துருக்கி - சிரியா நாடுகளிடையே பதற்றம்
சிரிய படைகள் வீசிய குண்டு ஒன்று எல்லையை தாண்டி நேற்று துருக்கியின் எல்லை நகரமான ஆககேலேயில் விழுந்தது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த துருக்கி, சிரியா மீது நேற்று இரவில் இருந்து பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு பதிலடியாக சிரியாவும் தாக்குதல் நடத்தினால் இருநாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழ்நிலை உருவாகலாம். சிரியா குண்டு வீசியதற்கு துருக்கி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு சபை உடனடியாக இதுபற்றி விவாதிக்க வேண்டும் என்றும் துருக்கி வேண்டுகோள் விடுத்து உள்ளது. இந்த பிரச்சினை பற்றி ஆராய்வதற்காக துருக்கி பாராளுமன்றம் இன்று அவசரமாக கூடுகிறது. துருக்கி படைகளும் எல்லையை நோக்கி அனுப்பப்பட்டு வருகின்றன. துருக்கி மீது சிரியா தாக்கியதற்கு அமெரிக்கா வெளியுறவு மந்திரி கிலாரி கிளிண்டனும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

Post a Comment