பறகஹதெனிய தேசிய பாடசாலையின் 'மிளிரும் தாரகை' நூல் வெளியீடு (படங்கள்)
(இக்பால் அலி)
பறகஹதெனிய தேசிய பாடசாலையின் வரலாற்றில் நூலொன்று வெளிக் கொணரப்படுவது என்பது மிகுந்த முக்கியத்வம் வாய்ந்த அம்சமாகும். இது பாடசாலையின் கல்வி வளர்ச்சியினை எடுத்துக் காட்டி நின்றபோதிலும் இவ்வாறான நல்ல நிகழ்வுகளை நடத்துவதற்கென ஒரு கேட்டபோர் கூடம இல்லாதிருப்பது பெரும் குiறாபாடாக உள்ளன என்று குருநாகல் கல்வி வலய தமிழ் மொழிப் பிரிவுக்கான இணைப்பதிகாரி எஸ். ஏ. எம். இஸ்தார் தெரிவித்தார்.
பறகஹதெனிய தேசிய பாடசாலை வணிகப் பிரிவு மாணவர்களின் ஏற்பாட்டில் ' மிளிரும் தாரகை ' நூல் வெளியீட்டு விழா பாடசாலை மண்டபத்தில் அதிபர் ஐ. அப்துர்ரஹ்மான தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட குருநாகல் கல்வி வலய தமிழ் மொழிப் பிரிவுக்கான இணைப்பதிகாரி எஸ். ஏ. எம். இஸ்தார் அங்கு இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
1994 ஆம் ஆண்டு இந்தப் பாடசாலை ஒரு தேசிய பாடசாலையாகத் தரம் உயர்த்தப்பட்ட போதிலும் அதற்குரிய வளங்கள் இன்னும் சரியாகக் கிடைக்கவில்லை. உரிய பௌதிக வளப் பற்றாக் குறையுடன் இப்பாடசாலை பல சிரமங்களுக்கு மத்தியில் கல்வித் துறையில் மேம்பாட்டிக் கொண்டு செயற்படுகிறது. என்று அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.
பாடசாலை அதிபர் ஐ. அப்துர்ரஹ்மான் உரையாற்றுகையில்,
நூல் வெளியீடு என்பது சாதாரண விடயமல்ல. இது பாடசாலை மாணவகளின் செயற் திட்ட வேலைப்பாடு இவர்களுடைய கன்னி முயற்சியை பாராட்டுதல் வேண்டுமே தவிர விமர்சித்து மட்டம் தட்டுதல் பொருத்தப்பாடுடைய செயல்லல. குறைகளை இனங்கண்டு எதிர் காலத்தில் அதற்குரிய நிறைகளை நிவர்த்தி செய்ய முடியும். இந்தச் சஞ்சிகை இப்பாடசாலையின் ஒரு வரலாற்றுப் பொக்கிசமாக மிளிரும் என்பதில் இரு கருத்துக் இடமில்லை என்று அவர் அங்கு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் குருநாகல் கல்வி வலய வணிகப் பிரிவு ஆசிரியர் ஆலோசகர் அஜ்வாத் மற்றும் மாவத்தகம பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் முஹமட் ரிபாழ், பிரதேச சபை உறுப்பினர் யாசீம் சேர், மற்றும் ஊது முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வுக்கு முஸ்லிமல்லாத ஒரு அதிகாரி, உத்தியோகத்தர் அழைக்கப் பட்டிருக்க வேண்டும். சமூக நல்லுறவுக்கான வழிகள் இவ்வாறான நிகழ்வுகளில் மேற்கொள்ளப் பட வேண்டுமே தவிர, பெருநாள் தொழுகைக்கும், இப்தாருக்கும் முஸ்லிமல்லாதவர்களை அழைப்பதன் மூலம் அல்ல.
ReplyDeleteமுஸ்லிம்களை மட்டுமே அழைக்க வேண்டும் என்பதனாலேயே, மாவத்தகம பிரதேச சபைத் தலைவரை விட்டுவிட்டு, எதிர்க் கட்சித்தலைவரைப் போய் அழைத்திருக்கின்றார்கள். பிரதேச பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரியை அழைத்திருக்கலாம், தவறி விட்டார்கள்.
பறகஹதெனியாவில் இஜ்திமா என்று வரும் பொழுது, போக்குவரத்து ஏற்பாடு, வீதித்தடை, பிரதான வீதியில் வேகக் கட்டுப்பாடு என்று பொலிஸார் எவ்வளவு பாடு பட்டு இருப்பார்கள். நக்குத் தேவை என்றால் மட்டும் அவர்களை நாடுகின்றோம். அனால் நமது நிகழ்வுகளில் அவர்களைப் புறக்கணிக்கின்றோம்.
முஸ்லிம்கள் எவ்வளவு குறுகிய வட்டத்துக்குள் சிந்திக்கின்றார்கள் என்பதனையே இந்நிகழ்வு சுட்டிக் காட்டுகின்றது.