Header Ads



மாகாண அதிகாரங்களை அபகரிக்கும் திவிநெகும - முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாக வாக்களிப்பு



TM

திவிநெகும உத்தேச சட்டமூலம் மேலதிக ஆறு வாக்குகளினால் இன்று செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த உத்தேச சட்டமூலத்துக்கு ஆதரவாக 21 வாக்குகளும் எதிராக 15 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. 

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த உத்தேச சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன எதிராக வாக்களித்துள்ளன.

 இச்சட்டமூலம் தொடர்பில் எமது கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை கலந்துரையாடிய பின்னர் சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துளோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை குழு தலைவர் ஏ.எம்.ஜெமீல் அறிவித்தார்.

 இதனையடுத்தே இச்சட்டமூலம் கிழக்கு மாகாண சபையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. இதன்போது ஆறு மேலதிக வாக்குகளினால் திவிநெகும உத்தேச சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. இதன் பின்னர் கிழக்கு மாகாண சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.