Header Ads



அநுராதபுரத்தில் தீ மூட்டப்பட்ட பள்ளிவாசலுக்கு அமைச்சர் றிசாத் விஜயம் (படங்கள் இணைப்பு)



அநுராதபுரம் மல்வத்து லேன் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலை தீயிட்டவர்களை உடனடியாக கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் பொலிஸ்மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தீயிடப்பட்ட பள்ளிவாசலை பார்வையிட்டு, குறித்த பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக அங்கு சென்றிருந்த அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் அப்பகுதி மக்கள் தமதும், தமது பள்ளிவாசலினதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்தின் நின்றபடியே பொலிஸ்மா அதிபரை தொடர்பு கொண்டுள்ள அமைச்சர் றிசாத், பள்ளிவாசல் தீயிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், வடமத்திய மாகாண முதலமைச்சருடனும் தொடர்புகளை ஏற்படுத்தி பள்ளிவாசல் சம்பவம் தொடர்பில் உரையாடியுள்ளார்.

இதன்போது பள்ளிவாசல் சீரமைப்புக்காக உடனடியாக 5 இலட்சம் நிதியை ஒதுக்கீடு செய்து தருவதாக முதலமைச்சர் அமைச்சர் றிசாத்திடம் வாக்குறுதி வழங்கியுள்ளார்.

அதேவேளை  பிரதேச மக்கள் இதன்போது அமைச்சர் றிசாத்திடம் சிங்கள - முஸ்லிம் மக்களிடையே நிலவும் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு சில திட்டமிட்ட சக்திகள் முயலுவதாகவும், இது முறியடிக்கப்பட வேண்டுமெனவும், தமது பள்ளிவாசல் தீயிடப்பட்டபின்னர் அதனை பார்வையிடவும், ஆறுதல் கூறுவதற்காகவும் வந்த ஒரேயொரு முஸ்லிம் அரசியல்வாதி அமைச்சர் றிசாத் பதியுதினே என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்போது பதில் வழங்கியுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன், முஸ்லிம்களுக்கு எதிராகவும், அவர்களின் பள்ளிவாசல்களுக்கு எதிராகவும் நடைபெறும் இதுபோன்ற அநீதியான செயற்பாடுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும், தாம் கபினட் அமைச்சராக இருந்தபோதும் முஸ்லிம்களுக்கு எதிரான பாதிப்புகளின் போது ஒருபோதும் மௌனியாக இருக்க முடியாதெனவும், இவ்விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் அநுராதபுரம் பள்ளிவாசல் தீயிடப்பட்ட சம்பவம் தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக அறியவருகிறது. இருந்தபோதும் இதுதொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து வெளிப்பட்ட பிரதிபலிப்பு குறித்து எத்தகைய கருத்துக்களையும் இதுவரை யாழ் முஸ்லிம் இணையத்தினால் அறிந்துகொள்ள முடியவில்லை.









2 comments:

  1. முதலில் விஜயம் அத்துடன் ஒரு சில போட்டோக்கள் (பத்திரிகைகளுக்கு) அதன் பின் கண்டன அறிக்கை அவ்வளவுந்தான் எமது அரசியல் வாதிகளின் வேலை முடிந்து விடும்.

    ஒரு சில வாரங்கள் கழித்து மீண்டும் ஒரு பள்ளி நாசமாக்கப்படும்.

    யா அல்லாஹ் இவர்களின் சூழ்ச்சிகளில் இருந்து எம்மை நீயே பாதுகாப்பாயாக!

    ReplyDelete
  2. Muthuhu elumbu ellatha muslim politician (enga periyawara kana ella athu than mr hakeem )?

    ReplyDelete

Powered by Blogger.