Header Ads



'நடந்தவற்றை மறந்து புதிய சிந்தனையுடன் கிழக்கு மாகாணத்தை கட்டியெழுப்புவோம்'


எம்.எம்.ஏ.ஸமட்

வேற்றுமைகளை மறந்து புதிய சிந்தனையுடன் கிழக்கை முதன்மை மாகாணமாகக் கட்டியெழுப்ப ஒன்றுபடுவோம் என கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவைப் பேச்சாளரும் வீதி அபிவிருத்தி அமைச்சாரும் தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்..எஸ். உதுமாலெவ்வை குறிப்பிட்டார்.

இன்று (03) கிழக்கு மாகாண சபையின் வீதி அபிவிருத்தி, கட்டடம், நீர்ப்பாசனம், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வள அமைச்சராக பதவிப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும்பொது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு  மேலும் குறிப்பிட்டதாவது,

யுத்தம் நிறைவடைந்த பின் கிழக்கில் வாழும் அனைத்துச் சமூகங்களும் நிம்மதிக் காற்றைச் சுவாசித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தச் சந்தர்ப்பத்தை இந்த மண்ணுக்கு வழங்கிய எல்லோருக்கும் பொதுவான இறைவனுக்கு முதற்கண் நன்றி செலுத்த வேண்டும். யுத்த கரைபடிந்த வரலாற்றை மாற்றி எழுதி இந்நாட்டில் வாழுங்கின்ற அனைத்து மக்களும் சுதந்திரமாக அச்சமின்றி நடமாடவும் தமது வாழ்வாதர நடவடிக்கைகளை சுதந்திரமாக மேற்கொள்ளவும் வழிவகுக்க வேண்டுமென்ற நோக்குடன்  ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது ஜனாதிபதியின் இந்நடவடிக்கையின் காரணமாகவே இன்று இம்மண்ணில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூற விரும்புவதாகக் குறிப்பிட்டார்.

இணைந்த வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டு கிழக்கு மாகாணத்துக்கென நடைபெற்ற இரண்டாவது மாகாண சபைத் தேர்தலில் என்னை ஐக்கிய மக்கள் சுதந்தரி முன்னணியின் வேட்பாளராக தேசிய காங்கிரஸ சார்பில் போட்டியிடச் செய்து தேசிய காங்கிரஸின் இருதயமாhக் கருதப்படும் அக்கரைப்பற்றுப மாநகர மற்றும் பிரதேச மக்களின் அதிகப்படியான வாக்குளைப் பெற்றுத் தந்து என்னை வெற்றிபெறச் செய்த தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவரும் உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லா அவர்களுக்கு நான் நன்றிக் கடன் செலுத்தக் கடமைப்பற்றுள்ளேன். அத்துடன் அக்கரைப்பற்று மாநகர மற்றும் பிரதேச மக்களுக்கும் எனது பிரதேசமான அட்டாளைச்சேனை மற்றும் அம்பாறை மாவட்டத்தில் எனக்கு வாக்களித்த வாக்களிக்காத அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் மற்றும் தமிழ், சிங்கள மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.

கடந்த மாகாணசபையில்  வீதி அபிவிருத்தி அமைச்சராக இருந்து என்னால்; முடிந்தளவில் பல அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ன. ஏறக்குறைய 800 கிலோமீற்றர் கொங்ரீட் பாதை போடப்பட்டுள்ளன. பல தூர்ந்து போன நீர்பாசனக் குளங்கள் மற்றும் ;கால்வாய்கள்; புனரமைப்பு செய்யப்பட்டுள்ளன. இதற்கு எனது அமைச்சு அதிகாரிகள் மாத்திரமின்றி ஏனைய உத்தியோகத்தர்களும் ஒத்துழைப்பு வழங்கியதை மறக்க முடியாது. எதிர்காலத்திலும் எனது அமைச்சினூடான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்வதாகக் குறிப்பிட்டார்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பயனாக இணைக்கப்பட்ட வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மாகாணத்திலும் வாழ்;கின்ற சமூகங்கள் தங்கள் தங்கள் உரிமைகளுடன் வாழ வேண்டும். அதற்கான வழியமைக்கப்பட வேண்டுமெனவு கடந்த 2002ஆம் ஆண்டு முதல் தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவர் குரல் கொடுத்து வந்தார். அது மாத்திரமின்றி வடக்கிலிருந்து கிழக்கு மாகாணம் பிரிக்கப்ட்டு நடைபெற்ற முதலாவது மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்தி முன்னணியின் ஆட்சியின் போது தமிழ் ஒருவர் இம்மாகாண சபையின் முதலமைச்சராக வர வேண்டும் என குரல் கொடுத்தவரும் அவர்தான் என்ற வரலாற்றுப் பின்னணியை ஒரு தரம் மக்களுக்கு புடம்போட்டுக் காட்ட வேண்டீய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது என்றார்.

கிழக்கு மாகாணத்தில்; பல்லின சமூகத்தைச் சார்ந்த மக்கள் வாழு;வதனால் கடந்த மாகாண சபையின் போது எனது அமைச்சினுடாக மேற்கொள்ளப்பட் அபிவிருத்தி நடவடிக்கைகள் எவ்வித இன,மத, மொழி வேறுபாடின்றி மேற்கொள்ளப்பட்டது. அபிவிருத்தி நடவடிக்கைகளின்போது மாவட்டம், பிரதேசம் பாராது சமமாக பிரிக்கப்பட்டு நடவடிக்கைகள் முனனெடுக்கப்பட்டன. 

இன்று நான் மீண்டும் இம்மாகாண சபையின் வீதி அபிவிருத்தி அமைச்சராக இரண்டாவது முறையாகவும் கடமைகளைக் பொறுப்பேற்றுள்ளேன். இன்று முதல் எனது பணிகள் அபிவிருத்தியினூடாக பல்லின மக்கள் வாழும் இம்மாகாணத்தில் சமாதானத்தை ஏற்படுத்துவதாகவே அமையும். அதற்கு மாகாண முதலமைச்சர் நஜீப் மஜீட், மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் மற்றும் சகல அதிகாரிகள் மற்றும் ஊழியாகளின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர் உதுமாலெவ்வை நடந்தவற்றையெல்லாம் மறந்து புதிய சிந்தனையுடன் இம்மாகாணத்தைக் கட்டியெழுப்புவோம் என மேலும் குறிப்பிட்டார்.  



No comments

Powered by Blogger.