உலகில் அசுத்தமான நகரங்களும், சுத்தமான நகரங்களும்..!
உலகிலேயே இந்தியாவின் தொழில் நகரமான மும்பை பெரிய அழுக்கு நகரம் என உலக அளவில் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டோக்கியோவில் உள்ள டிரிப்அட்வைசர்ஸ் சிட்டி என்ற அமைப்பு சுத்தம்- அசுத்தம் தொடர்பான சுற்றுலா நகரங்கள் அடங்கிய தொகுப்பில் ஆய்வு நடத்தியுள்ளது.
இந்த ஆய்வின் படி சுத்தமான நகரம் என்ற பட்டியலில் சுவிஸ் நாட்டின் ஏரிகள் நிறைந்த ஜூரிச் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. ரஷ்யாவின் மாஸ்கோ நகரம் மிகவும் பிரண்டலியான தெருக்களை கொண்டுள்ளதாகவும், ஜப்பான் தலைநகரான டோக்கியோ மிக எளிமையான நகரமாகவும் , மிக அழகு பொருந்தியதாவும் உள்ளது. இங்கு டாக்ஸி வசதிகள் மிக வசதியாகவும், நல்ல முறையில் இருப்பதாவும் உள்ளது. போக்குவரத்து குறைபாடு எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளது.
அமெரிக்காவின் நகராக நியூயார்க், ஷாப்பிங் செய்வதற்கு ஏற்ற நகரமாக பெயர் எடுத்துள்ளது. ஆனால் சுற்றுலா செல்பவர்கள் செல்லும் வீதிகள் மிக சிரமப்படும்படியாக உள்ளது என்றும் இந்த ஆய்வு நடத்திய நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. தூய்மை இல்லாத தெருக்கள் கொண்ட வரிசையில் இந்தியாவின் மும்பை மிக மோசமானதாக இருப்பதாக இடம் கொடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களாக கருதப்படும் 40 நகரங்கள் இந்த ஆய்வு பட்டியலுக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

Post a Comment