கல்முனையில் CTB பஸ்களில் பயணிக்கும் குரங்கு (படம் இணைப்பு)
Mohamed Fathhullah
கல்முனை பஸ் தரிப்பிடத்தில் பல வருடங்களாக இந்த குரங்கு வசித்து வருகிறது. கல்முனைக்கு வந்து செல்லும் அனைவரும் இந்த குரங்கு பற்றி அறிந்திருக்க கூடும். இதில் அதிசயம் என்னவென்றால் CTB பஸ் வண்டிகளில் மாத்திரமே பயணிக்கும். இது பற்றி ஓர் பஸ் Driver இடத்தில் கேட்ட பொது ஓர் சுவாரசியமான கதை ஒன்றை அறிய முடிந்தது.
இந்த குரங்கை உணவு கொடுத்து வளர்த்தவர் ஓர் CTB பஸ் சாரதி. அந்நபர் இறந்து விட்டார்.
அன்றிலிருந்து இக்குரங்கு CTB பஸ்களிலேயே பயணித்து வருகிறது. அடிக்கடி சாரதியின் இருப்பிடத்தை எட்டிப்பார்க்குமாம். சாரதியின் மரணத்திற்கு பிறகும் இவ் ஐந்தறிவு ஜீவன் அந்நபரை தேடிக்கொண்டிருப்பதனானது அதிசயமான ஓர் விடயமாகும்.
மக்கள் விருது பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியான ITN அடபட்டம (Atapattama) நிகழ்ச்சியின் ஊடாகவும் இக்குரங்கு பிரசித்தம் அடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசியல்வாதிகள் இக்குரங்கிடம் படிக்க எவ்வளவோ இருக்கு....
ReplyDelete