந்தாலும் எனது மகளுக்கு அது ஈடாகாது. அவர்களின் உதவி எனக்கு தேவையில்லை. சவூதி அரேபியாவின் பணத்தைக் கொண்டு நான் என்ன செய்வது..? எனது மகள் திரும்பி வந்துவிடுவாளா..??

அல்லாஹ்வின் நாட்டப்படிதான் எல்லாம் நடக்கும். நாங்கள் ஏழ்மையாகவே வாழ வேண்டுமென்று அந்த இறைவன் நினைத்திருப்பின் அதுதான் நடக்கும்.

இலங்கையிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் எனது குடும்பத்தினருக்கு உதவிய சகலருக்கும் உங்கள் வெப்சைட் மூலம் நன்றி கூறுகிறேன். 

இதேவேளை றிசானாவின் குடும்பத்தினருக்கு சவூதி அரேபியா இளவரசி தனது ஆலோசகர் மூலம் பிரதிமையச்சர் ஹிஸ்புல்லாவிடம் 10 இலட்சம் ரூபா பணம் கொடுத்துள்ளாராமே...? அந்தப் பணம் உங்களிடம் வந்தடைந்துவிட்டதா என றிசானாவின் தாயாரிடம் வினவியபோது ''எனக்கு ஹிஸ்புல்லாஹ் என்பவரையே தெரியாது'' என்றார்...!!

6 comments:

  1. அப்ப கொடுத்ததாக சொல்லும் பணம்? விசாரணை செய்யுங்கள். உரியவருக்கு கிடைக்க முயற்சி செய்யுங்கள்.

    ReplyDelete
  2. பெறுமதி சொல்ல முடியாதது உயிர் என்பதை இந்த ஏழைத் தாய் உணர்த்தி விட்டாள்..

    ReplyDelete
  3. anna hisbulla anral yara?

    ReplyDelete
  4. தாயே உன்னையும் அந்த கருணை இறைவன் மன்னிக்கட்டும்.

    ஹிஸ்புல்லாஹ்வுக்கு எவ்வளவு வேலை உண்டு ?

    மாப்பிளை ரெடியாகணும் வைட் அண்ட் வைட் உடுக்கனும்.

    நான் சிறுவர் அபிவிருத்தி அமைச்சர்தானே .....

    ஆறுதலாக சிறுவன் மாதிரி போஸ்ட்டில(தபால்)போய் கொடுத்தா போதும்.

    ReplyDelete
  5. Hi Friends,

    புலியை முறத்தால் விரட்டிய தமிழ்ப்பெண் என்று இலக்கியங்களிலே படித்திருப்போம்.

    ஓர் அப்பாவிச் சிறுமியின் கைத்தவறுதலை மன்னிப்பதற்கான அத்தனை வாய்ப்புகளையும் நிராகரித்து கொலை ஒன்றே தீர்வென்று ஆன்மீகப் பம்மாத்துக் காட்டிய சவூதி எனும் கேடுகெட்ட மிருகத்தை தனது ரோஷத்தால் விரட்டிய மூதூரின் வீரப் பெண்ணை இன்று பாருங்கள் நண்பர்களே!

    ஆண்டி முதல் அரசியல்வாதிகள் வரை காசு பணத்துக்காக ஆலாய்ப்பறக்கும் காலத்தில் இன்று நீ நினைத்தால் கிடைப்பதை வாங்கி நிரப்பிக்கொள்ள முடியும். உன் நிலைமையிலே வேறு யார் இருந்தாலும் அதையே செய்திருப்பார்கள்.

    ஆனால் நீயோ.. தாங்கவொண்ணா வறுமை குடும்பத்தை புரட்டிப்போட்ட போதிலும் ரோஷமும் மானமுமே பெரிது என்று இந்த உலகத்திற்கே காண்பித்து உயர்ந்து நிற்கின்றாய் என்னருமை ஏழைத்தாயே!

    நீ பிறந்த நாட்டில் நானும் பிறந்ததையும் நீ வாழும் காலத்தில் நானும் வாழ்வதையும் பெருமையாய் நினைக்கின்றேன் தாயே. ஆனால் தாயே பெருமிதத்தால் விழிகளிலே வழியும் கண்ணீரை மட்டும் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.

    Hats off to you!

    ReplyDelete
  6. ஏதாவதொன்றை விமர்சிக்கும் போது தகுந்த ஆதாரம், நேர்மை, நடுநிலைமையான பார்வை போன்றன இன்றியமையாதவைகளாகின்றன. அறிவுபூர்வமான, ஆக்கபூர்வமான விமர்சனங்கள் இந்தப்பண்புகளைக் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த முறைகளைக் கொண்டிராத விமர்சனங்களால் நல்ல மாற்றங்களைத் திருத்தங்களை ஏற்படுத்த முடியாது என்பதுடன் அவை விமர்சனம் என்ற பேரால் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தனிப்பட்ட ஒருவர் மீது ஏற்படுத்தப்படும் பழிவாங்கலாக, சேறுபூசலாகவே கருதப்படும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

    சகோதரி ரிஸானா நபீக் விவகாரம் தொடர்பான கருத்தாடல்கள், விமர்சனங்களை பார்க்கும் போது தனிப்பட்ட ஒருவர் மீதான அனுதாபம் என்ற பெயரில் சவூதியின் சட்டங்களைக் குறைப்பட்டுக் கொள்வதாக எண்ணி இஸ்லாத்தின் கொள்கைகள், சட்டங்கள் சர்வசாதரணமாக குறைகாணப்படுகின்ற ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது. சகோதரி ரிஸானா நபீக் அவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு சரியானதுதானா? சவூதியரசு இவ்விடயத்தில் பக்க சார்பாக நடந்து கொண்டதா? போன்ற விடயங்கள் பற்றிப் பேசுவது தவறல்ல. ஆனாலும் அது இஸ்லாத்தின் சட்டங்களில் கையாடல் செய்கின்ற நிலைக்கு போய் விடக்கூடாது என்பதில் நாம் மிகுந்த அவதானத்தோடிருக்க வேண்டும். ஆனாலும் முஸ்லிம்களிலேயே ஒரு சாரார் மரண தண்டனை சட்டத்தையே கேள்விக் குறியாக விமர்சிக்கும் நிலையேற்பட்டிருக்கிறது. மார்க்க விளக்கமுள்ளவர்கள் என்று கருதப்படுவோர் கூட ‘அந்தக் காலத்து அரபுகளிடம் பழிக்குப்பழி வாங்கும் வழக்கமிருந்தது இஸ்லாம் அதனை அங்கீகரித்தாலும் கூட…….’ என்று பேசத் தலைப்பட்டுவிட்டனர். சவூதியை விமர்சிப்பதற்கப்பால் இஸ்லாம் விதித்துள்ள மரண தன்டனைச் சட்டத்தையே விமர்சிக்குமளவுக்கு இவர்களின் கருத்துக்கள் வளர்ந்துவிட்டன என்பதையே நாம் இங்கே சுட்டிக்காட்டுகிறோம். இஸ்லாத்துக்கு வெளியிலிருந்து வரும் விமர்சனங்களைப் பார்க்கும் போது ‘இஸ்லாம் சிறுபிள்ளை என்று கூடப்பார்க்காமல் தண்டிக்குமளவிற்கு இரக்கமற்றது. சாந்தி பிறந்த மண்ணிலேயே சாந்தி செத்து விட்டது’ என்று இஸ்லாத்தை முழுமையாகவே அவை பிழைகாண்கின்றன.

    மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை சரியா? தவறா? சட்டங்களை அமுலாக்குவதில் சவூதியில் பாரபட்சங்கள் காட்டப்படுகின்றனவா? என்ற விடயங்களைப் பேசுவது இஸ்லாத்தைப் பாதிக்காது. தனிப்பட்ட ஒரு பார்வையாகவே அது அமையும். அப்படியான விமரிசனங்கள் ஆதாரங்களோடு முன்வைக்கப்படும்போது ஏற்பது ஒரு ஞாயஸ்தனின் கடமை. அதே வேளை மரண தண்டனை விடயத்திலே நாம் நெகிழ்வோமாயின் அது இஸ்லாத்தை விமரிசிப்பதாகவே அமையும்.

    மரண தண்டனை என்பது இஸ்லாத்தில் ஒரு பகுதியாகும். எப்போது மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்? யாருக்கு வழங்கப்பட வேண்டும்? அதற்கான விசாரணை எப்படியிருக்க வேண்டும்? அதற்கான சாட்சிகளை எவ்வாறு கையாள வேண்டும்? அவை நிரூபிக்கப்பட்டால் எவ்வாறு தண்டிக்க வேண்டும்? தண்டப்பரிகாரத்தை எவ்வாறு வாங்குவது? வாங்கமலிருப்பதற்கு மாற்றுத்தரப்பிற்கு என்ன உரிமையிருக்கிறது? உடன்படிக்கை செய்தவரைக் கொன்றால் என்ன? தாய் பிள்ளையைக் கொலை செய்தால் என்ன செய்ய வேண்டும்? என ஒவ்வொன்றுக்குப் பிரத்தியேகமான சட்டங்கள் இஸ்லாத்திலுண்டு. மரண தண்டனையை எழுந்தவாரியாக இஸ்லாம் கூறவில்லை

    ReplyDelete

Powered by Blogger.