ஹிஸ்புல்லா இயக்க முக்கிய கமாண்டர் சிரியாவில் படுகொலை..?
சிரியா நாட்டில் புரட்சிப் படையினருடன் நடைபெற்று வரும் சண்டை உச்சக்கட்டம் அடைந்துள்ளது. பக்கத்து நாடான லெபனானில் இயங்கி வரும் ஷியா இயக்கமான ஹிஸ்புல்லா, அரசுப் படைக்கு ஆதாரவாக சிரியாவில் சண்டையிட்டு வருகின்றனர்.
எல்லையோரத்தில் புரட்சிப் படையினர் நடத்திய திடீர் தாக்குதலில் அலி ஹுசைன் நாசிப் என்ற ஹிஸ்புல்லா கம்மாண்டர் உட்பட பலர் இறந்தனர் என்று கூறப்படுகிறது.
ஹிஸ்புல்லா இயக்கத்தினர் சிரியா அரசுப்படைக்கு பயிற்சி, அறிவுரை, மற்றும் போக்குவரத்து போன்ற பல வழிகளில் உதவி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. சிரியா ராணுவ நடவடிக்கை குறித்து நேட்டோ மற்றும் அப்பகுதி அரசுகள் விமர்சிக்க வேண்டாமென ரஷியா கேட்டுக் கொண்டுள்ளது.
சிரியாவில் நடந்துவரும் தீவிர சண்டைக்கு 3,11,500 பேர் அகதிகளாக பக்கத்து நாடுகளுக்கு வந்துள்ளனர் என்று ஐ.நா. அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

Post a Comment