Header Ads



முஸ்லிம் காங்கிரஸ் Vs தேசிய காங்கிரஸ்




முனையூரான்

நாம் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாயினும் எமது தாய் நாடாகிய இலங்கையின் பிரஜைகள் என்பதில் பெருமையடைகிறோம். இந்தப் பெருமிதத்தில் முஸ்லிம்களும் பங்குகொள்வதில் பெருமையடைகின்றனர். அரேபியர்களாகிய முஸ்லிம்களின் முன்னோர் ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்னர்  இலங்கைச் சோனகர் என்னும் இனத்தினரை இங்கு தொடக்கி வைத்தனர். இஸ்லாத்தைத் தழுவிய மக்கள் என்ற வகையில் முஸ்லிம்கள் இந்நாட்டின் நெடுங்கால வரலாற்றுப்; பின்னணியினைக் கொண்டவர்கள். இவ்வரலாற்றுப்  பின்னணியுடன் வாழுகின்றமை அங்கீகரிக்கப்பட்ட வலாற்று நிகழ்வுண்மைகளினால் புலப்படத்தப்படுகின்றன.

இலங்கையில் வாழும் ஏறக்குறைய 2 கோடி மக்கள் சனத் தொகையில் கிட்டத்தட்ட 15 இலட்சம் மக்கள் முஸ்லிம்கள் ஆவர். இந்நட்டடில் வாழுகின்ற முஸ்லிம்களின் எண்ணிக்கையில்  60 வீதமானோர் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளயிலும் (தெற்கில்) 40 வீதமானோர் இவ்விரு மாகாணங்களிலும் வசிக்கின்றனர். 1981ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி தெற்கு முஸ்லிம்கள் தெற்கில் வாழும் மொத்த மக்கள் தொகையில் 5.4 வீதம் மட்டுமே. அதேசமயம் வடக்கு. கிழக்கு இரு மாகாண சனத்தொகையில் ஏறக்குறைய 17 வீதமாகவும் கிழக்கின் மொத்த சனத்தொகையில் 35 வீதமாவும் முஸ்லிம்கள் உள்ளனர். முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் வடக்கு. கிழக்கிற்கு வெளியே வசித்த போதிலும் அநேகமான முஸ்லிம் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படுவது கிழக்கு மாகாணத்திலிருந்தே ஆகும்.

இற்றைக்கு ஏறக்குறைய 80 வருடங்களுக்கு முன்னர் அதாவது 1931ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் முதன்முதலாக நேரடியான மக்கள் வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்ட முதல் முஸ்லிம் பாராளுமன்றப் பிரதி நிதியாக சேர் மாக்கான் மாக்கார் அவர்கள் தெரிவ செய்யப்பட்டார். இவர் தெரிவு செய்யப்பட்ட தொகுதி மட்டக்களப்பு தெற்கு என்று அன்று அழைக்கப்பட்ட தொகுதியாகும்.. மட்டக்களப்பு தெற்குத் தொகுதி என்றால் காத்தான்குடி, கல்முனை, சம்மாந்துறை மற்றும் பொத்துவில் பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசமாகும்.

1931ஆம் ஆண்டில் தொகுதி ரீதியான தேர்தல் நடைபெற்றபோது இலங்கையில் 3 தொகுதிகளில் முஸ்லிம்களின்  வாக்குப்பலத்தினால்  பாராளுமன்றத்திற்கு பிரதிநிதிகளை அனுப்பக் கூடிய பலமிருந்தது. மட்டக்களப்புத் தெற்கு, புத்தளம், மத்திய கொழும்பு ஆகியன அத்தொகுதிகளாகும். ஆனால் அன்றைய தேர்தல் முடிவுகளின்படி மட்டக்களப்புத்0 தெற்குத் தொகுதியில் மாத்திரம்தான் ஒரு முஸ்லிம்  பிரதிநிதி தெரிவானார் முதன்முதலில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் சட்டசபை பிரதிநிதி கிழக்கு மாகாணத்திலிருந்தே தெரிவு செய்யப்பட்டார் என்பது முக்கியமாகிறது.

தனிக்கட்சியொன்றை உருவாக்கி செயற்படவும் கூடுதலான மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யவதற்குமான மக்கள் சக்தியும் வாக்குப்பலமும் முஸ்லிம்கள் கிழக்கில் செறிந்து வாழ்வதனால் சாத்தியமாகிறது. இதனாலேயே தெற்கு முஸ்லிம் தலைமைகள் அக்காலத்தில் சட்டசபைக்கும் பாராளுமன்றதிற்கும் செல்வதற்காக கிழக்கில் போட்டியிட்டார்கள் என்ற வரலாறு எமக்கு புலப்படுத்துகிறது. 

தமது அடிப்படை உரிமைகளைப் பேனிப்பாதுகாக்கவும் தமது அடக்கப்பட்ட உணர்வுகளை வெளிக்காட்டவுமான பலமுள்ள சாதனமாக ஒரு தனி அரசியல் கட்சியை முஸ்லிம் சமூகம் எப்போதும் வேண்டி வந்திருக்கிறது. முதல் அரசியல் ஸ்தாபனம் 1957ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி கல்முனை நகர மண்டபத்தில் இந்தியாவைச் சேர்ந்த மௌலவி எஸ்.எம். மஷு மௌலானா அவர்களி;ன் தலைமையில் நடைபெற்ற கிழக்கிலங்கை பேராளர்களின் மகா நாட்டில் இஸ்லாமிய ஐக்கிய முன்னணி என்ற ஓர் அரசியல் ஸ்தாபனம் உருவாக்கப்பட்டது. இந்த மகாநாட்டில் 275 பேராளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் ஏறக்குறைய பதினாறு பேர் கையெழுத்தைக் கூட வைக்க முடியாமல் தமது பெருவிரல் அடையாளங்களை பதித்திருக்கிறார்கள்  என்ற தகவல் எழுதப்படிக்கத் தெரியாதவர்களிடம் கூட அப்போது மேலோங்கியிருந்த அரசியல் எழுச்சியையும் சமூக உணர்வையும் நம்மால் இனம் கண்டு கொள்ள முடிகிறது.  

இந்த இஸ்லாமிய ஐக்கிய முன்னணிதான் 1960ஆம் ஆண்டின் ஜுலை தேர்தலுக்காக அன்றைய தேர்தல் கமிஷரினால் உதயசூரியன் சின்னத்துடன் அங்கீகரிக்கப்பட்ட முதலாவது அரசியல் கட்சி என்பதை நாம் மறந்து விட முடியாது. இந்த வரலாறுகள் பலருக்கு தெரியாமல் இருக்கவும் கூடும். இஸ்லாமிய ஐக்கிய முன்னணி, இஸ்லாமிய சோஷலிச முன்னணி, மாக்ஷிய 
எதிர்ப்பு முன்னணி, கொழும்பு முஸ்லிம் ஐக்கிய முன்னணி என்று சமூகத்தின்  மத்தியில் பிரபல்யம் அடைந்த எல்லா அரசியல் ஸ்தாபனங்களும் முஸ்லிம்களுக்கு மத்தியில்  'தனிக்கட்சி' என்ற உணர்வின் மீது கட்டி எழுப்பப்பட்டவை என்பதை மறந்து விட முடியாது. 

இந்த உணர்வுச் சிந்தனைகளின் ஆரம்ப வெளிப்பாடே காத்தான்குடியில் 1980ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி விதைக்கப்பட்டு அது 1986ஆம் ஆண்டு தலைவர் அஷ்ரஃப் அவர்களின் தலைமைத்துவத்துடனான அரசியல் கட்சியாக பிரகடனம்  செய்யப்பட்டு வளர்ச்சியடைந்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரஃபின் தலைமைத்துவத்துடனான அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்ட பின் சந்தித்த முதலாவது பொதுத் தேர்தல் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலாகும். இத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வன்னி, திகாமடுல்ல, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக 106,137 வாக்குகளைப் பெற்று தேர்தல் மாவட்ட ரீதியான 3 ஆசனங்களையும் தேசிய ரீதியில் 1ஆசனத்தையும் பெற்றது. 1994ஆம்  ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 7 ஆசனங்களையும்  தலைவர் அஷ்ரஃப் மரணித்த வருடமான 2000ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்டறத்  தேர்தலில் அஷ்ரஃப் அவர்களினால் உருவாக்கப்பட்ட மற்றொரு கட்சியான தேசிய ஐக்கிய முன்னணி பெற்ற ஆசனங்களையும் சேர்த்து 12 ஆசனங்களைப் பெற்றது.  

தலைவர் அஷ்ரஃப் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸை அரசியல் கட்சியாக பதிவு செய்து சந்தித்த தேர்தல்களில் வெற்றி பெற்று இந்நாட்டின் அரசாட்சியை அமைக்கும்  சக்தி சிறுபான்மையினக் கட்சிக்கும் உண்டு என்ற உண்மையை உலகயறியச் செய்தார். அந்தச் சக்தி அஷ்ரஃப் அவர்களின் மரணத்துடன் வழுவிழந்தது. கட்சியின் தலைமைத்துவம் கைமாறப்பட்டதன் பின்னர் இக்கட்சியின் பல உயர்பீட உறுப்பினர்கள் கட்சியின் தலைமைத்துவத்தின் செயற்பாடுகளில் நம்பிக்கையிழந்தனர். தலைவர் அஷ்ரஃப் உருவாக்கிய கட்சி சிதைக்கப்படக் கூடாது என்பதில் அக்கரை கொண்ட உயர்பீட உறுப்பினர்கள் அக்கட்சியின் தலைமையை மாற்ற விரும்பினர்.

' ஒரு கட்சியின் உருவாக்கம் ஒரு தனி மனிதனாலேயே முதன் முதலில்  அறிமுகப்படுத்தப்படுகிறது என்பது உண்மைதான். ஆனால் அவ்வாறான ஒரு கட்சி ஒரு தனி மனிதன் அல்ல' என்ற அஷ்ரஃபின் கூற்றுக்கு ஏற்பவும்    'எனது தலைமையின் மீதோ அல்லது மத்திய குழுவின் மீதோ உங்களுக்கு நம்பிக்கை அற்றுப் போயின் எனது தலைமையையும் மத்திய குழுவையும் மாற்றி வேறு ஒரு அரசியல் கட்சியின் தலைவரோ அமைப்போ அவசமில்லை. இக்கட்சியிலேயே சேர்ந்து இக்கட்சியையே வழி நடத்தி இக்கட்சியையே பொறுப்பேற்று  இக்கட்சி மூலமே உங்கள் நியாயங்களைப் பெறுவதற்கு நானோ, வேறு யாருமோ தடையாய் ஒருபோதும் இருக்க மாட்டோம்' என்று அஷ்ரப் அவர்கள் கட்சியின் 6வது மகாநாட்டில் அளித்த வாக்குறுதிக்கு எற்பவும் அக்கட்சியை விட்டுச் செல்லாமல் கட்சியின் தலைமைத்துவத்தை மாற்ற வேண்டிய தேவை கட்சியின் உயர்பீட உறுப்பினர்களுக்கு ஏற்பட்டவேளை கட்சிக்குள் இருந்து கொண்டு கட்சித் தலைமையை மாற்ற முற்பட்டனர்.  அந்த முயற்சி வெற்றியளிக்காது போனதையடுத்து கிழக்கு தலைமைத்துவத்துடன் கூடிய தனிக்கட்சியொன்றை அமைக்க வேண்டிய தேவை அன்றைய மு.க. உயர் பீட உறுப்பினர்களுக்கு ஏற்பட்டது.

இந்த வரலாற்றின் அடிப்படைப் பின்னணியில் அஷ்ரப் என்ற ஓர் ஆளுமைமிக்க தலைமைத்துவத்தின் பாசறையில் வளர்ந்த தற்போதைய ஆளும்கட்சி அமைச்சரான ஏ.எல்.எம். அதாவுல்லா அவர்கள் அஷ்ரப் காங்கிரஸ் எனும் இயக்கத்தை ஆரம்பித்து  பின்னர் அது தேசிய முஸ்லிம் காங்கிரஸ் என்று மாற்றப்பட்டு ஈற்றில் தேசிய காங்கிரஸ் என்ற பெயரோடு கிழக்கின் சக்தி மிக்க கட்சியாக வளர்ச்சி கண்டு வருகிறது. 

2005இல் கட்சியை ஆரம்பித்து கட்சியின் தலைவர் அமைச்சர் அதாவுல்லா ஆற்றிய உரையினை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும். 'ஒரு ஆளுமைமிக்க தலைமைத்துவத்தின் பாசறையில் வளர்ந்த வாரிசுகள் நாம். அந்த தலைமையின் வழிப்படுத்தலும் நெறிப்படுத்தலும் நம்மை நமது சமூக விடுதலையை நோக்கிப் பயணிக்கச் செய்தன. நாம் நமது அபிலாஷைகளை  வென்றெடுக்கும் போராட்டத்திற்காகக் களமிறங்கினோம். நமது விடுதலைக்கான குரலாகவும் ஒலித்தோம். நமது போராட்டத்தின் நேர்மையும் கூர்மையும் பகைவர்களைக்கூட பயங்கொள்ளச் செய்தன.  நமது ஒற்றுமை நமது போராட்டத்தின் வலிமைமிக்க ஆயுதமாயிற்று. நாம் தேசமெங்கும் பேசப்பட்டோம். அந்த தருணத்தில்தான் விரோதிகளின் குறிக்கு நமது தலைமை இலக்கானது. நாம் அந்த பெரும் தலைவரை இழந்தோம். 

ஆயினும்  நாம் நமது போராட்டப் பாதையில் நின்றும் சறுகி விடவில்லை. தலைவர் காட்டிய செந்நெறியின்பால் பயணித்தோம். புதிய தலைமைக்கு மகுடமிட்டோம். கட்டளைக்குச் செவிசாய்த்தோம். சமூ விடுதலைக்காய் நம்மை நாம் தியாகித்தோம். ஆனால் நடந்தது என்ன. நம்பிக்கை தர வேண்டிய நமது புதிய தலைமை தன்னலத்திற்கு சோரம் போனது. தனித்துவமான நமது கட்சி மாற்றாரின் கைபொம்மையானது. இதனால் நமது விடுதலைக்கான குரலும் அடைக்கப்பட்டது. நமது போராட்ட வடிவங்கள் மாசுபடுத்தப்பட்டன. நமது தலைவர் அஷ்ரப் அவர்கள் கட்டிக்காத்த விடுதலைப் பாதை சிதைக்கப்பட்டது பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? வாய் மூடி மௌனித்திருக்க முடியுமா? சமூகத்திற்காகவே கட்சி கட்சிக்காக  சமூகமல்ல என்ற நிலைப்பாட்டிற்கு வந்தோம். புதிய தலைமையை புறந்தள்ளினோம.; நமது சமூகத்தின் தூய்மையான விடுதலை நோக்கை மட்டும் சுமந்து கொண்டு வெளியேறினோம். 

இப்போது நமது தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்கள் நமக்குச் சொல்லித்தந்த  பாடங்களோடும் நம் சமூக விடுதலைக்காய்ப் போராடும் மாசுபடாத கொள்கையோடும் நாம் புதியதோர் அரசியல் ஸ்தாபனத்தை உருவாக்கியுள்ளோம். அதுதான் குதிரைச் சின்னத்துடன் தேசிய காங்கிரஸ் எனும் அரசியல் கட்சியாகும்' என்று தலைவர் அதாவுல்லா அவர்கள் அன்று கூறினார். இந்த வரலாறுகள் தெளிவுபடுத்தப்படாமலும் இருக்கின்றன.

தலைவர் அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸை  உருவாக்கிய குறுகிய காலத்திற்குள் சந்தித்த தேர்தல்களில் எத்தகைய வெற்றியைக் கண்டாரோ அந்தளவுக்கு பெரிய வெற்றியைக் கானாவிட்டாலும் தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டு 4 வருடத்திற்குள் சந்தித்த சகல தேர்தல்களிலும் தனித்தும், எதிர்கட்சி அரசியல் முஸ்லிம் சமூகத்திற்கு குறிப்பாக கிழக்கு முஸ்லிம்களுக்கு ஒருபோதும் பயனளிக்காது என்ற நிலை தோற்றம் பெறும்போது இணைந்தும் போட்டியிட்டு, பிரதேச, நகர மாநகர சபைகளுக்கான உறுப்பினர்களைப் பெற்றுள்ளதோடு கிழக்கு மாகாணசபையில் ஒரு அமைச்சர் அடங்கலாக 3 உறுப்பினர்களையும் பெற்று அமைச்சரவையிலும்  அமைச்சராக அக்கட்சியின் தலைவர் இருப்பது என்பது இக்கட்சி கொண்டுள்ள இலட்சிய நோக்கங்களுக்கான வெற்றியை தெளிவுபடுத்துகிறது. செயற்படும் கட்சியை வழி நடத்துவதற்கும் புதியதொரு கட்சியை உருவாக்கி அதை வெற்றிப் பாதையில் மக்கள் சக்தியோடு செயற்படுத்துவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அந்தவகையில் கட்சி ஸ்தாபிக்கப்பட்டு குறுகிய காலத்திற்குள் பிரதேச சபை உறுப்பினர் முதல் பாராளுமன்ற உறுப்பினர் வiராயன உறுப்பினர்களை தேசிய காங்கிரஸ் பெற்றிருப்பதானது அதன் பரிமான வர்ச்சியைப் புலம்போட்டுக்காட்டுகிறது. 


6 comments:

  1. தலைப்பிற்கு பொருத்தமில்லாத ஒரு கட்டுரை மட்டுமல்லாமல் தேசிய காங்கிரசுக்கே உரித்தான ஒன்று.. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசோடு, தேசிய காங்கிரசை ஒப்பிடுவது சிறு பிள்ளைத்தனமான செயல்.

    தலைவரின் பாசறையில் வந்தவர்கள் என்று இவர்களுடைய பேச்சில் மட்டுமே காணமுடியுமே தவிர மற்றைய அணைத்து செயல்பாடுகளும் பொம்மை ஆட்டமாகவே இருக்கின்றது. இன்று தேசிய காங்கிரசில் இருக்கும் தலைவரைதவிர மற்றையவர்கள் அனைவரும் வெற்றிலையில் போட்டியிட்டு (கள்ளத்தனமாக) வெற்றிபெற்றார்களே தவிர குதிரையில் அல்ல..

    இவ்வாறு தனது சொந்த சின்னத்தில், தனித்து நின்று தேர்தலில் முகம் கொடுக்க வக்கில்லாத ஒரு கட்சி எவ்வாறு தனது சொந்த சமூகத்தை பாதுகாக்க முடியும்? இவர்கள் சமூகத்திற்காக "இவர்களுடைய வரலாற்றிலே" எங்கேயாவது பேசியுள்ளார்களா?

    மற்றவர்கள் போடும் எலும்புத்துண்டுக்கு ஆசைப்பட்டு அவர்களுடன் ஒட்டிக்கொண்டிருப்பதால்தான் இவர்கள் இப்போது வாய்கிழிய கூறும் "அபிவிருத்தி" நடைபெறுகிறது.. இயலுமானால் தனித்து நின்று இவர்களால் இவைகளை சாதிக்க முடியுமா?

    இன்று முஸ்லிம் சமூகதிர்க்குள்ளே பிளவுகளை ஏற்படுத்த சிங்கள அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றது இவ்வாறான சந்தர்ப்பத்தில் இந்த பொம்மைகளுக்கு எதையாவது "அமைச்சு" கொடுத்து, பணத்தையும் கொடுத்து அபிவிருத்து என்று கூறிக்கொண்டு சமூகத்தை அடியோடு அளிக்க திட்டமிடுகின்றார்கள்.

    இன்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் ஒரு மாபெரிய இயக்கம் இருப்பதனால்தான் இந்த முதுகெலும்பில்லாத அதா.. வுக்கெல்லாம் சலுகைகளும், பதவிகளும் அரசினால் வழங்கப்படுகின்றது. இல்லாவிட்டால் அதே கெதிதான்..

    ReplyDelete
  2. இந்தக் கட்டுரையாளரின் சிறுபிள்ளைத் தனமான நியாயப்படுத்தலுக்கு என்னுடைய சிறுபிள்ளைத்தனமான கண்டனங்களோடு.

    தலைவர் கூறிய விடயமாக அவர் மேலே சுட்டிக்காட்டியுள்ள விடயங்களை நான் தொட்டுக் காட்டும் போது கட்சியின் தலைமையில் ஏதாவது பிரச்சினை வரும் போது அதற்குள்ளுருந்து கட்டான மாற்றங்களை செய்து கட்சியைக் காப்பாற்றுங்கள் என்று தான் தலைவர் சொல்லியிருக்கிறார். ஆனால் அதற்கான கட்சியை அழித்துவிட்டு வேறு ஒரு கட்சியை அமைத்து மண் குதிரையில் ஏறி மாய வித்தை காட்டுங்கள் என்று ஒரு போதும் அவர் சொல்ல வில்லை என்பதை தங்களின் கவனத்திற்கு நான் தெரியப்படுத்த விரும்புகிறேன்.


    இந்த கட்டுரையாளர் அடிக்கடி அடிக்கடி அமைச்சர் அதாவுல்லா தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். என்பதை பல இடங்களில் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் வெற்றி பெறவில்லை வாக்காளர்களின் அபிலாசைகளை பல தடவை குழி தோண்டி புதைத்து அவருடைய எண்ணங்களை வெற்றி செய்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டிலும் நடைபெற்ற பொதுத் தேர்லில் முடிவிகளின் போது அவருடைய விருப்பு வாக்கு கள்ளத்தனத்தின் மூலம் MP ஆனதுடன் கடந்த காலங்களில் நடந்த (2008, 2012) ஆண்டுகளில் நடந்த மாகாண சபையிலும் கூட அவரது விருப்பு வாக்கு கள்ளத்தனத்தின் மூலம் தன்னுடைய வேட்பாளர்களை வெல்ல வைத்து கொள்வதை நாங்கள் அவருடைய வெற்றி என்று நிச்சயமாக கருத முடியாது.
    சிறந்த ஆதாரத்தை நான இங்கு குறிப்பிட விரும்புகிறேன். கடந்த 2012 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் விருப்பு வாக்குகளின் பக்கம் உங்கள் கவனத்தை நான் ஈர்க்க விரும்புகிறேன். அதில் அதாவுல்லா அவர்களினால் செய்யப்பட்ட பித்தலாட்டம் என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

    விடயத்திற்கு வருகிறேன். 2012 ஆம் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் கல்முனைத் தொகுதியில் UPFA கிடைத்த வாக்குகள் 5990 வாக்குகளாகும். ஆதனை நாங்கள் 5990 X 3 = 17970 வாக்குகள் தான் அங்கு விருப்பு வாக்குகளாக வர வேண்டும். ஆனால் அதாவுல்லா தன்னுடைய அமைச்சர் என்ற அதிகாரத்தை அவருடைய கள்ளத்தனமான புத்தியையும் வைத்து செய்துள்ள கைங்கரியம் மொத்த விருப்பு வாக்கு கல்முனைத் தொகுதி சார்பாக 20450 அங்குள்ள விருப்பு வாக்குகளின் மொத்தமாகும். இவ்வாறு தான் தன்னுடைய அவர் தனது தேர்தல் வியுத்தை வகுத்து மக்களின் வாக்காளர்களின் உண்மைத்தன்மையை அவர் தன்னுடைய வேட்பாளர்களுக்கு சாதாகமாக பாவித்துக் கொள்ளுகிறார். இதனை வெற்றி என்று சொல்ல முடியுமாது. வெறும் போலியான மற்றும் கள்ளங்கபடமான நாடகம் என்று தான் கூற வேண்டும்.
    சும்மா, நாலு வாத்தை தெரிந்தால் அரசியல் கட்டுரை எழுதத் தெரியும் என்ற நினைப்பில் எழுதக் கூடாது. இவ்வாறான விடயங்களை மக்களுக்கு சொல்ல வேண்டும் வேண்டும்


    * விருப்பு வாக்கு தொடர்பான உண்மைத் தன்மையை தயவு செய்து தேர்தல் செயலகத்தின் இணையத்தளத்தில் சென்று பார்வையிடலாம்.

    ReplyDelete
  3. இந்தப்பதில் இம்ரான்/fun cell இரண்டு பேருக்கும் பொருந்தும். (இருவரும் ஒரே நபரே)

    நீங்கள் சொல்வது மிகவும் சரியான கூற்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசோடு, தேசிய காங்கிரசை ஒப்பிடுவது சிறு பிள்ளைத்தனமான செயல்தான். எப்படியும் ஒப்பிட முடியாது. றவ்ப் ஹகீமுக்கும் அவர்குடும்பத்திற்கும் SLMC தங்க முட்டையிடும் வாத்து. டிக்கட் எடுக்காமாலே கிடைத்த மஹா பரிசு, கிழக்கில் திருடிய அட்சயபாத்திரம். SLMCயில் அதாவுல்லாவின் உழைப்பும் வியர்வையும் உண்டு உம் தலைவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் என்ன சம்பந்தம் உண்டு. 
    ஆகோவ எப்படி ஒப்பிட முடியும்?

    நிலம் வாங்கி அதை திருத்தி, உழவி, நிலப்பயளையிட்டு வித்திட்டு நீர்பாய்ச்சி உரமிட்டு வளப்படுத்தி யானைக்காவல், பன்றிக்காவல், குருவிக்காவல் பார்த்து பீடை நாசினிகள் தெளித்து,களையெடுத்து, வீடு மறந்து குடும்பம் மறந்து, ஆயுததாரிகளின் அடாவடித் தனத்துக்கும் கொலைகளுக்கும் மத்தியில் எம் உயிர்களையும் பணயம் வைத்து, 'பொரை'களில் தூங்கி, தரைகளில் உண்டி, கரைகளில் குளித்து -- விளைய வைத்த அமோக விளைச்சலை, எம் அறுவடையை உம் தலைவரும் அவர் குடும்பமும் மொத்தமாக அள்ளிக்கொண்டார்களே! இன்னும் எங்களிடமிருந்து பறித்த அந்த 'முஸ்லிம் காங்கிரஸ்' நிலத்தில் தற்போது விளைவன எல்லாம் பதறுகளும் களைகளும் மட்டுமே! 
    ஆகவே எப்படி ஒப்பிட முடியும்?

    அதாவுல்லாவின் தவறுகளை நிச்சயமாக சுட்டிக்காட்டுங்கள் தயவு செய்து காழ்புணர்வு கொண்டு தங்களின் இயலாமைகளை அம்பலத்தில் மொத்த விற்பனை செய்யாதீர்கள்.
    இப்படியான நீங்கள் எப்படி ஒப்பிட முடியும்?

    நமக்கு கசப்பாக இருந்தாலும் ஒரு நிதர்சன உண்மையை தொண்டைக்குக்கீழ் அனுப்பியாகத்தான் வேண்டும்; அதுதான்:
    அதாஉல்லா:  கட்சி உருவாக்கித் தலைவனானவர். 
    றவூப் ஹகீம்:  உருவாக்கிய கட்சியில் சந்தர்ப்பவசமாக தலைவரானவர். இதில் ஆழுமை கூடியவர் அதாவுல்லாதான். ஆகவே,
    எப்பி ஒப்பிட முடியும்?

    ஹகீம் குடும்பத்தினருக்கு ஏதோ திகில் ஏற்பட்டு பல பெயர்களில் புலம்ப ஆரம்பித் திருக்கிறார்கள் போலும். பயப்பட வேண்டாம் போட்ட பிச்சையை நாங்கள் திரும்பி வாங்குவதில்லை.

    மாறாக மேலே குறிப்பிட்ட இ(ஒ)ருவரும் கிழக்கைச் சேர்ந்தவர்களென்றால் அவர்களால் குறிப்பிட்டது போன்று (ஹகீமின்) எலும்புத்துண்டுக்காக எழுதுகிறார்கள். விடுங்கள் அதாவுல்லாவை திட்டி அதில் ஜீவனாம்சம்பெற்று இவர்கள் குடும்பமும் வாழட்டும். 

    வெள்ளை ஆட்டு மந்தையில் கருப்பு ஆடு போல் இந்தக்கிழக்குக் குடும்பத்தில் இப்படியும் சில கருப்பாடுகள்.

    இதை வாசித்ததும் வேகம் தணித்து விவேகம் (இருந்தால்) கூட்டுங்கள்.

    ..கிழக்கான்

    ReplyDelete
  4. அரசியல் பற்றி தெரியாதவர்கள் அரசியல் ஒப்பீடுகளுக்கு comment பண்ண கூடாது. Fun cell world அவருடைய சிறுபிள்ளை தனத்தை அவரே ஒப்புக்கொண்டுள்ளார். Imran சொல்லுவது போல் பொம்மை ஆட்டம் ஆடுவது அதாவுல்லா அல்ல. தற்போதைய முஸ்லிம் காங்கிரஸ் தலைமையே...! மக்களுக்கு ஒன்றை கூறி மக்களின் வாக்குகளை கள்ளத்தனமாய் பெற்றுக்கொண்டு, தன் சொந்த தேவைக்காக மக்களின் ஆணையை விற்ற துரோகச்செயலை கிழக்கு முஸ்லிம் மக்களுக்கு செய்தது யார்?

    கட்சியோ, தலைவரோ உருவாவது மக்களின் தேவைகளை, விருப்பங்களை அரசிடமிருந்து பெற்றுத்தரவே. பிழையான அரசியல் வாதிகளிடம் இப்போது நம் முஸ்லிம் காங்கிரஸ் சிக்கியுள்ளது. இதனால்தான் கிழக்கில் தேசிய காங்ரசும், வடக்கில் அகில இலங்கை முஸ்லிம் காங்கரசும் இருப்பெற்று வளர்ந்து வருகிறது. இவற்றின் வளர்ச்சியை கண்டு சகிக்காத Imran போன்றவர்களின் கூற்றுக்கள் கண்டிக்கத்தக்கவை

    முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு ஆதரவாக தன் அமைச்சுப் பதவியை தூக்கிவீசிய அரசியல் சாணக்கியம் உள்ளவர்தான் அமைச்சர் அதாவுல்லா. அவரது தியாக சிந்தை, அர்பணிப்பு, நல்லெண்ணம் என்பன ஒன்றுசேர்ந்து இப்போது தேசிய காங்ரசாக மிளிர்கிறது. இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் இன்னும்பல வெற்றிகள் பெற்று தேசிய காங்கிரஸ் வளர வாழ்த்துக்கள். கிழக்கானுக்கும் எனது நன்றிகள்...

    ReplyDelete
  5. வாப்பா என்ன புளுக்கம்டா இதுகளால.உடுங்கப்பா உடுங்கோ.உங்களுக்கும் தேவை என்றால் நீங்களும் ஒரு கட்சி ஆரம்பியுங்கோ..அதைவிட்டுவிட்டு ஒப்பிட்டு பேசுறது சார்பாகப் பேசுறது எல்லாமே ஒன்றுதான் உஸ்மானும் உமரும் அலியும் அபூபக்கர உட்டுப்ப்போட்டு எங்கேயுமே ஓடிப்போகல.ஆனா அவங்க நாலு பேருமே சமமானவங்கலாகவே இருந்தாங்க.ஆனாலும் அபூபக்கர் இற்கு உதவியாகவும் பலமாகவும் இருந்தாங்க.ஏன் நான் இதைச்சொல்கிறேன் என்றால் நாம் எல்லோரும் ஒரு உம்மத்.அத மறந்தா நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு கட்சி காலத்தின் தேவை.

    சரி விமர்சனம் செய்ய ஒரு ஒழுக்கம் இருக்கு. அனால் இந்தக்கட்டுரை கைக்கூலியும் வாங்கி கரும்பையும் திங்குறாப்போல இருக்கு.இது தர்மம் அல்ல!.

    ReplyDelete
  6. Hi Aslem Rauff,
    Your comments show that you must be a funny chap. Just a note that you have mentioned about khulafaaurraashdeen's unity and connecting that with the current context. It is not relevant and you are lacking both knowledge politics as well as Islam.

    It is my humble request to brothers that please do not take Islam and its purity as your tool for doing your political compaigns and writings. But if you are serious about Allah, his Rasool's teaching and to fight for it through political ground then - first equipped with the appropriate knowledge and wisdom then fight and write. 
    If this can not be done. Silence is wiser than uttering and penning ignorance.
    Lastly it is my humblest request that:
    1) Please do not try to teach others 'Ethics' as they may have well cultured and highly rich in ethics than you.
    2) Generally do not dictate others as they did not come to you for learning
    3) Do not take Islam as tool and bend it to make your opinion right.
    4)Do Understand the reality that when you all fighting among yourself (among brothers) others will put more fuel to keep the fire burning. Most like to fish in the trouble water.

    ReplyDelete

Powered by Blogger.