Header Ads



கொழும்பிலுள்ள யாழ் மஸ்ரஉத்தீன் சொத்துகைள மீட்க தயார் - பிரபல சட்டத்தரணிகள் உறுதி



யாழ்ப்பாணம் மஸ்ரஉத் தீன் பாடசாலைக்கு சொந்தமான பத்து கடைகளை கொண்ட கட்டிடத் தொகுதியொன்று கொழும்பு கொம்பனித் தெருவிலுள்ள ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தையில் உள்ள நிலையில், அதுதொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு தாம் தயாராகவிருப்பதாக பிரபல முஸ்லிம் சட்டத்தரணிகள் யாழ் முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தனர்.

(யாழ்ப்பாணத்தை சாராத) இந்த பிரபல முஸ்லிம் சட்டத்தரணிகள் யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தின் நன்மை கருதி இதுவிடயத்தில் சட்ட ஆலோசனைகளை வழங்கவும், உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும் தாம் தயாரெனவும் யாழ் முஸ்லிம் இணையத்திடம் கூறினர்.

இதுபற்றிய மேலதிக விபரங்களை விருப்பபடுமிடத்து ஒப்படைக்குமாறும் அவர்கள் யாழ் முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தனர்.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் எம்மால்முடிந்த பங்களிப்புகளை  வழங்க யாழ் முஸ்லிம் இணையமும் தயாராகவுள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்..!!

எமது முன்னைய செய்தி

யாழ்ப்பாணம் மஸ்ரஉத் தீன் பாடசாலை சொத்துக்கள், கொழும்பில் கவனிப்பாறற்ற நிலையில்..!

http://www.jaffnamuslim.com/2012/10/blog-post_5969.html

4 comments:

  1. யாழ்பாணத்தை சேர்ந்த சட்டத் தாரணி முகம்மது ராஜா ரமீஸ் , முகம்மது ராஜா ஜின்னா , சஹாப்தீன் ஆசிரியர் , ரசாத் காதர் ஆகியோர்களே இனிமேலும் தூக்கம் வேண்டாம். உடனடியாக குறிப்பிட்ட சட்டத்தரணிகளை சந்தித்து ஆவன செய்யவும். சஹாப்தீன் மாஸ்டர் வயதானவர். அவரை அலைக்களிக்கதீர்கள். உங்களால் முடியாவிட்டால் துடிப்புள்ள இளைஜர்களன ஜே டி எம் நியாஸ் குழுவினரிடம் அதனை ஒப்படைக்கவும்.

    ReplyDelete
  2. இதில் பெயர் குறிப்பிட்டுள்ள எவரும் தலை இடாமல் இருந்தாலே விடயம் முடிந்த மாதிரித்தான்.ஆனால் உமர் மாஸ்டர் (சிஹாப்தீன்)அவரின் ஆலோசணைகளை கேட்டு செயல்படுங்கள்.22 வருடங்களுக்கு முன் அதோடு தொடர்புடையவர்கள் வாடகை சம்பந்தமாக மிகப் பெரிய தாடி,ஜுப்பா,தொப்பி அணிந்த வேசதாரியிடம் கதைக்க
    போனார்கள்.அந்த ரவுடிஎன்ன சொன்னான் தெரியுமா ? எல்லாம் இழந்து வந்திருக்கிறீர்கள்,இருக்கிறதையும் பறித்துக் கொண்டு விடுவேன் என்று அடாவடித்தனமாக கதைத்திருக்கிறான்.2 அல்லது 3 கடைகளை வேறு ஆட்களுக்கு
    கைமாற்றி கொடுத்து,தான் , தான் பில்டிங் உரிமையாளன் என்று வாடகை வசூலித்துக் கொண்டு இருக்கிறான்.அத்தனை கடைகளையும் எல்லோரும் ஒப்படைக்க வேண்டும்.தவறும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட யாழ் முஸ்லிம்கள் அனைவரும்
    அவர்களுக்கெதிராக அல்லாஹ்விடம் முறையிட்டு பிராத்திக்க வேண்டும்.பாதிக்கப்பட்டவர்களின் துஆவுக்கு அல்லாஹ்விடம் பெறுமதியிருக்கு என்பதை ஊர் சொத்துக்கு ஆசைப்படுபவர்களுக்கு அல்லாஹ் புரிய வைப்பான்.
    நீங்கள் அடங்குவதற்கு ஆறடி நிலம் வேண்டுமென்றால் எங்கள் சொத்தை உடன் திருப்பி தரவும்

    ReplyDelete
  3. இதற்குரிய முயற்சிகள் பல வருட காலமாக நடந்து கொண்டிருக்கின்றன. இது சம்பந்தப்பட்ட யாரும் தூங்கிக்கொண்டிருக்கவில்லை. இங்கு குறிப்பிட்ட வேஷதாரி இறந்து விட்டார் என அறிகிறோம். அவர் உயிருடன் இருக்கும் போதே அவருடன் வாதிட்டவர்கள் இன்னும் உயிருடன் உள்ளார்கள். சட்ட நடவடிக்கைகளுக்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக கேள்வி. சில நடைமுறைச்சிக்கல்களால் தாமதம் ஏற்பட்டுள்ளது. யாழ் முஸ்லிமின் முயற்சியை பாராட்டும் அதே வேளையில், தனி மனித கோப தாபங்களை வைத்து இந்த முயற்சிகளில் ஈடுபடும் நபர்களை புண்படுத்தும் விதத்தில் கருத்துக்களை பதிய வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete

Powered by Blogger.