Header Ads



டுபாயில் திருடிய இலங்கையர் மாட்டினார்


டுபாய் விமான நிலையத்தில் வந்திறங்கிய சவூதி அரேபியப் பெண்ணொருவரின் பயணப் பையை திருடியதாகக் கூறப்படும் இலங்கை பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரிய வருவதாவது,

டுபாய் விமான நிலையத்தில் வந்திறங்கிய சவூதி அரேபியப் பெண்ணொருவர் விமான நிலையத்தில் இலங்கை பிரஜையின் காரை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு சென்றார். இப்பெண் தனது பயணப் பையை காரில் விட்டு இறங்கிய போது இச்சாரதி காரை விரைவாக எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.

தனது பயணப்பை திருடப்பட்டுள்ளதாக அப்பெண் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து ஒரு சில நாட்களின் பின் இச்சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

டுபாய் விமான நிலையத்தில் வாடகைக்கு அமர்த்தப்படும் கார்களை அவதானிப்பதற்கு நவீன தொழில் நுட்ப வசதிகளுள்ளன. இதனடிப்படையிலேயே இச்சாரதி கைது செய்யப்பட்டார். இப்பெண்ணின் பயணப் பையில் மடிக்கணினி, ஐபாட் கருவி, சுமார் 4,300 டினார் பணம் காணப்பட்டதாக எமிரெட் அல்யூம் டெய்லி செய்திச் சேவை தெரிவித்துள்ளது. (Vi)

No comments

Powered by Blogger.