யாழ்ப்பாணம் மஸ்ரஉத் தீன் பாடசாலை சொத்துக்கள், கொழும்பில் கவனிப்பாறற்ற நிலையில்..!
(முஹம்மத்)
யாழ்ப்பாணம் மஸ்ரஉத் தீன் பாடசாலைக்கு சொந்தமான பத்து கடைகளை கொண்ட கட்டிடத் தொகுதியொன்று கொழும்பு கொம்பனித் தெருவிலுள்ள ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தையில் இருக்கின்றது.
1990 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் வெளியேற்றப்படும் வரை இக்கடைகளுக்கான வாடகைகள் ஒழுங்காக வசூலிக்கப்பட்டு வந்துள்ளது. 1990 ஆம் முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் இக்கடைகளுக்கான வாடகைகளை அவற்றை நடத்துவோர் செலுத்துவதில்லை.
இக்கடைகளுக்கான வாடகைப்பணம் மஸ்ரஉத்தீன் பாடசலையின் செலவுகளை சமாளிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தற்போது யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் மீளக்குடியேறியுள்ள நிலையில் இவற்றுக்கான வாடகைப்பணங்களை பெற்றுக் கொள்வதற்கோ அல்லது வாடகை தர மறுப்பவர்களை வெளியேற்றவோ இதனை நிர்வகிக்கும் நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. இக்கடைகள் ஒவ்வொன்றும் தற்போது பலகோடி ரூபாய்கள் பெறுமதியானவை.
இதன் நிர்வாக சபை உறுப்பினர்களாக சிஹாபுதீன் ஆசிரியர் மற்றும் மர்ஹும்களான பீகோ அப்துல் ரஸாக், முஹம்மத் ராஜா ஆகியோர் இருந்துள்ளனர். தற்போது மரணித்தவர்களின் பிள்ளைகள் அந்த நிர்வாகத்தை பொறுப்பெடுத்து இந்தச் சொத்துக்களை பெற்றுக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
இந்த கடைகளில் ஒன்று ஒரு ஜமாஅத்தின் உறுப்பினரால் நடத்தப்படுகிறது. அவர் பணம் செலுத்த மறுப்பின் அவரது ஜமாஅத் தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு அவரைப் பற்றி கூறி அந்தக் கடையை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அவர்கள நேர்மையாக திருப்பித் தராதவிடத்து இலங்கை வருமான வரித் தினைக்களத்துக்கு அவர்கள் பற்றிய விபரங்களை தெரிவித்து அவர்கள் மீது வருமான வரி குற்றச்சாட்டு சுமத்தி உள்ளே தள்ளலாம்.
மேலும் இலங்கை வக்பு சபைக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி பொலிசுக்கு அறிவித்து அவர்கள் மூலமாகவும் கடைகளை மீளப் பெற்றுக் கொள்ளலாம்.
எது எப்படியிருப்பினும் இக்கட்டிடங்களின் பராமரிப்பாளர்கள் உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டும் என யாழ்ப்பாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட 22 வருட ஞாபகார்த்தத்தை முன்னிட்டு கேட்டுக் கொள்கின்றோம்...!

அடப் பாவிகளா, முழு சோனக தெருவையும் புனரமைக்க இந்த ஒரு சொத்துமே போதும்.உடனடியாக ஆக வேண்டியதைப் பாருங்கள்.தேன் எடுப்பவன் புறங் கையை நக்குவான் என்றது போல் இல்லாமல் ஒவ்வொரு
ReplyDeleteசதமும் அதற்குரிய வழிகளை சென்றடைய வேண்டும்.