Header Ads



சீனா விமானங்களை விரட்டியடித்த ஜப்பான் - இருநாடுகள் இடையே பதட்டம்


சீனாவின் கிழக்கு கடல் பகுதியை ஒட்டிய தீவுகள் யாருக்கு என்ற உரிமை பிரச்னை தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. இந்த சர்ச்சைக்குரிய பகுதியில் இன்று 13-12-2012சீன விமானம் நுழைந்ததாகவும், இதனை ஜப்பான் போர்க்கப்பல் மூலம் விரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இருநாடுகள் இடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது. 

சீனாவின் கிழக்கே உட்சோரித் , சென்காகு, தீவுப்பகுதி உள்ளிட்ட 5 தீவுகளை ஜப்பானும்,சீனாவும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. மீன்வளம் மிக்க இத்தீவு பகுதி தங்களுடையது என சீனாவும், நிலப்பரப்பின்படி கடந்த 100 ஆண்டுகளாக தங்களுடைய பகுதி என ஜப்பானும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இதனால் இரு நாடுகளும் இதனை அரசியல் பிரச்சனையாக கையில் எடுத்துள்ளன.  

சீனாவைச் சேர்ந்த சிலர் சமீபத்தில் இத்தீவுப்பகுதிக்குள் அத்துமீறிநுழைந்ததாக ஜப்பான் கடற்படையால் கைது செய்யப்பட்டு பின்னர் விரட்டியடிக்கப்பட்டனர். சீனாவின் இந்த செயலுக்கு ஜப்பான் பிரதமர் யாஷிஹிட்டோ நௌடாவும் கண்டனம் தெரிவித்தார்.

ஜப்பானைச்சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட கன்சர்வேட்டிவ் பார்லிமென்ட் உறுப்பினர்கள் சிலர் படகு மூலமாக இத்தீவுக்கு அத்துமீறி சென்று அத்தீவின் மையப்பகுதியில் தங்களது தேசியக்கொடியினை நட்டு வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனையடுத்து ஜப்பான் போரவிமானங்களை தீவுகள் கொண்ட ஜப்பான் எல்லை பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக அந்நாட்டு செயலர் ஒருவர் தெரிவித்தார். ஜப்பான் வான் எல்லை பகுதியில் சீன விமானம் நுழைந்ததற்கு அந்நாடு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனாவின் போர் விமானம் நுழைந்தது. ஜப்பான் போர்க்கப்பல் விரட்டியடித்தது, தொடர்ந்து அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.