இஸ்லாமிய இயக்கங்கள் மறுக்க முடியாத இன்னும் சில கோணங்களில்...!
(அபூ ருஷ்கான்)
இஸ்லாமிய சிந்தனா ரீதியாகவும் ,கொள்கை ரீதியாகவும் அழுத்தமான பயிற்றுவிப்புகள் இல்லாமல் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சூழ்நிலை வாத செயற்கட்ட நடவடிக்கைகளுக்குதான் இஸ்லாமிய இயக்கங்கள் இன்று முன்னுரிமை கொடுக்கின்றன .
முதலாளித்துவ ஏகாதிபத்திய சிந்தனா வாதத்தின் எதிர்பார்ப்பை ஒத்த இத்தகு கருத்துப் போக்கு போட்டிச் சந்தையை ஒத்த பிரச்சார வலை விரிப்புகளோடு மக்கள் முன் நிற்கின்றன . நிகழ்கால ஜாஹிலீய கவர்ச்சிகளின் முன் வாழ்வு என்பதை இஸ்லாமிய வடிவத்தோடு கொடுத்தல் என்பதில் "மக்கள் திருப்தியே மகேசன் திருப்தி " என்பதே சில இஸ்லாமிய இயக்கங்களின் அமுத வாக்கு .
சிக்கல் இல்லாத பிரச்சாரம் , சமூக சேவை என்பவற்றின் மூலம் தம்மை தக்க வைத்தல் ,ஆட்சேர்த்தல் ,தம்மை நியாயம் காட்டல் என்ற கருத்தியலோடு கல்வி, தொழிற்பயிட்சி , முகவர் சேவைகள் ,போன்ற சுய விளம்பர வடிவமெடுத்துள்ள சில 'தவ்வா 'கம்பனிகள் முன் மக்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை எதை தெரிவு செய்வது ? எவ்வாறு தெரிவு செய்வது? என்பதே .
இன்று காணப் படக்கூடிய எல்லா இஸ்லாமிய இயக்கங்களையும் முன்னிறுத்தி பின்வரும் வினாவை தொடுத்தால் சில நேரம் அவர்களுக்கும் மக்களுக்கும் மயக்கம் தீரலாம் .அது இஸ்லாத்தை நிலைநாட்டும் கருவி (tool ) இயக்கங்களா ? அல்லது இயக்கத்தை நிலை நிறுத்துவதற்கான கருவி (tool ) இஸ்லாமா ? என்ற வினாவே அதுவாகும் .
இந்த வினாவுக்கு முன் இன்றைய நிகழ்கால நடப்புகளின் படி இயக்கங்களுக்காகத் தான் இஸ்லாம் என்ற பதில் வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை .இந்த மனோ நிலையில் உள்ள இஸ்லாமிய இயக்கங்களின் வரவுகள் தான் முஸ்லீம் சமூகத்தின் இயல்பான சிந்தனைத் தரத்தை விட்டும் தூரப் படுத்தியுள்ளதுடன் பிரிவினைகளையும் நியாயப்படுத்தி உள்ளது .
தமக்கென வரையறுத்த ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி அடுத்த இயக்கங்களையும் அங்கீகரிக்கிறோம் என வெளிப்படையாக கூறிக் கொண்டு உள்ளார்ந்த ரீதியாக அடுத்த இயக்கங்களுக்கு எதிராக சேறு பூசி மக்கள் மத்தியில் 'கூல் கேம் கொடுக்கும் இன்டலிஜென்ட் கிரிமினல் டிப்லோமடிக் இயக்கங்கள் ஒருபுறம் .
தாம் மட்டுமே சரியானவர்கள் அடுத்த இயக்கங்கள் வழிகேடர்கள் என வெளிப்படையாகவே சொல்லி சவால் விட்டு சண்டைக்கிழுத்து சுய சுத்தம் காட்டி சகோதரத்துவ சண்டையில் தாமே ஏகபோக பிரச்சார வேங்கைகள் என மார்தட்டி நிற்போர் மறுபுறம் .
மொத்தத்தில் இஸ்லாத்தை மீள் கட்டமைக்க வந்தவர்கள் அதிகரித்துப் போனதால் அவர்களே இஸ்லாமிய சமூகப் புற்றின் ஆபத்தான' கான்சர் செல்களா '? என்ற சந்தேகத்தின் மத்தியில் இந்த உள்ளார்ந்த சச்சரவுகள் எமக்கு விசனத்துக்குரியதாகவும் , குப்பார்களுக்கு வேடிக்கையான வாடிக்கையாகவும் மாறிவிட்டதும் கவலையான உண்மைதான் .
தயவு செய்து மனதார ஒப்புக் கொள்ளுங்கள் நான் மேலே தந்த விடயங்கள் சூழ்நிலையின் சுருக்கங்களே தவிர விமர்சிப்பு அல்ல . சகோதரத்தை விட மேலோங்கி விட்ட இயக்க வாதங்கள் எம்மை இன்னும் பின்னடையவே செய்யும் . அல்லாஹ்வுக்காக இந்தத் தவறில் இருந்து தவிர்ந்து கொள்வோமா ?

நிச்சயமாக உங்களுடைய
ReplyDeleteஇந்த சமுதாயம்
ஒரே சமுதாயம்தான்!
நானே உங்கள் இரட்சகன்!
எனவே என்னை
வணங்குங்கள்! (21:92)
என்ற அல்குர்ஆன் வசனம்
முஸ்லிம்க ளின்
ஒற்றுமைத்
தாகத்திற்கு வற்றா
நீரூற்றாய் திகழ்கின்றது.
அன்பாலும் ஆதரவாலும்
அரவணைப்பா லும்
முஸ்லிம்கள் அனைவரும்
ஒரு உடலைப்
போன்றவர்கள்!
ஒரு உறுப்பு
பாதிக்கப்பட் டால் பிற
உறுப்புகள்
தூக்கமின்மையாலும்
காய்ச்சலாலும்
அதற்கு நிவாரணம்
தேடுகின்றன என்ற
நபிகளார் (ஸல்)
அவர்களின்
பொன்மொழி சமூகப்
பளுவையும்
பாசத்தையும்
ஒற்றுமையையும்
முஸ்லிம்களின்
முகவரியாக்கியது.
விரோதமும்
பகைமையும்
பாராட்டி சிதறிக் கிடந்த
சமூகத்தை ஓரிறைக்
கொள்கைதான்
ஒற்றுமையாய் சங்கமிக்க
வைத்தது. அபூசீனிய
அடிமை பிலால் (ரலி),
அவர்களை விலைக்கு
வாங்கி விடுதலை செய்த
எஜமான் அபூபக்ர் (ரலி),
செல்வச் சீமான் முஸ்அப்
இப்னு உமைர் (ரலி),
இஸ்லாத்திற்காக
இன்னுயிரை நீத்த முதற்
தம்பதிகள்
சுமைய்யா மற்றும்
யாஸிர் (ரலி), வீரச் சிங்கம்
அலி (ரலி), இவர் நாவில்
அல்லாஹ் பேசுகிறான்
என்ற நற்சான்று பெற்ற
உமர் (ரலி), யமன்
தேசத்திலிருந்து
கப்பலில்
பயணித்து மதீனா
வந்தடைந்த
அபூமூஸா அல்அஷ்அரீ
(ரலி), சத்தியத்தைத் தேடி
பாரசீகத்திலிருந்து பல
வருடங்கள்
பயணித்து வந்த ஸல்மான்
அல்ஃபாரிஸீ (ரலி) ஆகிய
பலதரப்பட்டோர்
ஓரணியில்
முஹாஜிர்களாக
(இஸ்லாத்திற்காக
நாடு துறந்தவர்களாக)
நிற்க, யூதர்களின்
சதிவலையில் சிக்கித்
தவித்து அவ்ஸ் என்றும்
கஸ்ரஜ் என்றும்
காலங்காலமாக
கலவரங்கள் செய்து,
தொடர் போராளிகளாய்
காட்சியளித்த
மதீனாவாசிகள்
அனைவரும்
கைகோர்த்து
அன்ஸாரிகளாக
(இஸ்லாத்தின்
உதவியாளர்களாக)
மறுபுறம் ஒற்றுமையாய்
நிற்கின்றார்கள். இந்த
இரு அணியினரையும்
இணைக்கும்
கண்கொள்ளாக்
காட்சி அன்றுதான்
நடந்தேறியது. நபி (ஸல்)
அவர்கள்
மதீனா வந்தடைந்த உடன்
முஹாஜிர்களையும்
அன்ஸாரிகளையும்
அழைத்து ஒருவர்
கரத்தை மற்றொருவரின்
கரத்தோடு இணைத்து
சகோரத்துவ
வாஞ்சையை
விதைத்தார்கள்.
அவர்களின்
திறமைகளையும்
ஆற்றல்களையும்
ஒருமுகப்படுத்தினார்க
ள். சத்தியம் மேலோங்க
அழைப்பாளர்களாகவும்
நீதி நெறியான
ஆட்சி மலர உழைக்கும்
தியாகிகளாகவும்
உருவாக்கினார்கள்.
அது இரு அணிகளின்
இணைப்பல்ல! உலக
மாந்தர்களின்
உள்ளங்களை ஒன்றெனப்
பிணைக்கும் சமுதாய
ஒற்றுமைப் பிரகடனம்!
I am agree with this brother's expressions.
ReplyDeleteSalaam.. appe, neenga sariyaana murail onri aarempinga. naanga ungaloade iniya thayaar. neenge thodengi vali seiya thayaaraa ??
ReplyDeleteadvice panrathu easy..
ReplyDeleteerangi seirathu kashtam..
அன்பின் சகோதரர் தங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள். தற்போது இயங்கும் அத்துனை இயக்கங்ளும் சுயநலத்துடன் செயற்படுகின்றன என்பது தங்களது கட்டுரை குறிப்பிடுகின்றது. சமூகத்தில் உள்ள அத்துனை பிரச்சினைகளையும் கலைய போதுமான ஒரு திட்டத்தை முன்வைத்து மேற்படி விமர்சனத்ததை முன்வைத்திருப்பீர்களாயின் சிறப்பாக இருந்திருக்கும்.
ReplyDeleteசிறந்த திட்டமொன்றுடன் கலத்தில் இறங்குங்கள் உங்களது திட்டத்தின் ஊடாக பிரச்சினைகளை கலைய முடியும் என நிறூபித்துக் காட்டுங்கள் அனைத்து இயக்கங்களும் உங்களுக்கு தோல் கொடுக்கும்.(நீங்கள் பொழுது போக்குக்காக இல்லாமல் சமூக மேன்பாடு கருதி இப்பதிவை இட்டருந்தால்)