Header Ads



பேஸ்புக்கின் சாபக்கேடு..! தாய்மாரின் அவமானம்..!!


அமெரிக்கா மற்றும் பிரிட்டனை சேர்ந்த பெண்கள், சமூக வலைதளங்கள் மூலம், தாய்ப்பால் விற்பனை செய்து வருகின்றனர். "பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் அவசியம்' என, டாக்டர்கள் கூறுவதால், இதன் அவசியத்தை, இளம் தாய்மார்கள் உணர்ந்துள்ளனர். ஆனால், சிலருக்கு போதிய பால் சுரக்காத காரணத்தால், பவுடர் பாலை கலந்து, குழந்தைக்கு புகட்டுகின்றனர். அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் உள்ள பெண்கள், அதிகப்படியாக சுரக்கும் பாலை, "பேஸ் புக்' போன்ற சமூக வலைதளங்களில் அறிவிப்பு செய்து விற்கின்றனர். தாய்ப்பால் பற்றக்குறையாக உள்ள பெண்களும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பலன் பெறுகின்றனர்.

இந்த நடைமுறைக்கு, வரவேற்பு அதிகரித்துள்ளதால், தாய்ப்பால் சேகரிப்பு மையங்கள் உருவாகியுள்ளன. பாலை பெற்று அதை பதப்படுத்தி தேவைப்பட்டோரிடம் விற்கப்படுகிறது. "எங்களது பால் சுத்தமானது' என, விளம்பரம் செய்யப்பட்டு, ஒரு அவுன்ஸ் (30 மி.லி.,) 80 ரூபாய் முதல், 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

"முன்பின் தெரியாத பெண்கள் மூலம் பெறப்படும் தாய்ப்பால், குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்' என, ஜெர்மன் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

டாக்டர்கள் மேலும் கூறியதாவது,,

தாய்ப்பாலை விற்கும் பெண், எச்.ஐ.வி., போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு, வீரியமான மருந்துகளை உட்கொண்டிருக்கலாம். இது போன்ற பெண்களிடமிருந்து பெறப்படும் பால், குழந்தைக்கு, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். அது மட்டுமல்லாது, ஆறு மாத குழந்தைக்கும், ஒரு வயது குழந்தைக்கும், தேவையான சத்து மாறுபடும். எனவே, தாய்ப்பாலை மற்றவர்களிடமிருந்து பெறுவது ஆபத்தானது. தாய்ப்பால் சுரக்காத பெண்கள், பவுடர் பாலையே குழந்தைக்கு கொடுக்கலாம். இது சுகாதாரமானது. இவ்வாறு டாக்டர்கள் கூறியுள்ளனர்.

No comments

Powered by Blogger.