Header Ads



புத்தளத்தில் நடைபெற்ற ஊடக பயிற்சி பட்டறை (படங்கள் இணைப்பு)


(அபூ நாதில்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் புத்தளம் மாவட்டத்திற்கான  சமூக ஊடக பயிற்சிப் பட்டறை  புத்தளத்தில் 9-11-2012 நடாத்தப்பட்டது. இந்த பயிற்சி பட்டறை இரு பிரிவுகளாக புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லூரியில் நடைபெற்றது. 

புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லூரி மாணவர்களுக்கும் சமூக ஊடகத் துறையுடன் தொடர்புடைய முஸ்லிம்  இளைஞர் யுவதிகளுக்கும் என்று வெவ்வேறாக   . இந்த பயிற்சி பட்டறை ஏற்பாடு செய்யபட்டிருநந்தது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போர செயற்குழு  உறுப்பினர்    எம். பீ. எம். பைறூஸ், தேசிய இணை்ப்பாளர்  ரிப்தி அலி ஆகியோர்  வளவாளர்களாக கலந்து கொண்டனர். 

நவீன உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் சமூக ஊடகத் துறையை வினைத் திறனுடன் செயற்படக் கூடிய வகையில் இளைஞர் யுவதிகளை பயிற்றுவிப்பதே   ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சமூக ஊடக பயிற்சிப் பட்டறையின் நோக்கமாகும்.

 புத்தளம் மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உறுப்பினர்களுக்கு மீடியா அடையாள அட்டைகளும் இங்கு  வழங்கி வைக்கப்பட்டன.  









No comments

Powered by Blogger.