Header Ads



கண்டி ஒறாபி பாஷா கலாசார நிலையம்..!



கண்டி ஒறாபி பாஷா  கலாசார நிலையத்தின் பணிப்பாளர் எம். ஹபீழ் சலீம்தீன். இவர்  கண்டியில் மூன்று தசாப்த காலங்களுக்கு மேலாக அதிக சமூக இயக்கச் செயற்பாடுகளில் ஈடுபாடுடையவர்.  அகில இலங்கை வை. எம். எம். சம்மேளனத்தின் தலைவராகவும், அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் ஹலால் தரச் சான்றிதழ் வழங்கும் சபையின் உறுப்பினராகவும் மற்றும் இதற்கப்பால் மனிதாபிமான   சமூக நலச் செயற்பாட்டினூடதக தேசிய ரீதியில்   தம் காலை ஊன்றி பதித்தவர். கண்டி தாருல் உலூம் அல் புர்க்கானிய்யாஹ்வின்  உருவாக்கத்தின் ஸ்தாபகர் தலைவர் எனப் பல சமூகப் பங்களிப்புக்கு உரித்துடைவர் எனப் பாராட்டப் படக் கூடிய சலீம்தீன்  ஜவ்னா முஸ்லிமுக்கு வழங்கி செவ்வி.

நேர்காணல் இக்பால் அலி

கண்டி ஓறாபி பாஷா நூதன சாலை எப்போது தோற்றம் பெற்றது எனக் கூற முடியுமா?

ஆம். ஒறாபி பாஷா 1892 முதல் 1901 ஆம் ஆண்டு வரை கண்டியில் தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தார். இவர் வசித்து வந்த இல்லமே இன்று இவரது பெயரால் நூதன சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இது கண்டி ஜோர்ஜ் ஈ டி சில்வா மாவத்தையில் உள்ள 26 வது இலக்க இல்லமாகும். ஒறாபி பாஷh வாழ்ந்த காலத்தில் இது ஹல்லொலுவ வீதி என அழைக்கப்பட்டது. இந்த இல்லம் நூதன சாலையாக மாற்றம் பெறும் காலம் வரை இது அறபி இல்லம் என்றே அழைக்கப்பட்டது. இலங்கையிலும் எகிப்திலும் நடைபெற்ற ஒறாபி பாஷாவின் நூற்றாணடு விழாவின் போது எகிப்திய அரசாங்கம் இதனை விலைக்கு வாங்கத் தீர்மானித்தது. தனிமனித உடமையாக இருந்தாலும் இலங்கை அரசாங்கத்தின் மூலமாக எகிப்திய அரசாங்கம் இதனை வாங்க வேண்டியிருந்தமையால் இரு நாடுகளுக்கிடையிலான தூதரகங்கள் மூலம் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.

இக்கால கட்டத்தில் ஹிஜ்ரி 1400 ஆண்டு விழா முஸ்லிம் சமய கலாசார அமைச்சின் ஆதரவுடன் இலங்கையின் பல பாகங்களிலும் கொண்டாடப்பட்டது. அப்போதைய அமைச்சர் எம். எச் முஹம்மது, டாக்டர் எம்.ஸிஎம். கலீல் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். மத்திய மாகாண ஹிஜ்ரா கமிட்டியின் தலைவராகவும் வக்பு சபையின் தலைவராகவும் அப்போது ஜனாதிபதி சட்டத்தரணி எஸ். எச். எம் மஹ்ரூப் நியமனம் பெற்றிருந்தார். அப்போது கொழும்பில் உலக இஸ்லாமிய மாநாடொன்று நடைபெற்றது. வெகு விமர்சையாக நடைபெற்ற இம் மா நாட்டில் முஸ்லிம் நாடுகளின் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். இம் மாநாட்டுக்கு விஜயம் செய்த எகிப்திய தூதுக் குழுவின் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்கள் ஒறாபி பாஷh வாழ்ந்த இல்லத்தைப் பார்வையிட விரும்பினர். அமைச்சர் எம். எச். முஹம்மத் அந்தப் பொறுப்பை எஸ். எச். எம். மஹ்ருப்பிடம் ஒப்படைத்தார். எகிப்திய தூதுக் குழுவினர் அவ்விடத்தைப் பார்வையிட சகல ஏற்பாடுகளையும் செய்ததோடு அக்குழுவினதும் எம். எச். முஹம்மத்தினதும் வேண்டுகோளுக்கேற்ப அந்த இல்லத்தை  எகிப்திய அரசுடமையாக்குவதற்கான காணி உறுதி என்பவற்றைத் தேடும் பணியிலும் அதற்கான ஆவணங்களைத் தயாரிப்பதற்கான பணியிலும் ஜனாதிபதி சட்டத்தரணி எஸ் எச். எம் மஹ்ருப் முன்னின்று உழைத்தார்.

இதன் காரணமாக 1983 ஆம் ஆண்டு அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர் ஜயவர்தனவின் காலத்தில் இடம்  உரித்துடையவருக்கு 30 இலட்சம் ரூபா நிதியினை  எகிப்திய தூதரகம் வழங்கி சொத்துடமையாக்கிக் கொண்டது. ஒறாபி பாஷா வாழ்நத காலத்தில் இந்தப் பிரமாண்டமான கட்டிடமும் நிலப்பரப்பும் அக்காலத்தில் கண்டியில் நிலச்சுவாந்தரமாக வாழ்ந்த டொன். எச் விஜயநாயக்க என்பவருக்கு உரித்தாக இருந்த பின்னர் அவரது குடும்பத்தில் இதில் வாழ்ந்து வந்தனர். எனினும் பிற்பாலத்தில் இரத்தினபுரியைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் இரத்தினக்கல் வியாபாரியும் முன்னால் அதிபர் மர்ஹும் ஓ. எல். எ. அசீஸ் என்பவரும் இதில் வாழ்ந்து வந்துள்ளனர். இறுதியாக இது ஒரு சுற்றுலாப் பயணிகள் தங்கும் இடமா இருந்தது.

1983 ஆம் ஆண்டு எகிப்திய அரசினால் நூதனசாலைக்கான திருத்தவேலைகள் ஆரம்பமாகினஃ எனினும் அதன் வெளித் தோற்றம் 19 ஆம் நூற்றாண்டின் கட்டிடக்கலைத் தோற்றங்களில் எவ்வித மாற்றங்களுமின்றி உடபுறமும் மேல் மாடியும் நூதன சாலைக்கேற்ற விதத்தில் திருத்தியமைக்கப்பட்டது. அதனால் இப்போது அமைந்துள்ள இயற்கைச் சூழலில் 19 நூற்றாணடுக் கலை அம்சங்களுடன் கட்டட நிர்மாணக் கலைஞர்களான எம். இஸட். ஆரிப், அப்ஸல் மரைக்கார் ஆகியோரால் திருத்தங்களுடன் நிர்மாணிக்கப்பட்டது. எனினும் எகிப்து நூதனசாலையைச் சேர்ந்த காட்சிசாலை பணிப்பாளர்கள் பலர் ஒறாபி பாஷாவை எகிப்தையும் மத்தியமாகக் கொண்ட காட்சிப் பொருள்கள் வரைபடங்கள், சித்திரங்கள் உருவங்கள் என்பவற்றை எகிப்திலிருந்து எடுத்து வந்து ஒரு நூதனசாலைக்குப் பொருத்தனமான விதத்தில் வடிவமைத்துள்ளனர்.

இந்த நூதனசாலை 1983 நவம்பர் மாதம் 13 ம் திகதி இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவினால் திறந்து வைக்கப்பட்டது. இத்திறப்பு விழாவுக்கு எகிப்திய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் பிரதிநிதியாக அந்நாட்டு கலாசார அமைச்சர் முஹம்மத் அப்துல் ஹமீத் ரத்வான இலங்கையின் எகிப்திய தூதுவராலய அதிகாரிகள், இலங்கை முஸ்லிம் அமைச்சர்கள் முஸ்லிம் அமைப்புக்களின் தலைவர்கள் உட்பட  பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். எகிப்திய தூதுரகத்தின் பரிபாலனத்தின் கீழ் இயங்கும் இந்த நூதனசாலையின் முதலாவது பணிப்பாளர் தற்போதைய கிழக்குமாகாண சபை உறுப்பினர் அஷஷய்க் எஸ் எல் எம். ஹஸன் நியமிக்கப்பட்டார். அவர் பதவி விலகியதைத் தொடர்ந்து 1987 ஜனவரி முதல் டிசம்பர் 2006 ஆம் ஆண்டு வரை ஓய்வு பெற்ற கல்வி அதிகாரியும் பிரபல எழுத்தாளருமான கலாபூசணம் எஸ் எம். எ. ஹசன் நியமனம் பெற்றிருந்தார். இவர் ஓய்வு பெற்றதன் பின் நான் தற்போது அன்றிலிருந்து இன்றுவரை பணிப்பாளராக இருந்து சேவையாற்றி வருகிறேன்.

இந்த நூதனசாலையின் பயன்பாடு பற்றிக் குறிப்பிடுவீர்களா?

இன்று இலங்கையிலுள்ள நூதனசாலைகளுடன் ஒப்பிடும் போது இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுடனும் இலங்கை எகிப்திய மக்களுடைய நல்லுறவுடனும் தொடர்புப் பாலமாக இந்த நூதனசாலை விளங்கக் கூடியதாக உள்ளன. கண்டிக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டுப் பிரமுகர்கள் குறிப்பாக அறபு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் உல்லாசப் பயணிகளும் இங்கு விஜயம் செய்து ஒறாபி பாஷhவின் வரலாற்றை ஆவலோடு அறிய முற்படுகின்றனர். இலங்கைப் பாடப் புத்தகத்தில் ஒறாபி பாஷhவைப் பற்றிய பாடமொன்று இடம்பெற்றுள்ளதால் பாடசாலை மாணவர்கள் தமது மாணவர்கள் தம் கல்விச் சுற்றுலாப் பயணங்களின் போது இங்கு விஜயம் செய்கின்றனர்.

இருபதாம் நுற்றாண்டில் அறபு நாடுகளில் ஏற்பட்ட பாரிய அரசியல் மாற்றங்களுக்கும் பல முஸ்லிம் நாடுகளின் தோற்றத்திற்கும் ஒறாபி பாஷhவின் அரசியல் புரட்சியும் ஒரு முக்கிய காரணமாய் அமைவதாலும் மத்திய கிழக்கு அரசியல் வரலாற்றில் அது முக்கியத்துவம் பெற்றிருப்பதாலும் அறபு நாட்டு  வரலாற்று ஆய்வாளர்களும் ஊடகவியலாளர்களும் இங்கு அடிக்கடி வருவதுண்டு.

இவ்வாறு வருவோர் ஒறாபி பாஷாவின் இலங்கை வாழ்க்கை பற்றிய செயதிகளைச் சேகரித்து ஒலி, ஒளி நாடாக்களைப் பதிவு செய்தும் அறபு நாடுகளில் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சி வானொலிகளிலும் இந்த நூதனசாலை பற்றி தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. மலேசியா, மாலைதீவு, குவைத் அமைச்சர்கள், கட்டார் இளவரசரின் விஜயம், சவூதி மஸுரா கவுன்சில் சபாநாயகர், அமைச்சர்களது விஜயத்தின் போது இந்த நூதனசாலை குறித்த விடயங்கள் அந்நாட்டு தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்ட்டுள்ளன.

ஒறாபி பாஷா நிலையத்தின் சமூக நலச் செயற்பாடுகள் குறித்து குறிப்பிடுவீர்களா?

1988 ஆம் ஆண்டு ஒறாபி பாஷாகலாசார நிலையம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டு பல்வேறு சமூக நலப்பணிகளில் ஆற்றி வந்த அமைப்பு தற்போது  2007 ஆம் ஆண்டு ஒறாபி பாஷா பௌண்டேசன் என்ற அமைப்பின் பெயரில் உருவாக்கப்பட்டு இன்று வரை தொடர்ச்சியாக இயங்கி வருகிறது. இரண்டு தசாப்த காலங்களுக்கு மேலாகப் பங்காற்றி வருகின்றன. குறிப்பா படித்துத் தொழிலின்றி இருக்கும் முஸ்லிம் பெண்களுக்கான தொழிற்பயிற்சி வழங்கும் நிலையமாகவும் கல்வி கலை இலக்கிய சமூக நிலையமாகவும் இவ்வியக்கம் இயங்கி வருகிறது. இப்பயிற்சியை முடித்துக் கொண்ட அநேகமானவர்கள் பல்வேறு தொழில் துறைகளில் முன்னேறியுள்ளனர். பலர் அரசாங்கத் துறைகளில் சேவையாற்றுகின்றனர். இன்னும் பலர் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வாழ்க்கை நடத்துகின்றனர். இன்னும் பலர் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்றுள்ளனர். இவ்வாறு தொடர்ந்து செயற்பாட்டுடன் இயங்கும் இவ்வியக்கம் சமூக . கலாசார, இலக்கியத் துறை சார் வளர்ச்சியில் காத்திரமான பங்காற்றி வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டு  தோறும் சமய விழாக்கள், பாலர் பாடசாலை மாணவர்களதும் பயிற்சி பெறும் மாணவர்களினதும் கலை விழாக்கள், பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகளுடன் சரித்தி முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு விஜயம் செய்தல் போன்றனவும் இடம் பெறுகின்றன. அறிஞர்கள்  இங்கு வரவழைக்கப்பட்டு விசேட சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன. இதற்காக உள்நாட்டு வெளிநாட்டு அறிஞர்கள் அழைக்கப்படுவார்கள். ஒறாபி பாஷா நினைவு தினம் உட்பட சித்திலெப்பை, பேராசிரியர் உவைஷ, டாக்டர் எம். சீ. கலீல், செர் ராசிக் பரீத், கவிமணி எம். சி. எம். சுபைர் உட்பட பல பெரியார்களின் நினைவு தினங்களும் இடம் பெற்றுள்ளன. சமய தினத்தை முன்னிட்டு போட்டிகளும் ஏனைய விழாக்களும் நடைபெறும். இதற்கு பெருந்தொகையான பொது மக்களும் ஊடவியலாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள்.

கணனி பயிற்சி அறிமுகப்படுத்தப்படுதற்கு முன்னர் இங்கு தட்டச்சுப் பயிற்சி நெறி கற்பிக்கப்பட்டது இதன் மூலம் அரசாங்கம் மற்றும் தனியார் துறைகளில் பெரும்பாலனவர்கள் வேலை வாய்பினைப் பெற்று சேவையாற்றுகின்றனர். இந்த துறை வீழ்ச்சி கண்டதோடு தற்போது கணனிப் பயிற்சி நெறி வழங்கப்பட்டு வருகிறது.

இங்கு பயிலும் மாணவர்களுக்காகவும் வெளியார் பயன்பாட்டுக்காகவும் ஒரு சிறிய நூல் நிலையம் இயங்கி வருகின்றது. ஆங்கிலக் கலைக் களஞ்சிய நூல்கள் தமிழ் சிங்கள நூல்கள் இஸ்லாம் மார்க்க நூல்கள். கலை இலக்கிய நூல்கள், சிறுவர்கள் நூல்கள் என்பன இந்நூல் நிலையத்தில் உள்ளன. இதன் மூலம் இங்கு கல்வி பயிலும் கூடுதலான பெண் மாணவிகளும் வெளியாரும் பயன்பெறுகின்றனர்.

கர்ப்பிணி பெண்களுக்கான இலவச வைத்திய வசதி நடத்தபட்டுள்ளன. இதனால் பல நூற்றுக் கணக்கான பெண்கள் பயனடைந்துள்ளனர்.

இவற்றிற்கும் மேலாக பல்கலைக்கழம் தெரிவு செய்யப்பட்ட மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு புலமைப் பரிசில் நிதியுதவி வழங்கபட்டு வருகிறது அத்துடன் கல்வித் துறையில் அதி உயர் சாhதனை பெறும் மாணவர்களைப் பாராட்டி கௌவிக்கும் நிகழ்வுகளுடன் அவர்களின் தொடர் கல்வி முயற்சிகளுக்கு ஊக்குவிப்பு ஒரு தொகை நிதியுதவியும் உடன் அவர்களுக்கு வழங்கபடுகிறது. இன்னும் இவைகளைப் போல் கலை கலாசார நிகழ்வுகள் பல நடத்தப்படுகின்றன என்று ஏராளமான பணிகளை  செய்து வருகிறோம் என்று என்னால்  பட்டியல் போட்டுக் குறிப்பிட முடியும்.

முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் ஒறாபி பாஷாவும் அறிஞர் சித்திலெப்பையும் இணைந்து ஆற்றிய பங்களிப்புப் பற்றிக் கூறுவீர்களா?

ஆம். அறிஞர் சித்திலெப்பையின் வழிகாட்டலுக்கு ஒறாபி பாஷா ஒரு உந்து சக்தியாக விளங்கினார். சகல வைபவங்களிலும் வாப்பச்சிமரைக்கார், சித்திலெப்பை, கரிம்ஜி ஜெபர்ஜி ஆகியோரே முக்கிய பங்கு கொண்டனர். சித்திலெப்பை ஒறாபி பாஷாவின் கூட்டு முயற்சியினால் இலங்கை முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் ஒரு புதிய திருப்பம் ஆரம்பமாயிற்று.

1884 இல் அல்மத்ரசதுல் ஹமீதியா என்ற முஸ்லிம் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு அண்மையில் அமைந்துள்ள இப்பாடசாலை இன்று ஹமீத் அல் ஹுஸைனி என்ற பெயரில் ஒரு பிரபல கல்லூயாக இயங்கி வருகின்றது. இதனை ஆரம்பிப்பதற்காக எடுக்கப்பட்ட காணியைப் பெறுவதற்காக சித்திலெப்பை அன்றைய பெறுமதிப்படி மூவாயிரம் ரூபா வழங்கியதாகவும், ஆசிரிய சம்ளத்துக்காக ஒறாபி பாஷh நூறு ரூபா வீதம் தனது மாதாந்த சம்ளத்திலிருந்து வழங்கியதாகவும் 1984 ல் வெளியான ஹமீத் அல் ஹுஸைனி வித்தியாலய நூற்றாண்டு மலரில் குறிப்பிடப்பட்டுள்ளது.  கொழும்பு மருதானை பெரிய பள்ளிவாசலுக்கு அருகில் வாப்பிச்சி மரைக்காரின் உதவியைப் பெற்று ' மத்ரஸதுல் ஸாஹிரரா' என்ற பெயரில் ஒறாபி பாஷhவும், சித்திலெப்பையும் வாப்பிச்சி மரைக்காரும் சேர்ந்து ஆரம்பித்து வவைத்தனர்.

' ஸாஹிரா' என்ற பெயரைச் சூட்டியது ஓறாபிபாஷாவாகும். இருபதாம் நூற்றாண்டில் முஸ்லிம்களின் கல்வித் துறையில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திய இக் கல்லூரியின் பெயரால் இரண்டாம்  உலகமகாயுத்தத்தின் பின்னர் இலங்கையின் பல பாகங்களிலும் ஸாஹிராக் கல்லூரிகள் உள்ளதை நாம் காணலாம். இதில் பயின்றவர்கள் பிற்காலத்தில் முஸ்லிம் கல்வி வளர்ச்சியில் முன்னோடியாக இருப்பதையும் காண முடியும். இன்றைய சித்திலெப்பை மகாவித்தியாலயம், அக்குரணை , மாவனல்லை, கம்பளை , கல்முனை மாத்தளை, கட்டுகஸ் தோட்டை உடுநுவர போன்ற மேலும் பல கிராமங்களில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளும் பிற்காலத்தில் அரசாங்கப் பாடசாலைகளாக மாறி முஸ்லிம்களின் கல்வி அபிவிருத்திக்கு வழிகோலியுள்ளதை அவதானிக்கலாம்.

சுயமொழிக் கல்வியோடு ஆங்கிலமும் கற்கும் அதேநேரத்தில் முஸ்லிம்கள் அரபு மொழியும் கற்க வேண்டுமென்று ஒறாபி பாஷா முன்வைத்த ஆலோசனையின் பெயரில் பிற்காலத்தில் முஸ்லிம் பாடசாலைகளில் அறபு ஆசிரியர்கள் நியமனம் பெற வழிகாட்டியதோடு, அதனால் படிப்படியாக சர்வகலாசாலை அறபு மொழி பீடம் உருவானதையும் காணமுடிகிறது. இவர்களது காலம் இலங்கை முஸ்லிம்களின் கல்வி .கலை, கலாசார சமூக வாழ்ககை முறையில் ஒரு பாரிய மாற்றத்திற்கு வித்திடட ஒரு காலமெனலாம்.

கண்டி நகரில ஒரு அறபுக் கல்லூரி ஒன்று இல்லை என்ற குறையை நிவர்த்தி செய்து பெருமை உங்களுக்கு உண்டு. அதன் ஸ்தாபர் தலைவர் என்ற வகையில்  அது வளர்ச்சி பற்றிக் குறிப்பிடுவீர்களா?

கண்டி தாருல் உலூம் அல் புர்க்கனிய்யாவின்  தோற்றம் கண்டி, கட்டுக்கலை வை. எம். எம். ஏ யின்  கீழ் கட்டுக்கலை ஜும்ஆபள்ளி ஜமாஅத் மற்றும் தப்லீக் ஜமாஅத்தின் வரலாற்றுடன் இரண்டறக் கலந்துள்ளது. கண்டி நகரில் வாழும் முஸ்லிம் சிறார்களின் சமய அறிவை புகட்டக் கூடிய ஆரம்ப கல்வி நடவடிக்கைகளுக்கு ஒரு அமைப்பு இல்லாமை பெரும் குறைபாடாக விளங்கின. அது 1983 ஆம் ஆண்டு அஹதிய்யாவை ஆரம்பித்து வைத்தோம். அத்துடன் தேவையைக் கருத்திற் கொண்டு 1989.10.14 திகதி  அல் குல்லியத்துல் ர்க்கானிய்யாஹ் அறபுக் கல்லூரி எனும் நாமம் கொண்டு  கண்டி கட்டுக்கலை ஜும்ஆ  மஸ்ஜித் காணியில் உள்ள வை. எம். எம். ஏ. கட்டிடத்தில் பகுதி நேர அரபுக் கலாசாலை ஆரம்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் இந்த பிரதேச மக்களின் சமயக் கல்வி மற்றும் தொழில் நுட்ப அறிவு மேம்பாட்;டுக்கு சிறந்த பணிகள் ஆற்றின. இதன் செயற்திறனைக் கண்டு தேசிய வை. எம். எம். ஏ. நடத்திய ஆய்வின் படி நாட்டின்  சிறந்த வை. எம். எம். ஏ. கிiளாயக இது தெரிவு செய்யப்பட்டது. அவ்வாறே வை. எம். எம். ஏ. நடத்திய சிறந்த தலைவருக்கான தெரிவில் தான் தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் 2004 ஆம் ஆண்டு அகில இலங்ஙகை வை. எம். எம். ஏ. பேரவையின் தலைவராக பதவி வகித்தோடு அப்போது ஏற்பட்ட சுனாமி அனர்த்தின் போது இந்த அமைப்பினூடாக பாரிய பங்களிப்பை வழங்கிய நீண்ட அனுபவம் எனக்கு உண்டு.

இக்கல்லூயில்  இதுவரை நூற்குக்கு மேற்பட்ட மௌலவி மார்கள் பட்டம்பெற்றுள்ளார்கள் 120 க்கும் மேற்பட்ட ஹாபிழ்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். .இந்தக கல்லூரி தற்போது அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் அஷஷய்க் ரிஸ்வி முப்தி வழிகாட்டலின் கீழ் 11 உறுப்பினர்களைக் கொண்ட ஆளூநர் சபையின் என்னைத் தலைவராகக் கொண்டு சிறந்த முறையில் நடத்தபட்டு வருகிறது என்று ஈண்டு கூறலாம்.









No comments

Powered by Blogger.