யாழ். பொம்மைவெளி முஸ்லிம்களின் அவலம் - 5 முஸ்லிம் மாநகர சபை உறுப்பினர்களும் கவனிப்பார்களா? (படங்கள்)
பா.சிகான்
யாழ் மாவட்டத்தில் ஜே 87 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பொம்மை வெளி முஸ்லீம் கிராமத்தின் தேங்கியுள்ள வெள்ள நிலையினை படத்தில் காண்கிறீர்கள்.அண்மையில் யாழ் மாவட்டத்தில் பெய்த மழையினால் மேற்படி கிராமம் வெள்ள நிலைமையினை எதிர்கொண்டது. இதனால் அங்கு வாழ்ந்த மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதுதவிர மழை காலங்களில் அடிக்கடி வெள்ள நீரினால் மூழ்கடிக்கப்படும் கிராமமாக இதன் பெயர் இங்கு பேசப்படுகிறது.
இங்கு சுமார் 200 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இக்கிராம மக்கள் குறித்து யாழ் மாநகர சபையில் அங்கம் வகிக்கும் 5 முஸ்லீம் பிரதிநிதிகள் கவனிப்பதில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். தற்போதைய வெள்ளநிலையால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளதுடன் டெங்கு நோய் பரவும் அபாயமும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த மூன்று வருடங்களாக இந்த மாநகர சபை உறுப்பினர்கள் யாழ் மாநகர சபை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் எதையும் செய்ய வில்லையமே. இவர்கள் மாநகர சபையின் கதிரைகளை மட்டும் சூடாக்கினால் போதும் வேறு ஒன்றும் கேட்கக் கூடாது என்று கண்டிப்பான உத்தரவு போடப் பட்டுள்ளது போலும். பதினைந்து ஆயிரத்துக்கு மாநகர சபையுடன் ஒட்டிக் கொண்டிராமல் பதவி விலகி வீட்டில் இருந்தால் வரலாறு இவர்களை தியாகிகள் என்று சொல்லும்.
ReplyDeleteமாநகர பிரதி மேயர் பதவிக்காக நடத்திய போராட்டத்தில் ஒரு சிறு பகுதியையாவது சேற்றுக்குள் வாழும் இந்த முஸ்லிம்களுக்காக போராடினால் என்ன?