மூதூரில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்க ஏற்பாட்டில் போட்டி பரீட்சை கருத்தரங்கு
(அஸ்ஸிஹாபி)
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் கல்விப் பரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட போட்டிப் பரீட்சை வழிகாட்டல் தொடர் கருத்தரங்கு சனிக்கிழமையன்று (2012.12.15) மூதூர்pல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நல்லாட்சிக்கான் மக்கள் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் எம்.ஐ.எம்.ஜெஸ்மி தலைமையில் மூதூர் சமாதான நிலையத்தில் இக்கருத்தரங்கு ஆரம்ப வைபவம் இடம்பெற்றது.
இவ்வைபவத்தில் நல்லாட்சிக்கான் மக்கள் இயக்கத்தின் ஸுறா சபை தலைவர் எம்.பி.எம்.பிர்தௌஸ் நளிமி, செயற்குழு உறுப்பினர்களான டாக்டர் எம்.ஏ.சி.எம்.சமீம், பொறியியலாளர் எம்.ஏ.சி.எம்.ஜெஸீம்,மற்றும் வளவாளர்களான பிரதி திட்டமிடல் பணிப்பாளர் பாயிஸ்,உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சி.முஸ்யில், தொழில் நுட்ப சேவையின் சிரேஸ்ட உத்தியோகத்தர் அமீர் எஸ்.ஹமீட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முகாமைத்துவ உதவியாளர், கிராம உத்தியோகத்தர் மற்றும் பட்டதாரி ஆசியர் ஆகியவற்றுக்கான போட்டிப் பரீட்சைகளுக்குத் தோற்றவுள்ள பெருந்தொகையானோர் இக்கருத்தரங்கில் பங்குபற்றினர். ஜனவரி மாதம் 20ஆம் திகதிவரை வார இறுதி நாட்களில் இக்கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.



Post a Comment