Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம் வட்டார பகுதிகளுக்கு மேயர் விஜயம் (படங்கள்)


முஸ்லிம் வட்டார வீதிகள் காப்பற் வீதியாக மாற்றப்படுவதை யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, நேரில் சென்று பார்வையிட்டார். 

 முஸ்லிம் வட்டார அப்பகுதியில் உள்ள வடிகால்கள் சீர் அமைக்கப்படாமல் இருந்த காரணத்தால் காப்பற் வீதி அமைப்பதை முன்னெடுத்து செல்வது தடையாக இருப்பதாகவும் இவ்வடிகால்கள் சரியான முறையில் சீராக்கப்பட்ட பின்னரே காப்பற் வீதி அமைப்பை தொடர முடியும் என்று முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதனை கவனத்தில் எடுத்த முதல்வர் குறித்த வடிகால்களை உடனடியாக சீர் செய்து  காப்பற் வீதி அமைக்கும் பணியை துரிதப்படுத்துமாறும். அப்பகுதியில் டெங்கு போன்ற நோய்கள் ஏற்படாமல் இருக்க நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்த உடன் நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

இதன்போது யாழ்.மாநகரசபை உத்தியோகத்தர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள்,தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் ஆகியோர் உடனிருந்தனர். 






No comments

Powered by Blogger.