கூகுள் நிறுவனத்திற்கு எதிராக லண்டனில் திரண்ட முஸ்லிம்கள் (படங்கள்)
இஸ்லாமிய எதிர்ப்பு திரைப்படத்தை அகற்றாத கூகிள் நிறுவனத்தின் மத்திய லண்டனின் தலைமை அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக லண்டனின் பக்கிங்ஹாம் மாளிகைக்குச் செல்லும் விக்டோரியா பாதை மூன்று மணி நேரம் மூடப்பட்டது.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இஸ்லாமிய எதிர்ப்பு திரைப்படத்தின் 14 நிமிட முன்னோட்டம் கூகிள் நிறுவனத்தின் யூடியூப் இணையதளத்தில் போடப்பட்டதை தொடர்ந்து முஸ்லிம் உலகெங்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
எனினும் தமது நிறுவன கொள்கைக்கு இணங்க அதன் வழிகாட்டலுக்கு அமையவே இந்த வீடியோ தரவேற்றப்பட்டிருப்பதால் அதனை அகற்ற கூகிள் மறுத்தது. ஆனால் லிபியா, எகிப்து, சவூதி அரேபியா, இந்தோனேஷியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் அந்த வீடியோவை கூகிள் தடுத்தது.
இந்நிலையில் இணையதளங்களில் குறிப்பாக யூடியுப்பில் மோசமான கருத்துகளை வெளியிட அனுமதிக்கப்படுவதற்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்டுக் குழு உறுப்பினரான காலித் மஹ்மூத் குறிப்பிட்டார்.

Post a Comment