குரோஷியாவில் இப்படியும் நடந்தது
குரோஷியா நாட்டை சேர்ந்த கிறிஸ்தவப் பாதிரியார் சைம் நிமாக். 34 வயதாகும் இவர் சாக்ரெப் என்ற பகுதியில் வசித்து வருகிறார். சாக்ரெப் பகுதியில் உள்ள ஒரு தேவாலயம் இவரது கட்டுப்பாட்டில் விடப்பட்டிருந்தது. இதனால் அந்த தேவாலயத்துக்கு சொந்தமான சொத்துக்களை அவர் பராமரித்து வந்தார்.
இந்த நிலையில் பாதிரியார் சைம் நிமாக்குக்கும் தேவாலயத்துக்கு வந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. தன்னை விட வயதில் மூத்த அந்த பெண்ணை பாதிரியார் சைம் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கிடையே தேவாலய சொத்துக்களை பாதிரியார் சைம் நிமாக் ரூ.9 கோடிக்கு விற்பனை செய்தார். அந்த பணத்தை எடுத்துக் கொண்டு அந்த பெண்ணுடன் ஊரை விட்டு ஓடிவிட்டார். இது பற்றி அந்த பெண்ணின் கணவர் யோசிப் புகார் செய்தார். இதையடுத்து பாதிரியார் சைம் நிமாக்கை போலீசார் தேடி வருகிறார்கள்.

Post a Comment