மாகாண சபை முறையை நீக்குமாறு ஹெல உறுமய வலியுறுத்துகிறது
மாகாண சபை முறையை உடன் நீக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமைய தெரிவித்துள்ளது. கட்சியின் ஊடக பேச்சாளர் நிஸாந்த சிறி வர்ணசிங்க இதனை தெரிவித்தார். இந்த முறைமையானது நாட்டிற்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அது போல் 13 வது திருத்தச் சட்டத்தையும் நீக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று சட்டமூலங்கள் மூலம் பிரிவினை வாதம் ஏற்படுகிறது. பிரிவினைவாதிகளால் சாதிக்க முடியாததை இந்த சட்டங்கள் செய்வதாக தோன்றுகிறது. இதனடிப்படையில் ஜாதிக ஹெல உறுமைய என்ற வகையில் இதனை நாங்கள் எதிர்க்கிறோம். sfm

Post a Comment