அமைச்சர் றிசாத் மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
மன்னாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா
மன்னார் நீதவானை அமைச்சர் றிசாத் பதியுதீன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட சம்பவம் குறித்த வழக்கு விசாரணை வியாழக்கிழமை மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மன்னார் மேலதிக நீதவானும்,நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டவருமான ரங்க திசாநாயக்க முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
தமது தரப்பு வாதியின் நியாயங்களை முன்வைத்த சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் இந்த வழக்குக்கு தேவையான இரகசிய பொலீஸாரின் அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்கான போதுமான ஆதாரங்களை காணமுடியவில்லை என்பதால்,தமது கட்சிக்காரான றிசாத் பதியுதீனின் கருத்துக்களையும் அவரால் முன் வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டிய அவசியத்தையும் சட்டத்தரணிகள் மன்றில் முன்வைத்தனர்.
அதே வேளை இரகசிய பொலீஸார் சார்பில் மன்றில் ஆஜரான ரொஸான் தமது விசாரணைகள் முடிவடைந்துள்ளதாகவும் அதனது அறிக்கையினை மன்றில் தாம் சமர்ப்பிப்பதாகவும் கூறினார். அதனையடுத்து நீதவான் ரங்க திசாநாயக்க மீண்டும் இந்த வழக்கை எதிர்வரும்,நவம்பர் மாதம் 28 ஆம் திகதி புதன்கிழமை விசாரணைக்கு எடுப்பதாக தெரிவித்தார்.
Post a Comment